அறிமுகத்திற்கு தயார் நிலையில் ரெஜண்ட் நம்பர்.1 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்...

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ப்ராண்ட்டான ரெஜண்ட், நம்பர்.1 என்ற பெயரில் தனது முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த எலக்ட்ரிக் பைக்கை பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகத்திற்கு தயார் நிலையில் ரெஜண்ட் நம்பர்.1 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்...

முதல் எலக்ட்ரிக் பைக் மாடலான இதில் பழமையான பைக்குகளின் தோற்றத்தில் தற்போதைய மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களை ரெஜண்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. எந்த அளவிற்கு என்றால் கடந்த ஆண்டில் நடைபெற்ற எம்சி மஸன் ஸ்வீடிஸ் மோட்டார்சைக்கிள் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது விற்பனைக்கு தயாராகி உள்ள வரையிலும் இந்த பைக் தனது தனித்துவத்தை மாற்றி கொள்ளவில்லை.

அறிமுகத்திற்கு தயார் நிலையில் ரெஜண்ட் நம்பர்.1 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்...

இந்த மே மாதத்தில் நடைபெற இருந்த இந்த எலக்ட்ரிக் பைக்கின் அறிமுகம், கொரோனா வைரஸினால் தாமதமாகியுள்ளது. இந்த பைக் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில் நம்பர்.1 பைக் மாடல் தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து அறிமுகத்திற்கு தயார் நிலையில் உள்ளதாகவும், இதனால் எப்போது வேண்டுமானால் இதன் அறிமுகம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அறிமுகத்திற்கு தயார் நிலையில் ரெஜண்ட் நம்பர்.1 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்...

முழுவதும் வண்ண நிறங்களில் டிஎஃப்டி தொடுத்திரை இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை கொண்டுள்ள ரெஜண்ட் நிறுவனத்தின் இந்த முதல் எலக்ட்ரிக் பைக், புதுமையான ஆண்டி-தீஃப்ட் சிஸ்டத்தை புவி-வேலி அலாரம் சிஸ்டத்துடன் பெற்றுள்ளது. இதன் ஆண்டி-தீஃப்ட் சிஸ்டத்தை ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கிலும் பார்க்கலாம்.

அறிமுகத்திற்கு தயார் நிலையில் ரெஜண்ட் நம்பர்.1 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்...

இந்த சிஸ்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பகுதியை தேர்வு செய்து கொள்ளலாம். அதாவது அந்த பகுதியில் பைக் இயங்கி கொண்டிருந்தால் அலாரம் செயல்படாது. ஆனால் அந்த பகுதியை விட்டு பைக் விலகி சென்றால் எச்சரிக்கை செய்தி பைக்கின் மொபைல் செயலி மூலமாக உரிமையாளர்களுக்கு சென்றடைந்துவிடும்.

அறிமுகத்திற்கு தயார் நிலையில் ரெஜண்ட் நம்பர்.1 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்...

இந்த நம்பர்.1 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார் மூலமாக அதிகப்பட்சமாக 11 பிஎச்பி-ல் இருந்து 20 பிஎச்பி வரையிலான ஆற்றலை பெற முடியும். இந்த எலக்ட்ரிக் மோட்டார் உடன் 72 வோல்ட் மற்றும் 80 ஆம்பியர்.நேரம் பேட்டரி தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.

அறிமுகத்திற்கு தயார் நிலையில் ரெஜண்ட் நம்பர்.1 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்...

6 கிலோவாட்ஸ்.நேரம் திறன் கொண்ட இந்த பேட்டரி சிங்கிள் சார்ஜில் 150கிமீ தூரம் வரை பைக்கை இயக்கி செல்லும். இந்த எலக்ட்ரிக் பைக்கின் அதிகப்பட்ச வேகம் 120kmph ஆகும். 130 கிலோ எடை இந்த பைக் ஸ்டீல் ஃப்ரேம்-ஆல் கட்டமைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனிற்கு இந்த எலக்ட்ரிக் பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புறத்திலும், காயில்ஓவர் ஸ்ப்ரிங்களை கொண்ட ட்யூல் ஷாக்ஸ் பின்புறத்திலும் வழங்கப்பட்டுள்ளன.

அறிமுகத்திற்கு தயார் நிலையில் ரெஜண்ட் நம்பர்.1 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்...

இதன் 18 இன்ச் ஸ்போக்டு சக்கரங்கள் நிலையான டிஸ்க் ப்ரேக்குகளை கொண்டுள்ளன. இவற்றுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7.8 லட்சம் அளவில் விலையினை பெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த எலக்ட்ரிக் பைக்கை பற்றிய கூடுதல் தகவல்கள் அறிமுகத்தின்போது தெரிய வந்துவிடும்.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Regent NO. 1 Electric Motorcycle Nears Production
Story first published: Wednesday, May 20, 2020, 1:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X