பிஎஸ்6 தர எஞ்ஜினில் விற்பனைக்கு களமிறங்கிய சுசுகி ஜிக்ஸெர்.. விலையுயர்வு கூடுதல் சர்பிரைஸ்..!

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் பிஎஸ்6 தர எஞ்ஜினுடைய ஜிக்ஸெர் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமும் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிஎஸ்6 தர எஞ்ஜினில் விற்பனைக்கு களமிறங்கிய சுசுகி ஜிக்ஸெர்... எவ்வளவு விலையுயர்வு செய்யப்படிருக்கு தெரியுமா..?

இந்தியாவில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரம் கொண்ட வாகனங்களின் அறிமுகம் அண்மைக் காலங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சுற்றுப்புறச்சூழல் மாசடைவதைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைத்து அரசு, இதற்காக பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில், அறிமுகம் செய்யப்பட்டதுதான் பிஎஸ்6 தரம். இந்த மாசு உமிழ்வு தரம் வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்குள்ளாக இருக்கின்றது.

பிஎஸ்6 தர எஞ்ஜினில் விற்பனைக்கு களமிறங்கிய சுசுகி ஜிக்ஸெர்... எவ்வளவு விலையுயர்வு செய்யப்படிருக்கு தெரியுமா..?

ஆகையால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் பிரபல தயாரிப்புகளை பிஎஸ்6 தரத்திற்கு இணையாக அப்கிரேட் செய்து வருகின்றன. தொடர்ந்து, அதனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியும் வருகின்றன.

பிஎஸ்6 தர எஞ்ஜினில் விற்பனைக்கு களமிறங்கிய சுசுகி ஜிக்ஸெர்... எவ்வளவு விலையுயர்வு செய்யப்படிருக்கு தெரியுமா..?

அந்தவகையில், புதிய மாசு உமிழ்வு தரத்திற்கு ஏதுவாக அப்கிரேட் செய்யப்பட்ட சுசுகி ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் ஆகிய இரு மாடல் பைக்குகளையும் சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

பிஎஸ்6 தர எஞ்ஜினில் விற்பனைக்கு களமிறங்கிய சுசுகி ஜிக்ஸெர்... எவ்வளவு விலையுயர்வு செய்யப்படிருக்கு தெரியுமா..?

இந்த புதிய தரத்திலான மோட்டார்சைக்கிள்களை கடந்த மாதம் நடைபெற்ற 2020 வாகன கண்காட்சியில் அந்நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த அப்டேட் செய்யப்பட்ட பைக்குகள் தற்போது லேசான விலையேற்றத்துடன் இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ளது.

இதற்கு புதிய மாசு உமிழ்வு தரத்திற்கேற்ப அதன் எஞ்ஜின்கள் ட்யூன் அப் செய்யப்பட்டதே இந்த விலையுயர்விற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது.

பிஎஸ்6 தர எஞ்ஜினில் விற்பனைக்கு களமிறங்கிய சுசுகி ஜிக்ஸெர்... எவ்வளவு விலையுயர்வு செய்யப்படிருக்கு தெரியுமா..?

புதிய ஜிக்ஸெரின் வழக்கமான மாடலுக்கு ரூ. 1,11,871 என்ற விலையும், ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடலுக்கு ரூ. 1,22,900 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஸ்பெஷல் மாடலான ஜிக்ஸெர் எஸ்எஃப் மோட்டோஜிபி மாடலுக்கும் ரூ. 1,22,900 என்ற விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

பிஎஸ்6 தர எஞ்ஜினில் விற்பனைக்கு களமிறங்கிய சுசுகி ஜிக்ஸெர்... எவ்வளவு விலையுயர்வு செய்யப்படிருக்கு தெரியுமா..?

உருவத்தில் வெவ்வேறு வித்தியாசங்களைப் பெற்றிருந்தாலும், இந்த பைக்குகள் அனைத்தும் ஒரே திறன் கொண்ட எஞ்ஜின்களையேப் பெற்றிருக்கின்றன.

