இந்தியாவில் அறிமுகமாகும் சுஸுகியின் முதல் பிஎஸ்6 பிரிமீயம் பைக் மாடல்!

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் சுஸுகி நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 பிரிமீயம் பைக் மாடல் குறித்த விபரம் தெரிய வந்துள்ளது.

இணையதளத்தில் ஏறிய சுஸுகியின் முதல் பிஎஸ்6 பிரிமீயம் பைக்!

ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் பிரிமீயம் பைக் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவிலும் சுஸுகி பிரிமீயம் பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஜிஎஸ்எக்ஸ் வரிசையிலான பைக் மாடல்கள், வி ஸ்ட்ரோம் மற்றும் ஹயபுசா ஆகிய பிரிமீயம் பைக்குகள் இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சுஸுகி நிறுவனம் தனது பிஎஸ்4 தரத்தில் விற்பனை செய்யப்பட்ட அனைத்து பிரிமீயம் பைக்குகளை இந்திய இணையதளத்தில் இருந்து நீக்கி உள்ளது.

சுஸுகி நிறுவனத்தின் ஹயபுசா, ஜிஎஸ்எக்ஸ் எஸ்750, வி ஸ்ட்ரோம்1000, ஜிஎஸ்எக்ஸ் ஆர்1000, ஜிஎஸ்எக்ஸ் எஸ்1000 ஆகிய பைக் மாடல்கள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட மாடல்களில் முக்கியமானதாக இருக்கின்றன.

MOST READ: யாரும் எதிர்பார்க்காத திடீர் மாற்றம்... இன்னும் ஒரே ஒரு நாள்தான்... துணிச்சலான முடிவை எடுத்த மோடி அரசு...

இந்த நிலையில், பிஎஸ்6 தரத்திற்கு இணையான முதல் மாடலாக வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக் மாடலை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், பிஎஸ்6 தரத்திற்கு இணையான சுஸுகி நிறுவனம் வி ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி பைக் சுஸுகி இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அட்வென்ச்சர் டூரர் ரகத்தில் சிறந்த தேர்வாக இருந்து வரும் இந்த பைக் பிஎஸ்6 எஞ்சினுடன் வர இருக்கிறது.

சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பிஎஸ்4 மாடலில் வி- ட்வின் சிலிண்டர்கள் 645சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 70 பிஎச்பி பவரையும், 62 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருந்தது.

MOST READ: இந்த விஷயம் தெரியுமா? லாக் டவுன் முடிஞ்ச பிறகு உங்க வீட்டிற்கு புது கார் வர சான்ஸ் இருக்கு!

இதே எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வரும் என்று கருதப்படுகிறது. இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கிடைத்து வந்தது.

Most Read Articles

English summary
Suzuki has updated the new VStrom 650XT model with a BS6 compliant engine for India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X