Just In
- 1 hr ago
புல்லட் மீது ரொம்ப ஆசை! மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?
- 1 hr ago
201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்!! இந்திய சாலைகள் தாங்குமா?!
- 1 hr ago
இந்த மாநிலத்திற்குத்தான் டெஸ்லா கார் ஆலை 'ஜாக்பாட்'... பரபரப்பு தகவல்கள்!
- 3 hrs ago
இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்!
Don't Miss!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை!
- Finance
மின்னணு வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..!
- Sports
பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி
- News
கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 7 உறுதிமொழிகள்.. வெளியிட்டது மநீம!
- Movies
காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்!
- Lifestyle
ரொம்ப குண்டா இருக்கீங்களா? அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஷோரூம் கண்டிஷனில் சுசுகி சாமுராய்... இது எத்தனை ஆண்டுகள் பழைய பைக்குனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!
பல ஆண்டுகள் கழிந்தும் சுசுகி சாமுராய் பைக் ஒன்று தற்போதும் ஷோரூம் கண்டிஷனில் காட்சியளிக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சுசுகி சாமுராய் இந்த பெயரைக் கேட்ட உடன் பலரின் முகத்தில் வித்தியாசமான உணர்வைக் காண முடியும். குறிப்பாக, 70ஸ்-80ஸ் கிட்ஸ்களுக்கு இந்த பெயர் அவர்களின் பழைய கால ஞாபங்களை மீண்டும் நினைவிற்குக் கொண்டு வரலாம். அப்படியான பைக்கே இந்த சாமுராய்.

டிவிஎஸ்-சுசுகி தயாரிப்பில் இப்-பைக் 1994ம் ஆண்டு இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது. இந்த பைக்கையே இளைஞர்கள் சிலர் தற்போது ஷோரூம் கன்டிஷனிற்கு இணையாக புதுப்பித்துள்ளனர்.

மாடிஃபிகேஷன் செயலின் வாயிலாகவே புதிய பைக் எனும் பிம்பம் சுசுகி சாமுராய் பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றிய சுவாரஷ்ய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். சுசுகி சாமுராய் புத்துயிர் பெற்றிருப்பது பற்றிய வீடியோவை பிரசாந்த் வயலெட் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது.

தற்போது வெளியாகியிருக்கும் இந்த வீடியோவின் மூலமே பைக் பற்றிய தகவல் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. மேலும், வீடியோவைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் இந்த பைக் புத்துயிர் பெற்றதுதானா?, இல்லை ஷோரூம் மூலம் புதிதாக விற்பனைக்கு வந்த பைக்கா என்ற சந்தேகத்தை எழுப்பி வருகின்றது.

அந்தளவிற்கு சுசுகி சாமுராய் பக்காவாக புத்தம் புதிய தோற்றத்தில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த தோற்றத்திற்காக பைக்கின் பாகங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, அவை மீண்டும் வண்ணப்பூச்சு செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருக்கின்றன. நீண்ட நாட்கள் பைக் கைவிடப்பட்டிருந்ததால், பைக்கின் பல்வேறு பாகங்கள் துருவிற்கு இரையாகியிருந்தன.

அவற்றை உப்புக் காதிதம் மூலம் மீட்டெடுத்த பின்னரே புதிய வண்ண பூச்சு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, எஞ்ஜின் கவசம் மற்றும் வீல் போன்றவற்றிற்கு இரு விதமான நிறப் பூச்சுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மங்கிய சில்வர் மற்றும் சிவப்பு நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது பைக்கின் குறிப்பிட்ட பாகங்களை ஹைலைட் செய்து காட்ட உதவியாக இருக்கின்றது.

வண்ணபூச்சு வழங்கும் வேலை முடிந்த பின்னரே அனைத்து பாகங்களும் சேஸிஸுடன் மீண்டும் அசெம்பிள் செய்யப்பட்டு பைக் உருவாக்கப்பட்டது. குறிப்பிட்ட சில பாகங்கள் மட்டும் புதியனவாக மாற்றப்பட்டிருக்கின்றன. மோட்டார்சைக்கிளின் சங்கிலி, வீல், ஸ்விங் ஆர்ம் உள்ளிட்டவை புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன.

இதேபோன்று இருக்கை உறையும் மாற்றப்பட்டுள்ளது. சுசுகி சாமுராய் பைக் விற்பனைக்கு வந்தபோது எப்படி இருந்ததே, அதேபோன்றதொரு அமைப்பையே புதிய உறையும் பெற்றிருக்கின்றது. டயர் மற்றும் பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சிவப்பு நிற காய்ல் ஸ்பிரிங் கொண்ட சஸ்பென்ஷனும் புதிதாக மாற்றப்பட்டவையாகும்.

மேலும், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஹெட்லைட் உள்ளிட்டவையும் புதிதாக பொருத்தப்பட்டவை ஆகும். இதுபோன்ற மாற்றங்களால்தான் 1994 மாடல் சுசுகி சாமுராய் பைக்கை தற்போதும் ஷோரூம் கன்டிஷனில் காட்சியளிக்க வைக்கின்றது.

இந்த பைக்கின் எஞ்ஜின் மாற்றப்படாமல் அப்படியே பயன்படுத்தப்பட்டிருப்பது வீடியோவின் வாயிலாக தெரிகின்றது. ஆம், அந்த இளைஞர் பைக்கை கிக்-ஸ்டார்ட் மூலம் எஞ்ஜினை இயங்கச் செய்தபோது, 2-ஸ்ட்ரோக் வாகனத்திற்கு மட்டுமே உரித்தான சப்தத்தை அது வெளிப்படுத்தியது.
மேலும், நீல நிற புகையையும் புகைப்போக்கும் குழாய் வாயிலாக அது வெளிப்படுத்தியது. இதன்மூலம் தான் 2-ஸ்ட்ரோக் வண்டிதான் என்பதை சமுராய் ஆணித் தரமாக உறுதிப்படுத்தியது. புத்தம் புதுசாக காட்சியளிக்கும் இந்த பைக் 70ஸ்-80ஸ் கிட்ஸ்களை மட்டுமின்றி 2கே கிட்ஸ்களையும் கவரத் தொடங்கியுள்ளது.