இந்தியாவின் டாப்5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்! மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா டூ பஜாஜ் சேத்தக்

இந்தியாவில் விற்பனையாகும் டாப் ஐந்து மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பை குறைப்பதற்காக மின்வாகன பயன்பாட்டை இந்திய அரசு ஊக்குவித்து வருகின்றது. இதற்காக குறிப்பிட்ட சலுகைகளையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.

அரசின் இந்த நோக்கத்தை அறிந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் முழு கவனத்தையும் மின் வாகனங்களின் பக்கம் திருப்பியுள்ளனர்.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

இதனால், அண்மைக் காலங்களாக மின் வாகனங்களின் அறிமுக மழை தீவிரமடைந்துள்ளது. இது, எதிர்காலத்தில் மின்சார புயலாகக்கூட மாறலாம். அந்தளவிற்கு புதுமுக மின்வாகனங்களின் அறிமுகம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

குறிப்பாக, முன்னணி நிறுவனங்கள் மட்டுமின்றி இதுவரை சந்தையில் கண்டிராத ஆரம்பநிலை வாகன உற்பத்தி நிறுவனங்கள்கூட தங்களின் பங்காக புதிய மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

அந்தவகையில், தற்போது மின்சார ஸ்கூட்டர்களின் அறிமுகமே மிக அதிகமாகக் காணப்படுகின்றது. பஜாஜ் போன்ற ஸ்கூட்டர் தயாரிப்பை கைவிட்ட நிறுவனம் கூட தற்போது ஸ்கூட்டர் தயாரிப்பில் களமிறங்கியிருக்கின்றது. இதற்கு மின்சார வாகனங்களுக்கான வரவேற்பே முக்கிய காரணமாக இருக்கின்றது.

அந்தவகையில், தற்போது இந்தியாவில் விற்பனையாகும் டாப் ஐந்து மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் காணவிருக்கின்றோம்.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

1. பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்

பஜாஜ் நிறுவனம் 14 ஆண்டுகளுக்கு பின் புதிய அவதாரத்தில் சேத்தக் ஸ்கூட்டரை களமிறக்கியுள்ளது. அதாவது மின்சார ரகத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம், இந்த இடைவெளியில் ஸ்கூட்டர் ரக இருசக்கர வாகனத்தை விற்பனைக்குக் கொண்டுவரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

இதைத்தொடர்ந்து, மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடந்த ஆண்டின் இறுதியில் சேத்தக் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இதையடுத்து நடப்பாண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கும் கொண்டு வந்தது.

இந்த மின்சார ஸ்கூட்டர் தற்போது புனே மற்றும் பெங்களூரு ஆகிய இருநகரங்களில் மட்டுமே கேடிஎம் டீலர்ஷிப்புகள் வாயிலாக விற்பனைக்குக் கிடைக்கின்றது. இருப்பினும், முதல் மாத விற்பனையில் 21யூனிட்டுகளை டெலிவரி செய்து கெத்து காட்டியுள்ளது.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

சேத்தக் மின்சார ஸ்கூட்டர் அர்பன் மற்றும் பிரிமியம் ஆகிய இரு வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், அர்பன் வேரியண்டிற்கு ரூ. 1 லட்சம் என்ற விலையும், பிரிமியம் வேரியண்டிற்கு ரூ. 1.15 லட்சம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை வித்தியாசத்திற்கேற்ப இரு வேரியண்ட் மின்சார ஸ்கூட்டரிலும் ரேஞ்ச் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் சற்று மாறுபட்டு காணப்படுகின்றது.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

இவ்விரு மின்சார ஸ்கூட்டர்களும் ஒரு முழுமையான சார்ஜில் 80 முதல் 100 கிமீ வரை ரேஞ்சை வழங்குகின்றது. இதற்கேற்ப 3kWh லித்தியம் அயன் பேட்டரி சேத்தக்கில் இணைக்கப்பட்டுள்ளது. இது, 4kW திறன் கொண்ட மின் மோட்டாருக்கு தேவையான சக்தியை வழங்கும். இந்த மின்மோட்டார் 16 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனை கொண்டது.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

2. ஏத்தர் 450

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஆரம்பத்தில் ஏத்தர் 450 மற்றும் 350 ஆகிய இரு மாடல்களைக் களமிறக்கியது. ஆனால், இதன் 450 மாடலுக்கே நல்ல வரவேற்பு கிடைத்தது. விலை குறைந்த மாடலான 350 மிக மிக குறைந்த டிமாண்டே நிலவியது.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

ஆகையால், 350 மாடலை சந்தையை விட்டு விளக்கிய ஏத்தர், 450 தயாரிப்பு மற்றும் விற்பனையிலேயே முழு கவனம் செலுத்த ஆரம்பித்தது.

