இதுதான் இந்தியாவின் அதிவேகமான ராயல் என்பீல்டு இன்டர்செப்டர்... ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு நிகரான வேகம்..

அதிவேகமாக செல்லும் வகையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டர் 650 பாக் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

இதுதான் இந்தியாவின் அதிவேகமான ராயல் என்பீல்டு இன்டர்செப்டர்... ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு நிகரான வேகம்..!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபலமான இருசக்கர வகான உற்பத்தி நிறுவனங்களில் ராயல் என்பீல்டும் ஒன்று. இந்நிறுவனம், ரெட்ரோ மற்றும் நவீன தரத்திலான பைக்குகளை தயாரித்து வருகின்றது.

அந்தவகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரு ட்வின் மாடல்களை இந்தியாவில் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இதுதான் இந்தியாவின் அதிவேகமான ராயல் என்பீல்டு இன்டர்செப்டர்... ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு நிகரான வேகம்..!

இவ்விரு பைக்குகளும் இரட்டை சிலிண்டர் கொண்ட பைக்குகளாகும். இவை, தற்போது இதே தரத்தில் விற்பனையாகும் மற்ற பைக்குகளைக் காட்டிலும் மலிவான விலைக் கொண்டதாக காட்சியளிக்கின்றன. ஆகையால், இவற்றிற்கு சந்தையில் நல்ல டிமாண்ட் நிலவுகின்றது.

தொடர்ந்து, குறுகிய காலத்தில் அதிக அதிக வரவேற்பையும் பெற்றது. இதனால், இந்த பைக்குகளுக்கான காத்திருப்பு காலம் சற்றே நீடித்தது.

இதுதான் இந்தியாவின் அதிவேகமான ராயல் என்பீல்டு இன்டர்செப்டர்... ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு நிகரான வேகம்..!

இந்நிலையில், இந்த ட்வின் பைக்குகளில் ஒன்றான இன்டர்செப்டர் மாடலை இந்திய இளைஞர் ஒருவர் அதிவேகமாக செல்வததற்கு ஏற்ப ட்யூன்-அப் செய்துள்ளார். இதனால், இந்த பைக்கின் சிறப்பு மேலும் கூடியுள்ளது. இதுமட்டுமின்றி, இந்தியாவின் அதிவேக பைக்காகவும் அது மாறியுள்ளது.

இதுதான் இந்தியாவின் அதிவேகமான ராயல் என்பீல்டு இன்டர்செப்டர்... ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு நிகரான வேகம்..!

இந்த அதிரடி மாற்றத்தை டெல்லியைச் சேர்ந்த அபினவ் என்ற இளைஞர் மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து, இந்த பைக்கில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு மாற்றங்கள்குறித்த தகவலை வீடியோவாக யுடியூபிலும், புகைப்படங்களாக இன்ஸ்டாரகிராமிலும் பகிர்ந்துள்ளார்.

இதுதான் இந்தியாவின் அதிவேகமான ராயல் என்பீல்டு இன்டர்செப்டர்... ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு நிகரான வேகம்..!

இந்த வீடியோ, மோட்டார்சைக்கிளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மற்றும் சிறப்பு வசதிகள் குறித்து தெளிவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட மாற்றத்தால் ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 பைக் 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 5 விநாடிகளில் தொட்டும் என்பது உறுதியாகியுள்ளது.

இதுதான் இந்தியாவின் அதிவேகமான ராயல் என்பீல்டு இன்டர்செப்டர்... ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு நிகரான வேகம்..!

குறிப்பாக, தற்போது விற்பனையில் இருக்கும் பல உயர் ரக ஸ்போர்ட்கள் கார்கள்கூட இந்த வேகத்தை 3.5 செகண்டுகளில்தான் தொடுகின்றன.

ஆனால், இன்டர்செப்டர் மோட்டார்சைக்கிளில் இந்த வேகம் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். ஆகையால், இந்தியாவின் முதல் அதிவேக இன்டர்செப்டர் 650 பைக்காக இது மாறியிருக்கின்றது.

