இரு விதமான நிறங்களில் ஜப்பானில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய சுசுகி கதனா...

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய கதனா பைக் மாடலை இரு நிறங்களில் ஜப்பானில் காட்சிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

இரு விதமான நிறங்களில் ஜப்பானில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய சுசுகி கதனா...

உலகின் வல்லரசு நாடுகள் உள்பட பெரும்பான்மையான அனைத்து நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த இரு மாதங்களுக்கு உலகின் பல்வேறு நகரங்களில் நடைபெற இருந்த பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இரு விதமான நிறங்களில் ஜப்பானில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய சுசுகி கதனா...

இதற்கு ஆட்டோமொபைல் துறை மட்டும் என்ன விதிவிலக்கா. ஆட்டோ நிறுவனங்கள் தங்களது புதிய மாடல்களை இன்னும் சில வாரங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த கண்காட்சிகள் ஒவ்வொன்றாக கேன்சலாகி வருகின்றன. இந்த வகையில் ஜப்பானில் நடைபெற இருந்த டோக்கியோ மற்றும் ஒசாகா மோட்டார்சைக்கிள் கண்காட்சிகளும் திட்டமிட்டப்படி நடைபெறாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.

இரு விதமான நிறங்களில் ஜப்பானில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய சுசுகி கதனா...

இதனால் ஜப்பான் நாட்டை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தாங்களாகவே சொந்தமாக தங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்த மோட்டார் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதன்படி சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கண்காட்சியில் இந்நிறுவனத்தில் இருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ள கதனா மோட்டார்சைக்கிள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இரு விதமான நிறங்களில் ஜப்பானில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய சுசுகி கதனா...

இரு விதமான நிறத்தேர்வுகளில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் இந்த பைக்கின் சிவப்பு நிற பெயிண்ட் அமைப்பில் இந்நிறத்திற்கு ஏற்ற கோல்டு நிறம் பைக்கின் ஹேண்டில்பார் மற்றும் சக்கரங்களின் ஃபோர்க்குகளில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு நிறத்தேர்வான மேட் ப்ளாக் தான் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் கதனா பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

இரு விதமான நிறங்களில் ஜப்பானில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய சுசுகி கதனா...

இந்த பெயிண்ட் அமைப்பில் அதிகளவில் இன் லைன்களை எதிர்பார்க்கலாம். அதேபோல் இந்த இரண்டாவது நிறத்தேர்விலும் ஹேண்டில்பார் மற்றும் சக்கரங்களின் ஃபோர்க்குகள் கோல்டு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய கதனா பைக்கில் கூடுதலாக கதனா என்கிற லோகோவும் தங்க நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இரு விதமான நிறங்களில் ஜப்பானில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய சுசுகி கதனா...

ஆனால் இதுவரை இந்த இரு பெயிண்ட் அமைப்புகளையும் புதிய கதனா பைக்கில் வழங்கவுள்ளதாக சுசுகி எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த புதிய பைக்கிற்கு இந்�%A

இரு விதமான நிறங்களில் ஜப்பானில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய சுசுகி கதனா...

சுசுகி நிறுவனம் புதிய கதனா பைக்கில் 999சிசி என்ஜினை பொருத்தியுள்ளது. இதே என்ஜின் அமைப்பு தான் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000எஃப் பைக்கிலும் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த 999சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-ல் 150 பிஎச்பி பவரையும், 9,500 ஆர்பிஎம்-ல் 108 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கும்.

இரு விதமான நிறங்களில் ஜப்பானில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய சுசுகி கதனா...

இந்த பைக்கில் மற்ற முக்கிய தொழிற்நுட்பங்களாக ஸ்லிப்பர்-க்ளட்ச், மூன்று நிலைகளில் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் அமைப்பாக முன்புறத்தில் முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய 43மிமீ யூஎஸ்டி ஃபோர்க்கும், பின்புறத்தில் லிங்க்-டைப் மோனோஷாக் யூனிட்டுடன் வழங்கப்பட்டுள்ளன.

MOST READ:21 நாள் தேசிய ஊரடங்கு! பயன்பாடின்றி நிற்கும் டூ-வீலர்கள்! வைரஸ் தொற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

இரு விதமான நிறங்களில் ஜப்பானில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய சுசுகி கதனா...

வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள கதனா பைக் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட்டாக இல்லை. இதனால் இந்த பைக் தற்சமயம் இந்திய சந்தையில் விற்பனையில் இல்லை. புதிய கதனா பைக் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு அடுத்த ஆண்டில் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Suzuki Katana showcased with two new colour schemes
Story first published: Wednesday, April 1, 2020, 18:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X