இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

இந்தியாவில் மிக அதிக விலையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் பைக்குகளின் பட்டியலை தொகுத்து வழங்கியுள்ளோம். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

இந்தியா ஓர் வளர்ந்து வரும் நாடாக கருதப்பட்டாலும் குறிப்பிட்ட நடவடிக்கைகளினால் அது வல்லரசு நாடுகளுக்கு இணையானது என்ற பிம்பத்தை வெளிக்காட்டி வருகின்றது. அப்படியான பிம்பத்தை நாட்டிற்கு வழங்கும் துறைகளில் ஒன்றாக இருக்கின்றது இந்திய ஆட்டோமொபைல்ஸ்துறை.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

ஆம், இங்கு உலக வல்லரசு நாடுகளுக்கு இணையானளவில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்று வருகின்றது. இதனாலயே இந்தியா ஓர் மிகப்பெரிய வாகனச் சந்தையாக காட்சியளிக்கின்றது.

நாட்டில் பெரும்பாலும் பட்ஜெட் ரக வாகனங்களே அதிகம் விற்பனையாகி வருகின்றது. இருப்பினும், பட்ஜெட் வாகனங்களுக்கு இணையான சொகுசு மற்றும் பிரிமியம் ரக வாகனங்களின் விற்பனையும் ஏகபோகமாக இருந்து வருகின்றது.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால், அண்மைக் காலங்களாக இந்தியர்கள் மத்தியில் சொகுசு வசதிகள் நிறைந்த வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியர்களின் இந்த மன நிலையை அறிந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிக வசதிகளைக் கொண்ட கார்கள் மற்றும் பைக்குகளை களமிறக்கத் தொடங்கியிருக்கின்றன.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

அந்தவகையில், முன்னதாக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக விலையுடையக் கார்களைப் பற்றிய தகவலை பார்த்துள்ளோம். இப்போது, பைக்குகளைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் காணவிருக்கின்றோம்.

இதில் ஒரு சில பைக்குகள் நெடு நீண்ட காலமாக இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மாடல்கள் ஆகும். இவை சமீபத்தில் அறிமுகமான பிஎஸ்-6 தர உமிழ்வு விதி காரணமாக முந்தைய விலையைக் காட்டிலும் பல மடங்கு விலையுயர்வைச் சந்தித்திருக்கின்றன.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

இதனால், ஒரு சில பைக்குகள் ஒரு சின்ன வீட்டைக் கட்டும் அளவிற்கு விலையுயர்ந்தவையாக மாறியிருக்கின்றது. அதாவது, பிரிமியம் தரத்தில் விற்பனையில் இருக்கும் கார்களின் விலைக்கே டஃப் கொடுக்கின்ற அளவிற்கு மிக விலையுயர்ந்த பைக்குகளாக அவை உருவெடுத்துள்ளன. அந்தவரிசையில், நாம் முதலில் பார்க்கவிருப்பது ஹார்லி டேவிட்சனின் ஃபேட் பாய் பைக்கைப் பற்றிதான்.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

உலக புகழ்பெற்ற ஹார்லி டேவிட்சன் நிறுவனம், அதன் பிரபல மாடல்கள் சிலவற்றை இந்தியாவிலும் விற்பனைச் செய்து வருகின்றது. இதில் மிக அதிக விலையைக் கொண்ட மாடலாக ஃபேட் பாய் பைக் இருக்கின்றது. இந்த பைக்கின் முந்தைய தலைமுறை மாடலைதான் ஹாலிவுட் திரைப்படமான டெர்மினேட்டரில் ஆர்னால்ட் பயன்படுத்தியிருப்பார். இதன் புதிய தலைமுறை மாடலே தற்போது இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

கூடுதல் பிரம்மாண்ட தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த ஃபேட்பாய் ஹார்லிடேவிட்சன் கடந்த மாதம்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கிற்கு இந்திய மதிப்பில் ரூ. 18.25 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் மில்வாவுகீ-8 107 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 1,754 சிசி திறனை வெளிப்படுத்தும்.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

இதன் கூடுதல் திறனுடைய வெர்ஷனாக 114 பவர் பிளாணட்டைக் கொண்ட ஃபேட் பாயும் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதற்கு ரூ. 20.10 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவின் அதிக விலைக் கொண்ட பைக் ஆகும். இந்த மோட்டார்சைக்கிள்களில் வழங்கப்பட்டிருக்கும் அதிகபட்ச பிரிமியம் வசதிகளே இந்தளவிற்கு அதிக விலையைக் கொண்டு இவை விற்பனைக்குச் செய்யப்படுவதற்கான காரணமாக இருக்கின்றது.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

பிஎம்டபிள்யூ எஸ்1000 ஆர்ஆர்

சொகுசு கார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பிஎம்டபிள்யூ நிறுவனம், பிஎம்டபிள்யூ மோட்டாராட் எனும் பெயரில் பிரிமியம் தரத்திலான இருசக்கர வாகனங்களை உலக நாடுகள் பலவற்றில் விற்பனைச் செய்து வருகின்றது. அந்தவகையில், தற்போது இந்தியாவில் பிஎம்டபிள்யூ எஸ் 1000ஆர்ஆர் பைக்கின் புதிய தலைமுறை விற்பனையில் களமிறக்கப்பட்டுள்ளது. இது முந்தைய தலைமுறை பைக்கைக் காட்டிலும் கூடுதல் சிறப்பு அம்சங்கள் மற்றும் பிரமாண்ட தோற்றத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

