பஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது! கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்து வாகனங்கள் பேருந்து, ரயில் என அனைத்து முடக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில் ஆஃபிஸ் எப்படி செல்வது என பலர் யோசித்து வருகின்றனர். எனவேதான் அவர்களுக்கு பயனளிக்கும் விதமாக இந்தியாவில் மலிவு விலையில் அதிக அம்சங்களுடன் விற்பனையில் இருக்கும் பைக்குகளை தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

பஸ்-ரயில் எதுவுமே விடல... வேலைக்கு எப்படி போறது... கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

இந்தியாவில் என்னதான் கார்களுக்கான சந்தை தொடர்ச்சியாக நாளுக்கு நாள் விரிவடைந்துக் கொண்டே வந்தாலும், பைக்குகளுக்கான சிக்னல் என்றுமே க்ரீன்தான். ஏனென்றால், இந்தியாவில் இருசக்கர வாகனங்களுக்கான ரசிகர்கள் ஏராளம். எனவேதான், அதற்கான டிமாண்ட் எப்போதும் டாப் கியரில் உள்ளது. அதிலும், பட்ஜெட் விலையுடைய டூ வீலர்களுக்கான வரவேற்பைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அவற்றிற்கான எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே உள்ளது.

பஸ்-ரயில் எதுவுமே விடல... வேலைக்கு எப்படி போறது... கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

ஏனெனில், அவை குறைந்த பராமரிப்பில் அதிகம் பலனை வழங்கக்கூடியவையாக இருக்கின்றன. இதன்காரணத்திலேயே சில செல்வந்தர்களின் வீட்டிலும்கூட ஓர் பட்ஜெட் பைக்கை நம்மால் பார்க்க முடிகின்றது. அதிலும், குறிப்பிட்ட ஒரு சில மாடல்களுக்கு இந்தியர்கள் பலர் அடிமையாகவே இருக்கின்றனர்.

பஸ்-ரயில் எதுவுமே விடல... வேலைக்கு எப்படி போறது... கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

அந்தவகையில், இந்தியாவில் அதிகம் வரவேற்பை பெற்று வரும் டாப் 5 விலை குறைவான பைக்குகளைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கிவிருக்கின்றோம். அவையனைத்தும் ரூ. 70 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

பஸ்-ரயில் எதுவுமே விடல... வேலைக்கு எப்படி போறது... கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

தற்போது கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பொதுமக்கள் பலர் பொதுவாகனங்களில் பயணிக்க தயங்குகின்றனர். இம்மாதிரியன சூழ்நிலையில் தனி வாகனத்தில் செல்வதே அனைவரின் நலனும்கூட. ஆகையால், பொதுமக்களுக்கு பயனளிக்கும் விதமாக இந்தியாவின் பெஸ்ட் 5 விலை குறைந்த டூ-வீலர்களின் தொகுப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

பஸ்-ரயில் எதுவுமே விடல... வேலைக்கு எப்படி போறது... கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

டிவிஎஸ் ரேடியான் (TVS Radeon)

விலை ரூ. 59, 742 (எக்ஸ்-ஷோரூம் மதிப்பில்)

டிவிஎஸ் ரேடியான் பைக் மலிவு விலை பைக்காக மட்டுமில்லாமல் தினசரி பயனர்களின் ஆல்-ரவுண்டராகவும் காட்சியளிக்கின்றது. இதனாலயே எங்களது லிஸ்டில் இந்த பைக் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. ஆம், இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் அதி திறன் கொண்ட எஞ்ஜின் அதன் பயனர்களுக்கு அலாதியான பயண அனுபவத்தை ஏற்படுத்துவதுடன், குறைந்த செலவையே வழங்குகின்றது.

பஸ்-ரயில் எதுவுமே விடல... வேலைக்கு எப்படி போறது... கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

இந்த பைக்கில் 109.7 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் நிறுவப்பட்டு வருகின்றது. இது, அதிகபட்சமாக 8.08 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

இத்துடன், பாதுகாப்பு வசதியாக முன்பக்க வீலில் 240மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், ரம்மியான பார்வை தோற்றத்திற்காக 18 இன்ச் கொண்ட அலாய் வீல்கள் இரு முனைகளிலும் நிறுவப்பட்டிருக்கின்றது.