அந்தவகையில், இதில் அதிக திறனை வெளிப்படுத்தும் வகையில் 155சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, எஸ்ஓஎச்சி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பிஎஸ்6 தர எஞ்ஜினில் விற்பனைக்கு களமிறங்கிய சுசுகி ஜிக்ஸெர்... எவ்வளவு விலையுயர்வு செய்யப்படிருக்கு தெரியுமா..?

அது ப்யூவல் இன்ஜெக்ட் தொழில்நுட்பத்தைப் பெற்றிருக்கின்றது. இந்த தொழில்நுட்பம் அதிக மைலேஜிற்கு உதவும்.

இதற்கு பிஎஸ்6 தரமும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. இதனால், முந்தைய மாடல் ஜிக்ஸெர்களைக் காட்டிலும் தற்போதைய பிஎஸ்6 ஜிக்ஸெர் அதிக மைலேஜை வழங்கும் திறனைப் பெற்றிருக்கின்றது.

பிஎஸ்6 தர எஞ்ஜினில் விற்பனைக்கு களமிறங்கிய சுசுகி ஜிக்ஸெர்... எவ்வளவு விலையுயர்வு செய்யப்படிருக்கு தெரியுமா..?

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 13.6 பிஎஸ் பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 13.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது, 5 ஸ்பீடு கன்ட்ரோல் கொண்ட கியர்பாக்ஸைக் கொண்டிருக்கின்றது.

நாம் மேலே கூறியதைப் போன்று பழைய பிஎஸ்-4 ஜிக்ஸெர் பைக்குகளைக் காட்டிலும் புதிய ஜிக்ஸெர் (பிஎஸ்6) பைக்குகள் ரூ. 12 ஆயிரம் விலையுயர்வைப் பெற்றிருக்கின்றன.

பிஎஸ்6 தர எஞ்ஜினில் விற்பனைக்கு களமிறங்கிய சுசுகி ஜிக்ஸெர்... எவ்வளவு விலையுயர்வு செய்யப்படிருக்கு தெரியுமா..?

இந்த அதீத விலையுயர்விற்கு குறிப்பிட்ட அப்டேட்டுகளே காரணமாக இருக்கின்றது. அதில், மிக முக்கியமானதாக பிஎஸ்-6 தர உயர்வு இருக்கின்றது. அதேசமயம், இந்த மாற்றத்தைத் தவிர வெறெந்த மாற்றமும் பெரியளவில் இந்த பைக்குகளில் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால், முந்தைய ஜிக்ஸெரில் காணப்பட்ட அதே எல்இடி மின் விளக்குகள்தான் அதன் முன் மற்றும் பின் பக்கங்களில் காணப்படுகின்றது.

பிஎஸ்6 தர எஞ்ஜினில் விற்பனைக்கு களமிறங்கிய சுசுகி ஜிக்ஸெர்... எவ்வளவு விலையுயர்வு செய்யப்படிருக்கு தெரியுமா..?

தொடர்ந்து, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எக்சாஸ்ட்டில் ஸ்போர்ட்டி லுக் கொண்ட ட்யூவல் மஃப்ளர் உள்ளிட்டவையும் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த புதிய ஜிக்ஸெர் பைக் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக், மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் ட்ரிடோன் ப்ளூ ஆகிய நிறத்தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

பிஎஸ்6 தர எஞ்ஜினில் விற்பனைக்கு களமிறங்கிய சுசுகி ஜிக்ஸெர்... எவ்வளவு விலையுயர்வு செய்யப்படிருக்கு தெரியுமா..?

அதேசமயம், ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடல் பைக் மெட்டாலிக் ட்ரிடோன் ப்ளூ கலரில் மட்டுமே கிடைக்கின்றது. இதேபோன்று, ஜிக்ஸெர் மோட்டோஜிபி பைக்கும் மெட்டாலிக் ட்ரிடோன் நீளம் மற்றும் ஸ்பெஷல் ஸ்டிக்கர்கள் அலங்காரத்துடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்த ஸ்டிக்கர்கள் பைக்கிற்கு சற்று ஸ்போர்ட்டி லுக்கை கூடுதலாக வழங்கும் வகையில் உள்ளது.

Most Read Articles
English summary
Suzuki Launched BS6 Gixxer & Gixxer SF Bikes In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X