Just In
- 7 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 8 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 9 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 10 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
உலகம் முழுக்க.. கொரோனவால் 101,396,366 பேர் பாதிப்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவிற்கான சுஸுகியின் புதிய அட்வென்ஜெர் பைக்!! வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி, விரைவில் அறிமுகம்
அறிமுகத்திற்கு முன்னதாக பிஎஸ்6 சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

சுஸுகி மோட்டார்சைக்கிளின் வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக் இந்திய சந்தையில் விரைவில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்கவுள்ளது. இதனால்தான் இந்த பைக்கை பற்றிய டீசர்களும் விபரங்களும் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

650எக்ஸ்டி பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவர சுஸுகி நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த 650சிசி பைக்கின் அறிமுகம் குறித்த டீசர் ஆட்டோ எக்ஸ்போவை தொடர்ந்து வெளியிடப்பட்டது.

ஆனால் சுஸுகி திட்டமிட்டதுபோல் அறிமுகப்படுத்தப்படவில்லை. இதற்கு காரணம் உங்கள் எல்லாருக்கும் நன்றாகவே தெரியும், கொரோனா வைரஸ். இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த சுஸுகி பைக்கின் டீசர் வெளியாகியுள்ளது. இம்முறை இந்த பிஎஸ்6 பைக் வரும் நாட்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என நம்புவோம்.

சில வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி மிடில்வெய்ட் அட்வென்ஜெர்-டூரர் பைக்கின் 2021ஆம் ஆண்டிற்கான அப்கிரேட் வெர்சன் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இதுதான் இந்தியாவிற்கும் வரவுள்ளது.

2021 சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக், பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 645சிசி வி-ட்வின் என்ஜின் உடன் கொண்டுவரப்படுகிறது. அதிகப்பட்சமாக 70 பிஎச்பி மற்றும் 62 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.

வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கிற்கான புதிய கற்பவர் அங்கீகரிக்கப்பட்ட வெர்சனையும் சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வெர்சனில் என்ஜின் அதிகப்பட்சமாக 47 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படும். இவ்வாறான பெரிய ரக அட்வென்ஜெர் பைக்குகளை இதற்கு முன் இயக்கிய அனுபவம் இல்லாதவர்களுக்காக இந்த வெர்சன் கொண்டுவரப்படுகிறது.

அதேநேரம் வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமென்றாலும் என்ஜினின் வழக்கமான 70 பிஎச்பி பவரை மீட்டெடுத்து கொள்ள முடியும். இதற்கு கற்றல் அங்கீகரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் திட்ட (LAMS) தேவைகளை வாடிக்கையாளர் பூர்த்தி செய்ய வேண்டும்.

சுஸுகி நிறுவனம் இந்த பைக்கின் நிறத்தேர்வுகளையும் அப்டேட் செய்துள்ளது. இதனால் இந்தியாவில் விற்பனைக்கு வரும் வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கை சில்வர்-நீலம், கருப்பு-சிவப்பு மற்றும் வெள்ளை-கோல்டு என்ற நிறங்களில் தேர்வு செய்யலாம்.

ஆஃப்-ரோடு திறனிற்காக விரைவில் அறிமுகமாகவுள்ள சுஸுகியின் இந்த அட்வென்ஜெர் பைக்கில் ஸ்விட்ச் செய்யக்கூடிய பல நிலைகளை கொண்ட ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படவுள்ளது. இது முன் & பின் சக்கரங்களின் வேகம், க்ரான்க் பொசிஷன், த்ரோட்டல் பொசிஷன் மற்றும் கியர் பொசிஷனை தொடர்ந்து கண்காணித்து பின் சக்கரத்திற்கு வழங்கப்படும் என்ஜினின் ஆற்றலை கண்ட்ரோல் செய்யும்.
அறிமுகத்திற்கு பிறகு சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கிற்கு விற்பனையில் கவாஸாகி வெர்சஸ் 650 பைக் போட்டியாக விளங்கும்.