பஸ்-ரயில் எதுவுமே விடல... வேலைக்கு எப்படி போறது... கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

மேலும், ட்யூப்லெஸ், எல்இடி பகல் நேர மின் விளக்கு, ஸ்மார்டான தோற்றமுடைய ஹெட்லேம்ப் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த டிவிஎஸ் ரேடியான் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த பைக்கின் ஆரம்ப நிலை மாடலுக்கு ரூ. 59, 742 என்ற விலையும், டாப் எண்ட் மாடலுக்கு ரூ. 65,742 என்ற பட்ஜெட் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

பஸ்-ரயில் எதுவுமே விடல... வேலைக்கு எப்படி போறது... கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina 110 H-Gear)

விலை: ரூ. 60,000 (எக்ஸ்-ஷோரூம் மதிப்பு)

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் பஜாஜ் பிளாட்டினாவும் ஒன்று. இது, இந்திய இருசக்கர வாகன சந்தையில் நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் பைக்குகளிலும் ஒன்றாக இருக்கின்றது. இதில் இரு விதமான வேரியண்டை பஜாஜ் வழங்குகின்றது. அவை, பஜாஜ் பிளாட்டினா 110 எச்-கியர் மற்றும் பிளாட்டினா 100 ஆகியவை ஆகும். இதில், மிகச் சிறந்த அம்சம் கொண்ட பைக்காக எச்-கியர் வெர்ஷனே உள்ளது.

பஸ்-ரயில் எதுவுமே விடல... வேலைக்கு எப்படி போறது... கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

இது சற்று கூடுதல் விலையைக் கொண்டிருந்தாலும், பிளாட்டினா 100 மாடலைக் காட்டிலும் அதிக பலனை வழங்கக் கூடியதாக இருக்கின்றது. இதன்காரணத்தினாலயே பிளாட்டினா 100 மாடலைக் காட்டிலும் 110 எச்-கியர் மாடலை முன்னிறுத்தியுள்ளோம்.

பஸ்-ரயில் எதுவுமே விடல... வேலைக்கு எப்படி போறது... கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

இந்த பைக்கில் 115.45 சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜினை பஜாஜ் பொருத்தி வருகின்றது. இது, அதிகபட்சமாக 8.6 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும். இதன் சிறப்பம்சமே எச்-கியர் (Highway Gear) எனப்படும் ஐந்தாவது கியர்தான். இது தேசிய நெடுஞ்சாலைகளில் பயன்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக ஆர்பிஎம்மை உருவாக்க வழி வகுக்கும்.

பஸ்-ரயில் எதுவுமே விடல... வேலைக்கு எப்படி போறது... கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

இதன் விளைவாக அதிக திறன் மற்றும் குறைந்த எரிபொருள் பயன்பாட்டை நம்மால் பெற முடியும். பல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் இந்த பைக் ரூ. 60 ஆயிரம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது, எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

பஸ்-ரயில் எதுவுமே விடல... வேலைக்கு எப்படி போறது... கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

ஹோண்டா ஷைன் (Honda Shine)

விலை: ரூ. 67,857 (எக்ஸ்-ஷோரூம் மதிப்பு)

மலிவு விலையில் கிடைக்கும் பெரிய எஞ்ஜின் கொண்ட பைக்கா ஹோண்டா ஷைன் இருக்கின்றது. இந்த பைக்கும் கணிசமான அப்டேட்டுகளுடன் நீண்ட காலங்களாக இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து வருகின்றது. இந்த பைக்கில் 124சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜினை ஹோண்டா பயன்படுத்தி வருகின்றது. இது அதிகபட்சமாக 10.5 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

பஸ்-ரயில் எதுவுமே விடல... வேலைக்கு எப்படி போறது... கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

