வெறும் 12 ரூபாயில் 60கிமீ பயணம்... சந்தைக்கு வந்தது புதிய எலக்ட்ரிக் மொபட்...

புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரிக் இரு-சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டெக்கோ எலக்ட்ரிக் ப்ராண்ட் சாதி என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் மொபட் ஸ்கூட்டர் மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மொபட்டை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

முழு சார்ஜில் 60கிமீ பயணம்... புதிய டெக்கோ எலக்ட்ரிக் மொபட்

சிங்கிள் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை புனேவில் ரூ.57,697 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் டெலிவிரி பணிகள் வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து துவங்கவுள்ளதாக ஃபினான்ஷியல் எக்ஸ்ப்ரஸ் என்ற செய்தி தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய சாதி எலக்ட்ரிக் மொபட்டை வாங்க நினைப்போர் ப்ராண்ட்டின் இணையத்தள பக்கத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த ஸ்கூட்டரை பற்றி கூற வேண்டுமென்றால் இது பின் மற்றும் முன்புறத்தில் பொருட்களை வைப்பதற்கு பெரிய அளவிலான கூடையுடன் உள்ளதால் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதற்கு மிகவும் கச்சிதமாக இருக்கும்.

மேலும் பொருட்களை டெலிவிரி செய்யும் பணியில் இருப்போர்களுக்கும் ஏற்ற வாகனமாக இது விளங்கும். ஒற்றை நபர் மட்டுமே அமரும் வகையில் இருக்கை அமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரில் எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்கள், டெயில்லேம்ப்கள் மற்றும் டர்ன்-சிக்னல் இண்டிகேட்டர்கள், மைய லாக்கிங் சிஸ்டம், ஸ்மார்ட் பழுது செயல்பாடு மற்றும் விரைவான சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 60 கிமீ வரையில் இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் மொபட் மாடலில் ப்ரஷ்லெஸ் டிசி மோட்டார் மையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டாருக்கு ஆற்றலை வழங்க 48 வோல்ட் 26 Ah லித்தியம்-இரும்பு பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மூலமாக ஸ்கூட்டர் அதிகப்பட்சமாக 25 kmph வேகம் வரையில் இயங்கும். இதன் பேட்டரியை 100 சதவீதம் சார்ஜ் செய்ய 3-ல் இருந்து 4 மணிநேரம் வரை ஆகும் என கூறியுள்ள தயாரிப்பு நிறுவனம் இதற்கு விரைவான சார்ஜிங்கையும் பெறலாம் என தெரிவித்துள்ளது.

இவற்றுடன் இந்த ஸ்கூட்டரில் உள்ள ரீ-ஜெனரேடிவ் ப்ரேக்கிங் அமைப்பு ரைடிங் ரேஞ்ச்சை மேம்படுத்தும். ஒரு சார்ஜ்க்கு வெறும் 1.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும் எனவும் தயாரிப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்த்தோமேயானால் 12 ரூபாயில் 60 கிமீ பயணத்தை இந்த ஸ்கூட்டரின் மூலம் பெறலாம்.

பரிணாம அளவுகளின்படி 1720மிமீ நீளத்தை கொண்ட இந்த சாதி எலக்ட்ரிக் மொபட்டின் அகலம் 620மிமீ ஆகவும், உயரம் 1050மிமீ ஆகவும் உள்ளது. வலுவான எஃகு மூலம் உருவாக்கப்பட்ட சேசிஸை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரின் மொத்த எடை பேட்டரி இல்லாமல் 50 கிலோ ஆக உள்ளது.

சாதி எலக்ட்ரிக் மொபட்டிற்கு மூன்று வருட உத்தரவாதத்தை டெக்கோ நிறுவனம் வழங்கியுள்ளது. இதில் 12 மாதங்கள் மோட்டாருக்கும், 1.5 வருட உத்தரவாதம் சார்ஜருக்கும் அடங்கும். மெக்கானிக்கல் பாகங்களாக முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்புறத்தில் ட்யூல்-ஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

ப்ரேக்கிங் பணியை கவனிக்க இரு சக்கரங்களிலும் ட்ரம் ப்ரேக்குகள் சிபிஎஸ் உதவியுடன் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள படத்தில் டிஸ்க் ப்ரேக்குகளுடன் ஸ்கூட்டர் காட்சியளிக்கிறது. ஒரு வேளை இதன் டிஸ்க் வேரியண்ட் சில மாதங்கள் கழித்து விற்பனைக்கு வரலாம்.

10 இன்ச்சில் உள்ள ஸ்கூட்டரின் அலாய் சக்கரங்களில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. டெக்கோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த சாதி எலக்ட்ரிக் மொபட்டிற்கு போட்டியாக சமீபத்தில் அறிமுகமான ஜெமோபாய் மிசோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் விற்பனையில் உள்ளது.

Most Read Articles
English summary
60km range Techo Electra Saathi electric moped launched
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X