30 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தில் சுசுகி கதனா பைக்.. ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..

புதிய கதனா 1000 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் நடைபெற்று வரும் 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த புதிய 1000சிசி பைக் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

30 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தில் சுசுகி கதனா பைக்.. ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..

கதனா என்ற பெயர் சுசுகியின் 1980-90களில் விற்பனை செய்யப்பட்ட ஸ்போர்ட் டூரிங் மோட்டார்சைக்கில் ஒன்றிற்கு வழங்கப்பட்டு வந்தது. சுசுகியின் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000எஃப் பைக் மாடலின் தயாரிப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கில் 999சிசி இன்-லைன் 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

30 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தில் சுசுகி கதனா பைக்.. ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..

இந்த என்ஜின் பைக்கிற்கு அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-ல் 147 பிஎச்பி பவரையும், 9,500 ஆர்பிஎம்-ல் 105 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

30 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தில் சுசுகி கதனா பைக்.. ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..

ஜெர்மனியில் 2018ல் நடைபெற்ற இண்டர்மோட் கண்காட்சியில் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்டிருந்த சுசுகியின் இந்த கதனா 1000 பைக், அதே ஆண்டில் இத்தாலியில் நடைபெற்ற ஐக்மா 2018 கண்காட்சியில் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

30 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தில் சுசுகி கதனா பைக்.. ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..

என்ஜின் மட்டுமின்றி இந்த பைக், ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000எஃப் மாடலில் இருந்து ட்வின்-ஸ்பார் அலுமினியம் ப்ரேம் போன்ற மற்ற சில முக்கியமான அடிப்படை கட்டமைப்பையும் பெற்றுள்ளது. இத்தகைய டூரிங் தீம்-ஐ கொண்ட பைக்கை உருவாக்கும் பணியானது மற்றவற்றை தயாரிக்கும் முறையில் இருந்து சிறிது வித்தியாசப்படுகிறது.

30 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தில் சுசுகி கதனா பைக்.. ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..

இருப்பினும் இந்த பைக்கில் சவுகரியமான ரைடிங்கிற்கு தேவையான அனைத்தையும் எதிர்பார்க்கலாம். பழைய கதனா மாடலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அதன் ஹெட்லைட் அமைப்பு எல்இடி தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு இந்த பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

30 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தில் சுசுகி கதனா பைக்.. ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..

மற்ற உடற்பாகங்கள் அனைத்தும் நியோ-ரெட்ரோ நிறத்தில் முற்றிலும் மாடர்னாக உள்ளன. வண்ண நிறங்களில் டிஎஃப்டி திரையை கொண்டுள்ள இந்த புதிய 1000சிசி பைக்கில் சஸ்பென்ஷன் பணியை முன்புறத்தில் முழுவதும்-அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கேஒய்பி 43 மிமீ யுஎஸ்டி ஃபோர்க்கும், பின்புறத்தில் லிங்க்-டைப் மோனோஷாக்கும் கவனிக்கின்றன.

30 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தில் சுசுகி கதனா பைக்.. ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..

ப்ரேக்கிங்கிற்கு ரேடிகல் காலிப்பர்களுடன் உள்ள ப்ரெம்போ மற்றும் ஏபிஎஸ் உள்ளது. இவற்றுடன் முழுவதும் அணைத்து வைக்கக்கூடிய மூன்று நிலைகளை கொண்ட ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை எலக்ட்ரானிக் பேக்கேஜாக இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

30 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தில் சுசுகி கதனா பைக்.. ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..

பைக்கின் பக்கவாட்டுக்களில் பொருத்தப்பட்டுள்ள கூர்மையான கூடுதல் ப்ரேம்களால் இந்த பைக்கின் எடை மிக அதிகமாக உள்ளது. ஆனால் இவை தான் கதனா 1000 பைக்கின் முக்கிய டிசைன் அமைப்புகளாக உள்ளன. சுசுகி கதனா பைக்கின் கெர்ப் எடை 215 கிலோவாக உள்ளது.

30 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தில் சுசுகி கதனா பைக்.. ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..

முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் மட்டுமில்லாமல், சிகேடி முறையில் இந்தியாவில் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ள இந்த 1000சிசி பைக்கின் விலையை போட்டி மாடல்களுடன் ஒத்து எதிர்பார்க்கலாம்.

30 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தில் சுசுகி கதனா பைக்.. ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..

2020 ஆட்டோ எக்ஸ்போவில் சுசுகி கதனா 1000 மாடல் வாடிக்கையாளர்கள் பலரையும் வசீகரித்து வருகிறது. இந்த பைக்கிற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து விருப்பங்கள் அதிகமாக வந்தால் இந்த பைக்கை இந்த வருட இறுதிக்குள் சந்தையில் பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Suzuki Katana Unveiled At Auto Expo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X