அமெரிக்காவில் அறிமுகமானது சுஸுகியின் 2021 ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்!! இந்திய அறிமுகம் எப்போது?

சுஸுகியின் 2021 ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக் அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுஸுகி பைக்கை பற்றியும், இது இந்தியாவிற்கு வருகை தர வாய்ப்புள்ளதா என்பது உள்ளிட்ட தகவல்களையும் இந்த செய்தியில் பார்ப்போம்.

அமெரிக்காவில் அறிமுகமானது சுஸுகியின் 2021 ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்!! இந்திய அறிமுகம் எப்போது?

அமெரிக்க சந்தையில் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 மோட்டார்சைக்கிள் 8,899 அமெரிக்க டாலர்கள் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.6.53 லட்சமாகும்.

அமெரிக்காவில் அறிமுகமானது சுஸுகியின் 2021 ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்!! இந்திய அறிமுகம் எப்போது?

ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ்-அல்லாத என்ற இரு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள இந்த 750சிசி பைக்கில் 2021ஆம் ஆண்டிற்காக சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் நிறத்தேர்வுகளும் அடங்குகின்றன.

அமெரிக்காவில் அறிமுகமானது சுஸுகியின் 2021 ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்!! இந்திய அறிமுகம் எப்போது?

இந்த வகையில் 2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்கின் ஏபிஎஸ் வேரியண்ட் முத்தின் வெள்ளை மற்றும் சாம்பியன் மஞ்சள் எண்.2 என்ற நிறங்களிலும், ஏபிஎஸ்-அல்லாத வேரியண்ட் மெட்டாலிக் ஊர்ட் க்ரே எண்.3 மற்றும் பளபளப்பான ஸ்பார்கிள் கருப்பு நிறங்களிலும் அங்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அறிமுகமானது சுஸுகியின் 2021 ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்!! இந்திய அறிமுகம் எப்போது?

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விலை 2021 ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்கின் ஏபிஎஸ் வேரியண்ட்டின் விலையாகும். ஏபிஎஸ்-அல்லாத வேரியண்ட்டிற்கு சற்று குறைவாக ரூ.6.23 லட்சத்தில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அறிமுகமானது சுஸுகியின் 2021 ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்!! இந்திய அறிமுகம் எப்போது?

இந்த 2021 சுஸுகி பைக்கில் யூரோ-4க்கு இணக்கமான லிக்யூடு-கூல்டு, இன்-லைன் 4-சிலிண்டர் 749சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 112 பிஎச்பி மற்றும் 81 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அறிமுகமானது சுஸுகியின் 2021 ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்!! இந்திய அறிமுகம் எப்போது?

ட்யுல்-சேனல் ஏபிஎஸ் மற்றும் சுஸுகியின் 4-மோட் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் முழுவதுமாக ஸ்விட்ச் ஆஃப் செய்யக்கூடிய ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக்ஸ் தொகுப்புகளாகும். 2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்கின் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 பைக்கை ஒத்து காணப்படுகிறது.

அமெரிக்காவில் அறிமுகமானது சுஸுகியின் 2021 ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்!! இந்திய அறிமுகம் எப்போது?

பைக்கில் வழங்கப்பட்டுள்ள எல்சிடி திரையானது வேகமானி, டச்சோமீட்டர், ஓடோமீட்டர், இரட்டை பயண மீட்டர்கள், கியர் பொசிஷன், என்ஜினின் வெப்பநிலை, ட்ரைவிங் ரேஞ்ச், சராசரியாக செலவாகும் எரிபொருள் அளவு, ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் நேரம் உள்ளிட்டவற்றை காட்டும் விதத்தில் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அறிமுகமானது சுஸுகியின் 2021 ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்!! இந்திய அறிமுகம் எப்போது?

இவற்றை ஹேண்டில்பாரில் உள்ள ஸ்விட்ச்கியர் மூலமாக கண்ட்ரோல் செய்ய முடியும். சஸ்பென்ஷன் பணியை கவனிக்க முன் பக்கத்தில் கேஒய்பி-இன் தலைக்கீழான ஃபோர்க்குகள் தங்க நிறத்திலும், பின்பக்கத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக்-செட்அப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அறிமுகமானது சுஸுகியின் 2021 ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்!! இந்திய அறிமுகம் எப்போது?

ப்ரேக்கிற்கு முன் சக்கரத்தில் 2-பிஸ்டன் காலிபர் உடன் இரட்டை-டிஸ்க்கும், பின் சக்கரத்தில் சிங்கிள்-பிஸ்டன் உடன் சிங்கிள் டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளது. ஹேண்டில்பார் ஒற்றை-துண்டாக வழங்கப்பட்டுள்ளது. பிளவுப்பட்ட வடிவில் இருக்கை அமைப்பை பெற்றுள்ள இந்த பைக்கில் பெட்ரோல் டேங்க் 16 லிட்டர் கொள்ளளவில் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அறிமுகமானது சுஸுகியின் 2021 ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக்!! இந்திய அறிமுகம் எப்போது?

இந்த அப்டேட் செய்யப்பட்ட ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 மோட்டார்சைக்கிளை சுஸுகி நிறுவனம் இந்தியாவில் அடுத்த 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் என்ஜின் யூரோ-4 தரத்தில்தான் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் அறிமுகமாக வேண்டுமென்றால் என்ஜின் நமது பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட வேண்டும்.

Most Read Articles
English summary
2021 Suzuki GSX-S750 Introduced In US: Will It Arrive In The Indian Market?
Story first published: Tuesday, December 29, 2020, 22:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X