ரூ.79 ஆயிரத்தில் கிடைக்கும் அட்டகாசமான பஜாஜ் பல்சர் 125... கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் என்ன?

ரூ. 79 ஆயிரம் என்ற குறைந்த விலையில் விற்பனைக்கு களமிறங்கியிருக்கும் பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 மாடலின் கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலை தொகுத்து வழங்கியுள்ளோம்.

ரூ.79 ஆயிரத்தில் கிடைக்கும் அட்டகாசமான பஜாஜ் பல்சர் 125... கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய மாசு உமிழ்வு பிஎஸ்-6 நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் அதன் தயாரிப்புகளை பிஎஸ்-4 இல் இருந்து பிஎஸ்6-க்கு உயர்த்தும் பணியைத் தொடங்கின. அந்தவகையில், இந்திய இருசக்கர வாகன ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் நிறுவனமும் அதன் தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்த ஆரம்பித்தது.

ரூ.79 ஆயிரத்தில் கிடைக்கும் அட்டகாசமான பஜாஜ் பல்சர் 125... கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

இந்நிலையில், பஜாஜ் நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த பல்சர் 125 மாடலை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தி அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் இதுவரை இல்லாத வகையில் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிளவு (ஸ்பிளிட்) செய்யப்பட்ட இருக்கை, அப்கிரேட் செய்யப்பட்ட தோற்றம் என அனைத்து விதத்திலும் பஜாஜ் பல்சர் 125 பைக்கின் ஸ்டைல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தற்போது நாம் கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய விஷயங்களைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

ரூ.79 ஆயிரத்தில் கிடைக்கும் அட்டகாசமான பஜாஜ் பல்சர் 125... கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

டிசைன்

பஜாஜ் பல்சர் 125 பைக்கில் நாம் பார்க்க வேண்டிய மிக முக்கியமான அம்சமாக ஸ்பிளிட் செய்யப்பட்ட இருக்கை அமைப்பு உள்ளது. இந்த மாதிரியான அம்சங்களை உயர் ரக பைக்குகளில் மட்டுமே இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. இதனை மாற்றும் விதமாக பஜாஜ் நிறுவனம் ஆரம்பநிலை மாடலான பல்சர் 125-ல் அறிமுகம் செய்துள்ளது.

ரூ.79 ஆயிரத்தில் கிடைக்கும் அட்டகாசமான பஜாஜ் பல்சர் 125... கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

இது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இதன் இருக்கை மட்டுமின்றி மட்டுமின்றி கிராப் ரெயில்கள் ஸ்பிளிட் செய்யப்பட்ட மாடலிலேயே நிறுவப்பட்டிருக்கின்றது. இத்துடன், புதிய தோற்றத்திற்காக அப்கிரேட் செய்யப்பட்ட எஞ்ஜின் கவுல் வழங்கப்பட்டிருக்கின்றது. இது முந்தைய மாடல் பஜாஜ் பல்சர் 125-ஐ காட்டிலும் ஸ்போர்ட்டியர் மாடலாக காட்சிப்படுத்துகின்றது.

ரூ.79 ஆயிரத்தில் கிடைக்கும் அட்டகாசமான பஜாஜ் பல்சர் 125... கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

நிறம்

புதியை ஸ்டைலைத் தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டியதற்கான அடுத்த இடத்தில் நிற தேர்வு உள்ளது. புதிய பஜாஜ் பல்சர் 125 பல வித நிற தேர்வுகளை வழங்குகின்றது. அதாவது, நியான் பச்சை நிறத்துடன் கூடிய மேட் கருப்பு, கருப்பு சில்வர் மற்றும் கருப்பு சிவப்பு ஆகிய நிறத் தேர்வுகளில் அது கிடைக்க இருக்கின்றது.

ரூ.79 ஆயிரத்தில் கிடைக்கும் அட்டகாசமான பஜாஜ் பல்சர் 125... கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

எஞ்ஜின்

ஸ்டைல் மாற்றத்தைப் போன்றே எஞ்ஜினிலும் மிக முக்கியமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது புதிய பிஎஸ்-6 தரமாகும். இது முந்தைய மாடலைக் காட்டிலும் குறைந்த மாசை வெளிப்படுத்த உதவும். முக்கியமாக, நல்ல மைலேஜே வழங்கவும் உதவும். எனவே இது பட்ஜெட் விலையில் ஸ்போர்ட் வாகனத்தை எதிர்பார்ப்பவர்களை சற்றே கூடுதலாக கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரூ.79 ஆயிரத்தில் கிடைக்கும் அட்டகாசமான பஜாஜ் பல்சர் 125... கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

இந்த எஞ்ஜின் ஓர் 124.4சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு ப்யூவல் இன்ஜெக்டட் எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 11.6 பிஎச்பி பவரை 8,500 ஆர்பிஎம்மிலும், 11 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். இது 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனில் இயங்கும்.

ரூ.79 ஆயிரத்தில் கிடைக்கும் அட்டகாசமான பஜாஜ் பல்சர் 125... கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

ஹார்டுவேர்

சஸ்பென்ஷன், பிரேக்கிங் அம்சங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இதில் சஸ்பென்ஷன் அமைப்பிற்காக முன்பக்க வீலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்க வீலில் ட்வின் கேஸ் சார்ஜட் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டிருக்கின்றது.

ரூ.79 ஆயிரத்தில் கிடைக்கும் அட்டகாசமான பஜாஜ் பல்சர் 125... கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

இதைத்தொடர்ந்து, சிறப்பான பிரேக்கிங் வசதிக்காக முன் பக்க வீலில் டிஸ்க் பிரேக்கும், பின் பக்க வீலில் டிரம் பிரேக்கும் நிறுவப்பட்டிருக்கின்றது. இத்துடன் கூடுதல் பாதுகாப்பிற்காக காம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இது, ஸ்கிட்டாகுதல், பிரேக் ஃபெய்லியர் போன்றவற்றில் இருந்து காக்க உதவும்.

ரூ.79 ஆயிரத்தில் கிடைக்கும் அட்டகாசமான பஜாஜ் பல்சர் 125... கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

விலை

நாம் மேலே பார்த்த அனைத்து அம்சங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கும் பல்சர் 125 மாடலுக்கு ரூ. 79,091 என்ற விலையைதான் பஜாஜ் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது ஸ்பிளிட் இருக்கை மற்றும் டிஸ்க் பிரேக்குடன் இருக்கும் பல்சர் 125 மாடலின் விலையாகும். அதுவே, டிஸ்க் பிரேக் அல்லாத ஸ்டாண்டர்டு வேரியண்டின் விலை ரூ. 75,462 ஆக உள்ளது. இவையனைத்தும் எக்ஸ்-ஷோரும் விலையாகும்.

Most Read Articles
English summary
Top 5 Highlights Of New Launch Bajaj Pulsar 125 Split Seat BS6. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X