இந்த நடவடிக்கைக்கு ஏற்ப 450 மாடல் மின்சார ஸ்கூட்டருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்நிறுவனம் சமீபத்தில்தான் அதன் கால் தடத்தை சென்னையில் பதித்தது.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

இந்த மின்சார ஸ்கூட்டரில் IP67 திறன் கொண்ட 2.4kW பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. ஒரு முழுமையான சார்ஜில் 75 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இதனை ஈகோ எனப்படும் எகனாமி மோடில் மட்டுமே வழங்கும். இதேபோன்று, ஸ்போர்ட் மோடில் 55கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

ஏத்தர் நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டருக்கு ரூ.1,31,683 என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இது, பெங்களூருவைக் காட்டிலும் சற்றே அதிக மதிப்புடைய ஆன்ரோடு விலையாகும். ஏத்தர் நிறுவனம் தற்போது சந்தையில் பல இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்து வருகின்றது. பஜாஜ் சேத்தக் போன்ற அதிக ரேஞ்ஜ் வசதியுடைய மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனை இழப்பைச் சந்தித்து வருகின்றது. ஆகையால், ஏத்தர் 450 விற்பனையில் இருந்து விளக்கிக்ககொள்ள இருப்பதாக தகவல் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

3. ஏத்தர் 450எக்ஸ்

ஏத்தர் 450 மாடலின் அப்கிரேட் செய்யப்பட்ட வெர்ஷனாக ஏத்தர் 450 எக்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏத்தர் 450 சற்றே குறைந்த ரேஞ்ஜ் வசதியைக் கொண்டிருப்பதால் அதை அப்கிரேட் செய்யும் விதமாக ஏத்தர் 450 எக்ஸ் மாடலை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் களமிறக்கியிருக்கின்றது.

இந்த ஸ்கூட்டரில் 3.3 kW பேட்டரியைக் கொண்டிருக்கின்றது. இது, 6kW திறன் கொண்ட மின் மோட்டாருக்கு தேவையான சக்தியை வழங்கும்.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 26 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. தொடர்ந்து, அதிகபட்சமாக மணிக்கு 40 கிமீ என்ற வேகத்தை 3.3 நொடிகளிலும், 60 கிமீ என்ற வேகத்தை 6.5 நொடிகளிலும் தொடும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

இந்த அதிகபட்ச திறன் அறிமுகத்தால் ஏத்தர் 450 எக்ஸ் விலை அதிகரித்துக் காணப்படுகின்றது. அந்தவகையில், 450 எக்ஸ் ப்ளஸ் வேரியண்டிற்கு ரூ. 1.49 லட்சமும், 450எக்ஸ் ப்ரோ வேரியண்டிற்கு 1.59 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

4. டிவிஎஸ் ஐக்யூப்

நீண்ட நாள் எதிர்பார்புகளுக்கு மத்தியில் டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் மின்சார தயாரிப்பான ஐக்யூப் மின்சார ஸ்கூட்டர் கடந்த ஜனவரி 25ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

இந்த ஸ்கூட்டர் மிக முக்கியமாக பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 4.4kW திறன் கொண்ட மின் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டார் வெறும் 4.2 நொடிகளிலேயே 0த்தில் இருந்து 40 கிமீ என்ற வேகத்தைத் தொட்டுவிடும்.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

இணைப்பு தொழில்நுட்ப வசதியுடைய டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு டிவிஎஸ் ஐக்யூப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், சந்தையில் இந்த ஸ்கூட்டருக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இந்த மின்சார ஸ்கூட்டர் ஒரு முழுமையான சார்ஜில் 75கிமீ ரேஞ்ஜை வழங்கும். இதற்கு எக்ஸ்-ஷோரூமில் ரூ. 1.15 லட்சம் என்ற விலையை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

5. ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா

தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மலிவு விலை மின்சார ஸ்கூட்டரில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆப்டிமா மாடலும் ஒன்று. இதற்கு ஜாம்பவான் நிறுவனம் ஹீரோ, ரூ. 68,721 என்ற மிகக் குறைந்த விலையை நிர்ணயித்துள்ளது. இது ஆரம்பநிலை வேரியண்டின் விலையாகும்.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

இந்த ஆரம்பநிலை வேரியண்ட் ஒரு முழுமையான சார்ஜில் 50 கிமீ ரேஞ்ஜை மட்டுமே வழங்குகின்றது. ஆனால், உச்சநிலை வேரியண்ட் இதை விட ஒரு மடங்கு கூடுதலான ரேஞ்ஜை வழங்கும். உதாரணமாக 110 கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறனைக் கொண்டதாக உயர்நிலை ஆப்டிமா மின்சார ஸ்கூட்டர் உள்ளது.

இந்தியாவின் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்.. மலிவு விலை ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா முதல் பஜாஜ் சேத்தக் வரை...

மேற்கூறிய இந்த ஐந்து ஸ்கூட்டர்கள் தற்போது இந்தியாவில் நல்ல வரேவற்பைப் பெற்று வரும் டாப் ஐந்து மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாகும்.

Most Read Articles
English summary
Top 5 Electric Scooters In India - Here Is The List. Read In Tamil.
Story first published: Wednesday, February 26, 2020, 13:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X