இதுதான் இந்தியாவின் அதிவேகமான ராயல் என்பீல்டு இன்டர்செப்டர்... ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு நிகரான வேகம்..!

இந்த அதிவேகத்திற்கு பைக்கை ஒரு சில மாடிஃபிகேஷன்களுக்கு அவர் உட்படுத்தியிருக்கின்றார். குறிப்பாக, பைக்கின் முன்பக்கத்தில் இருந்த சஸ்பென்ஷன் நீக்கப்பட்டு பஜாஜ் டோமினார் பைக்குகளில் காணப்படும் அப்சைட் டவுண் ஃபோர்க்குகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதுதான் இந்தியாவின் அதிவேகமான ராயல் என்பீல்டு இன்டர்செப்டர்... ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு நிகரான வேகம்..!

இது அதிகபட்ச வேகத்தில் சிறப்பான பயணத்தை அனுபவிக்க உதவும். இத்துடன், கஸ்டமைஸ்ட் மேப்புடன் கூடிய பவர்ட்ரானிக் பிக்கிபேக் இசியூ, எஸ்எஸ் மோட்டோவின் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எக்சாஸ்ட் மற்றும் இரு ஸ்டேஜ் அடுக்குக்கொண்ட டிஎன்ஏ ஏர்ஃபிள்டர் உள்ளிட்டவையும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. இவை அதிகபட்ச வேகத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

இதுதான் இந்தியாவின் அதிவேகமான ராயல் என்பீல்டு இன்டர்செப்டர்... ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு நிகரான வேகம்..!

இத்துடன், இரு சக்கரங்களும் மாற்றப்பட்டுள்ளன. அந்த அலுமினியம் தரத்திலான ரிம்கள் ஸ்பெஷலாக தாய்வானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதுதான் இந்தியாவின் அதிவேகமான ராயல் என்பீல்டு இன்டர்செப்டர்... ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு நிகரான வேகம்..!

இதைத்தொடர்ந்து, ஸ்பிராக்கெட்டையும் அவர் மாற்றியமைத்துள்ளார். இதனால், கியர் ஷிஃப்டர் மாறியிருப்பது உங்களால் காண முடியும். இந்த மாற்றங்களுடன் பைக்கின் பெயிண்ட்டிங்கையும் அந்த இளைஞர் மாற்றியுள்ளார். இதற்காக கிரே மற்றும் கருப்பு நிறங்களை அவர் பயன்படுத்தியிருக்கின்றார்.

குறிப்பிட்ட பல்வேறு மாற்றங்களால் பைக் முந்தைய மாடலைக் காட்டிலும் 20 கிலோ எடையை இழந்துள்ளது. இந்த எடை குறைவு நடவடிக்கையால் இன்டர்செப்டர் 650 கூடுதல் பவருடன் சீறி பாயும் வகையில் மாறியுள்ளது.

தற்போது விற்பனையில் இருக்கும் இன்டர்செப்டர் 650 பைக் அதிகபட்சமாக 36 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. ஆனால், தற்போது புதிய மாற்றங்களைப் பெற்றிருக்கும் இந்த பைக் 42.7 பிஎச்பி பவரை வெளியேற்றுகின்றது. இது 6.7 பிஎச்பி அதிகம் ஆகும்.

இதுதான் இந்தியாவின் அதிவேகமான ராயல் என்பீல்டு இன்டர்செப்டர்... ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு நிகரான வேகம்..!

இதனால், இந்த பைக்கின் உச்சபட்ச வேகம் மிக அதிகமாக மாறியுள்ளது. அதவாது, அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சீறிப் பாயும் வகையில் இன்டர்செப்டர் உருமாறியுள்ளது. இந்த வேகத்தை அது 6.8 செகண்டுகளிலேயே தொட்டுவிடுகின்றது.

Most Read Articles
English summary
This Royal Enfield Interceptor Touch 0-100KM In Just 5 Sec. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X