டார்க் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு மாடல் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்.. மீண்டும் சோதனை ஓட்டம்

மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் டார்க் மோட்டார்ஸ் தனது முதல் தயாரிப்பு மோட்டார்சைக்கிளான டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கை அறிமுகத்திற்கு முன்னதாக மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ளது.

டார்க் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு மாடல் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்.. மீண்டும் சோதனை ஓட்டம்

இதற்கு முன் பிப்ரவரி துவக்கத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த இந்த எலக்ட்ரிக் பைக் கடந்த வருடமே இந்திய சந்தையில் விற்பனையை துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

டார்க் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு மாடல் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்.. மீண்டும் சோதனை ஓட்டம்

ஆனால் அந்த நேரத்தில் வேறு சில நிறுவனங்களின் எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகமாகவுள்ளதாக கூறப்பட்டதால் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கின் அறிமுகம் தள்ளிப்போனது. இதன் இந்திய அறிமுகம் எப்போது இருக்கும் என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து வெளிவரவில்லை.

டார்க் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு மாடல் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்.. மீண்டும் சோதனை ஓட்டம்

டி6எக்ஸ் பைக்கிற்கு போட்டியாக வெளியான எலக்ட்ரிக் பைக்குகளில் சிலவற்றின் விலை குறித்த தகவல் கூட அந்த நேரத்தில் வெளியாகியிருந்தது. தற்போது சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள டார்க் எலக்ட்ரிக் பைக்கானது இதற்கு முன்பும் வெவ்வேறு விதமான சாலைகளில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது.

டார்க் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு மாடல் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்.. மீண்டும் சோதனை ஓட்டம்

தற்போதைய சோதனை ஓட்டத்தில் பைக் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எல்இடி தரத்தில் தாழ்வாக பொருத்தப்பட்ட ஹெட்லைட், முழுவதும் டிஜிட்டலில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஓட்டுனருக்கு மிக அருகாமையில் ஹேண்டில்பார், பெரிய அளவில் பின்புற பகுதி மற்றும் கூர்மையான உடற்பாக பேனல்கள் உள்ளிட்டவை இந்த எலக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

டார்க் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு மாடல் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்.. மீண்டும் சோதனை ஓட்டம்

இந்த இவி பைக் குறித்து வெளியாகிவரும் தகவல்களில் இந்த பைக்கில் சிங்கிள் சார்ஜில் சுமார் 100கிமீ வரை இயங்கக்கூடிய 72 Ah லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

டார்க் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு மாடல் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்.. மீண்டும் சோதனை ஓட்டம்

மேலும் இந்த பைக்குடன் வழங்கப்படும் விரைவான சார்ஜர் பேட்டரியை ஒரு மணிநேரத்தில் 80 சதவீதம் பூர்த்தி செய்துவிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்துவதற்காக இந்த பைக்கில் 6kW ப்ரஷ்லெஸ் டிசி மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

டார்க் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு மாடல் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்.. மீண்டும் சோதனை ஓட்டம்

இந்த எலக்ட்ரிக் மோட்டார் 25 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை அதிகப்பட்சமாக பைக்கிற்கு வழங்கவல்லது. இந்த எலக்ட்ரிக் பைக்கின் அதிகப்பட்ச வேகம் 100 km/h. இதன் மோட்டார் வெளிப்படுத்தவுள்ள ஆற்றல் குறைவாக இருந்தாலும், எரிபொருள் என்ஜினிற்கு மாற்றாக வரும் இத்தகைய இவி வாகனங்களுக்கு போதுமானதே.

டார்க் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு மாடல் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்.. மீண்டும் சோதனை ஓட்டம்

இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.5 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. டார்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கிற்கு சந்தையில் ரிவோல்ட் ஆர்வி400 முக்கிய போட்டி மாடலாக கருதப்படுகிறது.

டார்க் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு மாடல் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்.. மீண்டும் சோதனை ஓட்டம்

டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருவதால் இந்த பைக்கின் அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கலாம். ஏனெனில் தற்சமயம் இந்திய சந்தையில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக உள்ளது. இதனால் விற்பனை போட்டியை டார்க் மோட்டார்ஸால் எளிதாக சமாளிக்க முடியும்.

Source: Rushlane

Most Read Articles
English summary
Tork T6X electric motorcycle spied in near Pune.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X