பிஎம்டபிள்யூ எஸ் 1000ஆர்ஆர் பைக்கில் வழங்கப்பட்டிருக்கும் எலக்ட்ரானிக் கன்ட்ரோல்கள், அப்-பைக்கை கூடுதல் ஃபிரெண்ட்லி மாடலாக மாற்றியமைத்துள்ளது. இதுபோன்ற பல்வேறு பிரிமியம் அம்சங்களை இது கொண்டிருப்பதன் காரணத்தினாலயே அதிகபட்ச விலையில் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதாவது, ரூ. 18.50 என்ற விலை பிஎம்டபிள்யூ எஸ் 1000ஆர்ஆர் பைக்கிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 206 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க் திறன்களை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

டிரையம்ப் ராக்கட் 3 ஆர்

டிரையம்ப் நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக திறன் கொண்ட முதன்மையான மாடலாக இருக்கின்றது டிரையம்ப் ராக்கட் 3ஆர். இந்த பைக்கில் 2,458 சிசி திறன் கொண்ட இன்லைன்-3-சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்படுகின்றது. இது ஆயுதமேந்திய போர் விமானத்தின் எஞ்ஜினைப் போன்று அதிக சக்தியுடன் செயல்படும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

இதுவே, இந்தியாவில் இப்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் மிகப்பெரிய எஞ்ஜினுடைய பைக்காகும். இது அதிகபட்சமாக 221 என்எம் டார்க்கை 4,000 ஆர்பிஎம்மிலும், 167 பிஎஸ் பவரை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

இதுமட்டுமின்றி, டிராக்சன் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், நான்கு ரைடிங் மோட்கள், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட பல அதி-நவீன தொழில்நுட்ப வசதிகள் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த பைக் இந்தியாவில் ரூ. 18 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இது சிபியூ வாயிலாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதனாலேய இந்தளவிற்கு உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் 1100 டிசிடி

இந்தியாவில் பட்ஜெட் வாகனங்களை விற்பனைச் செய்து வரும் ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனம், ஒரு சில பிரிமியம் ரகத்திலான பைக்குகளையும் விற்பனைச் செய்து வருகின்றது. அந்தவகையில், இது இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கிய உச்சபட்ச விலையைக் கொண்ட மாடலாக ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் 1100 டிசிடி மாடல்கள் இருக்கின்றது.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

மிகப்பெரிய எஞ்ஜினைக் கொண்டிருக்கும் இந்த பைக் அட்வென்சர் ஸ்போர்ட்ஸ் ரகத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது இந்தியாவில் ரூ. 16.10 லட்சம் என்ற விலையில் கிடைக்கிறது.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கும் இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷன், பைக்கை திருப்பங்களில் தானியங்கி ஸ்கூட்டரைப் போல செல்ல அனுமதிக்கும். இது தவிர எல்சிடி டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் எல்இடி மின் விளக்குகளுடன் கூடி முழு வண்ண 6.5 இன்ச் டிஎஃப்டி தொடுதிரை டிஸ்ப்ளேவும் உள்ளிட்டவை பிரிமியம் அம்சங்களாக இதில் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

இதுமட்டுமின்றி, ஆறு ரைடிங் மோட்கள், கார்னரிங் ஏபிஎஸ், வீலி கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட சிறப்பு திறன்களும் இந்த பைக்கில் காணப்படுகின்றது. இதுமட்டுமின்றி, இந்த பைக்கில் 102 பிஎஸ் திறனையும், 105 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் எஞ்ஜின் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற பல்வேறு அம்சங்களின் காரணமாகவே இந்த பைக் இத்தகைய உச்சபட்ச விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

ஹார்லி டேவிட்சன் லோரைடர் எஸ்

2020 ஹார்லி டேவிட்சன் லோரைடர் எஸ் ஓர் மிகச்சிறந்த ஒல்லியான தேகமுடைய பைக்காகும். இது மற்ற பைக்குகளைப் போன்று பெரிய உருவத்தில் அல்லாமல் வழக்கமான பைக்குகளைப் போன்று காட்சியளிக்கும். இருப்பினும், இந்த வழக்கமான தோற்றத்திலும் லேசான மாறுபட்ட லுக்கை வழங்கும் வகையில் அது இருக்கின்றது. அதாவது லெய்ட்பேக் ஸ்போர்ட்டி லுக்கில் அது இருக்கின்றது.

இந்தியாவில் இவ்ளோ விலையுயர்ந்த பைக்குகளா..? இதுக்கு ஒரு சின்ன வீட்டையே கட்டிடலாமே!!

இந்த பைக்கில் மிகப்பெரிய 1868 சிசி மில்வாவுக்கி-8 114 ஏர்-கூல்டு வி-ட்வின் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 3,250 ஆர்பிஎம்மில் 155 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. ஃபேட் பாயைப் போலவே, இந்த மோட்டார் சைக்கிளும் நிலையான இரட்டை-சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. நாம் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் மிகவும் விலைக் குறைந்த மாடல் இதுவே ஆகும். இதனை ஹார்லி டேவிட்சன், இந்திய மதிப்பில் ரூ. 16.69 லட்சம் விலையில் விற்பனைச் செய்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Top 5 Most Expensive BS6 Bikes In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X