சைலண்ட் ஸ்டார்ட், ப்யூவல் இன்ஜெக்ஷன், நீளமான இருக்கை, ட்யூப் லெஸ் டயர், டிஸ்க் பிரேக், ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், டிசி ஹெட்லேம்ப் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் காணப்படும் இந்த பைக் ஆரம்ப விலையாக ரூ. 67,857 என்ற தொகையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உயர் நிலை மாடலுக்கு ரூ. 72,557 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

பஸ்-ரயில் எதுவுமே விடல... வேலைக்கு எப்படி போறது... கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

ஹீரோ பேஷன் புரோ (Hero Passion Pro)

விலை: ரூ. 65,740 (எக்ஸ்-ஷோரூம் மதிப்பு)

ஆரம்பத்தில் ஹீரோ-ஹோண்டா நிறுவனங்களின் இணைவில் கிடைத்து வந்த ஹீரோ பேஷன் பைக், தற்போது, ஹீரோ நிறுவனத்தின் கீழ் மட்டுமே கிடைத்து வருகின்றது. இது புதிய பரிணாம மாற்றமாக புரோ என்னும் பெயரில் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. நிறம் மற்றும் தோற்றம் உள்ளிட்டவை கண்கவர் விதத்தில் இருப்பது அந்த பைக்கின் சிறப்பம்சம் ஆகும்.

பஸ்-ரயில் எதுவுமே விடல... வேலைக்கு எப்படி போறது... கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

இதுமட்டுமின்றி இந்த பைக்கின் சேஸிஸ் அமைப்பையும் ஹீரோ நிறுவனம் தற்போது அப்டேட் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கில் 113சிசி திறன் கொண்ட எஞ்ஜின் நிறுவப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 9 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இது இந்தியாவில் ரூ. 65,740 முதல் ரூ. 67,940 வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதில், டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் தேர்வு வழங்கப்படுகின்றது.

பஸ்-ரயில் எதுவுமே விடல... வேலைக்கு எப்படி போறது... கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

ஹீரோ ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் (Hero Splendor iSmart)

விலை: ரூ. 67,900 (எக்ஸ்-ஷோரூம் மதிப்பு)

ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான பைக்குகளில் ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கும் ஒன்று. இதுமட்டுமின்றி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளிலும் இது முன்னணி இடத்தில் உள்ளது. இந்த பைக்கின் நம்பகத் தன்மை மற்றும் உழைக்கும் திறன் உள்ளிட்டவற்றாலே இத்தகைய அதீத வரவேற்பை அது பெற்று வருகின்றது. இந்த பைக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அதன் ஐ 3 தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பஸ்-ரயில் எதுவுமே விடல... வேலைக்கு எப்படி போறது... கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

இந்த தொழில்நுட்பம் என்னவென்றால், மோட்டார் சைக்கிள் சில நொடிகள் செயலற்ற நிலையில் இருக்கும்போது அது இயந்திரத்தை நிறுத்திவிட்டு, நீங்கள் கிளட்சில் இழுக்கும் தருணத்தில் அதை மீண்டும் இயங்க அனுமதிக்கும். இதுவே, இந்த தொழில்நுட்பத்தின் பணியாகும். இத்துடன், குறைந்த எரிபொருளை உபயோகிக்கவும் இது வழி வகுகின்றது. ஆகையால், எரிபொருள் கணிசமாக மிச்சமாகும்.

பஸ்-ரயில் எதுவுமே விடல... வேலைக்கு எப்படி போறது... கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

எனவேதான் பட்ஜெட் வாகன விரும்புகளின் விருப்பமான தேர்வில் இந்த பைக் முதல் இடத்தில் இருக்கின்றது. இந்த பைக்கில், 113.2 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 9 பிஎச்பி ஆற்றலை உருவாக்கும். இதன் டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ. 67,900 என்ற விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
English summary
Top 5 Low Budget Bikes In India. Read In Tamil.
Story first published: Friday, June 5, 2020, 17:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X