புதிய அசத்தலான நிறங்களில் வெளிவந்தது 2020 சுசுகி எஸ்வி 650...

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2020 எஸ்வி650 பைக்கை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. எந்த கூடுதல் டிசைன் பாகங்களும் இன்றி அளவான எடையில் உள்ள சுசுகியின் இந்த புதிய 650சிசி மோட்டார்சைக்கிள் முதலில் ஜப்பானில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

புதிய அசத்தலான நிறங்களில் வெளிவந்தது 2020 சுசுகி எஸ்வி 650...

அதன்பின்பு தான் மற்ற நாட்டு சந்தைகளுக்கு இந்த பைக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த 2020 பைக்கிற்கு மிஸ்டிக் சில்வர் மெட்டாலிக், மேட் ப்ளாக் மெட்டாலிக் மற்றும் பளபளப்பான ஸ்பார்கிள் கருப்பு உள்ளிட்ட புதிய பெயிண்ட் அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய அசத்தலான நிறங்களில் வெளிவந்தது 2020 சுசுகி எஸ்வி 650...

இதில் முதல் இரு நிறத்தேர்வுகளில் மோட்டார்சைக்கிளின் ஃப்ரேமானது பேஸ் நிறத்தில் இருந்து வேறுப்பட்ட நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பளபளப்பான ஸ்பார்கிள் கருப்பு பெயிண்ட் அமைப்பில் வெளிப்புற பாகங்கள் மற்றும் ஃப்ரேம்கள் என பைக்கின் மொத்தத்திற்கும் கருப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அசத்தலான நிறங்களில் வெளிவந்தது 2020 சுசுகி எஸ்வி 650...

இந்த 2020 எஸ்வி650 பைக்கில் வழக்கமான அதே 645சிசி வி-ட்வின் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் உள்ள சுசுகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி ஏபிஎஸ் பைக்கிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய அசத்தலான நிறங்களில் வெளிவந்தது 2020 சுசுகி எஸ்வி 650...

இந்த வி-ட்வின் என்ஜின் எஸ்வி650 பைக்கில் அதிகப்பட்சமாக 76 பிஎச்பி மற்றும் 64 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. அதுவே வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி ஏபிஎஸ் பைக்கில் அதனை விட சற்று குறைவாக 71 பிஎச்பி மற்றும் 62 என்எம் டார்க் திறனை பைக்க்கிற்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய அசத்தலான நிறங்களில் வெளிவந்தது 2020 சுசுகி எஸ்வி 650...

என்ஜின் அமைப்பை போன்று ட்ரான்ஸ்மிஷன் அமைப்பிலும் எந்த மாற்றமும் இல்லை. அதே 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் தான் பைக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் வி-ஸ்ட்ரோம் பைக் மாடல் கொண்டுள்ள எலக்ட்ரானிக் சூட்களை இந்த சுசுகி எஸ்வி650 பைக் பெறவில்லை.

புதிய அசத்தலான நிறங்களில் வெளிவந்தது 2020 சுசுகி எஸ்வி 650...

இதனால் சுசுகி நிறுவனத்தின் இந்த 2020 பைக் ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் மற்றும் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் போன்ற தொழிற்நுட்பங்களை தவறவிட்டுள்ளது. இவற்றிற்கு பதிலாக புதிய எஸ்வி650 பைக் ட்யூல்-சேனல் ஏபிஎஸ் மற்றும் குறைவான வேகத்தில் இயங்கும்போது பைக் நின்றுவிடுவதை தவிர்பதற்காக லோ ஆர்பிஎம் அசிஸ்ட் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

புதிய அசத்தலான நிறங்களில் வெளிவந்தது 2020 சுசுகி எஸ்வி 650...

புதிய எஸ்வி650 பைக்கை இந்தியாவில் தற்போதைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இல்லை. எனவே இந்திய சந்தைக்கு இந்த பைக் 2021ஆம் ஆண்டின் இறுதியில் தான் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த 650சிசி பைக்கின் விலை ரூ.7 லட்சம் அளவில் இந்தியாவில் விலையை பெறும் எனவும் தெரிகிறது.

புதிய அசத்தலான நிறங்களில் வெளிவந்தது 2020 சுசுகி எஸ்வி 650...

சுசுகி நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் தற்சமயம் ரூ.7.47 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்கானது பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படுமா என்பது சரியாக தெரியவில்லை. ஒருவேளை இந்த பைக் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்படவில்லை என்றால் இதற்கு மாற்றாக இந்த எஸ்வி650 பைக் கொண்டுவரப்படலாம்.

Most Read Articles
English summary
2020 Suzuki SV 650 Unveiled For Global Markets
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X