அடுத்த வாரத்தில் அறிமுகமாகிறது ட்ரையம்பின் புதிய தயாரிப்பு... ராக்கெட் 3 ஜிடி...

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ச்சியாக புதிய தயாரிப்புகளை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள புதிய ராக்கெட் 3 ஜிடி பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

அடுத்த வாரத்தில் அறிமுகமாகிறது ட்ரையம்பின் புதிய தயாரிப்பு... ராக்கெட் 3 ஜிடி...

அறிமுகமான பிறகு இந்திய சந்தையில் ட்ரையம்ப் நிறுவனத்தின் அடையாளமாக விளங்கவுள்ள ராக்கெட் 3 பைக் மாடல் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிமுக தேதி புதிய டீசர் வீடியோ ஒன்றின் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்தில் அறிமுகமாகிறது ட்ரையம்பின் புதிய தயாரிப்பு... ராக்கெட் 3 ஜிடி...

மற்ற நாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள ராக்கெட் 3 அதில் இருந்து அப்படியே எல்லா பாகங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் இதன் ஜிடி வேரியண்ட் தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்றது என்பதை உணர்த்தும் விதமாக சில வசதிகளை பெற்றுள்ளது.

அடுத்த வாரத்தில் அறிமுகமாகிறது ட்ரையம்பின் புதிய தயாரிப்பு... ராக்கெட் 3 ஜிடி...

இதில் ஒன்று அகலமான ஹேண்டில்பார். இதனால் இந்த வேரியண்ட்டில் சற்று பின்னோக்கி நகர்ந்து அமர்ந்துதான் பைக்கை இயக்க முடியும். அதேபோல் இரு நிலைகளில் சூடுப்படுத்தப்பட்ட க்ரிப்களையும் ராக்கெட் 3 பைக்கின் ஜிடி வேரியண்ட் பெற்று வருகிறது.

அடுத்த வாரத்தில் அறிமுகமாகிறது ட்ரையம்பின் புதிய தயாரிப்பு... ராக்கெட் 3 ஜிடி...

இவற்றுடன் சிக்கலான ஸ்போக்டு அலாய் சக்கரங்களையும் கொண்டுள்ள இந்த வேரியண்ட்டில் சவுகரியமான ஓட்டுனர் இருக்கை மற்றும் பின் இருக்கை பயணிக்கு உயரத்தை சரி செய்யக்கூடியதாக பில்லன் இருக்கை உள்ளிட்டவை தொலைத்தூர பயணங்களுக்காக வழங்கப்பட்டுள்ளன.

அடுத்த வாரத்தில் அறிமுகமாகிறது ட்ரையம்பின் புதிய தயாரிப்பு... ராக்கெட் 3 ஜிடி...

இவை மட்டுமின்றி நன்கு பெரியதாக, எதிர்காற்றை தடுக்கும் முன்பக்க கண்ணாடி, தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ள கூடியதாக ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி மற்றும் மறைத்து வைக்க கூடியதாக பின் இருக்கை பயணியின் கால் வைக்கும் பகுதி போன்றவற்றையும் ட்ரையம்பின் இந்த க்ரூஸர் மோட்டார்சைக்கிள் பெற்று வருகிறது.

அடுத்த வாரத்தில் அறிமுகமாகிறது ட்ரையம்பின் புதிய தயாரிப்பு... ராக்கெட் 3 ஜிடி...

எல்இடி ஹெட்லேம்ப் இரண்டாகவும், பெட்ரோல் டேங்க் 18 லிட்டர் கொள்ளளவுடன் பெரியதாகவும் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் பெட்ரோல் டேங்கின் மூடி ஆனது மோன்ஸா ஸ்டைலில் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்தில் அறிமுகமாகிறது ட்ரையம்பின் புதிய தயாரிப்பு... ராக்கெட் 3 ஜிடி...

ஆனால் பைக்கிற்கு கவர்ச்சிகர தோற்றத்தை வளையாத இரும்பால் செய்யப்பட்ட எக்ஸாஸ்ட் தான் வழங்குகிறது. எலக்ட்ரானிக் ரைடர் தொகுப்புகளை கண்ட்ரோல் செய்ய டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ருமெண்ட் க்ளஸ்ட்டரை ராக்கெட் 3 ஜிடி பைக் கொண்டுள்ளது.

அடுத்த வாரத்தில் அறிமுகமாகிறது ட்ரையம்பின் புதிய தயாரிப்பு... ராக்கெட் 3 ஜிடி...

மழை, சாலை, ஸ்போர்ட் மற்றும் தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றக்கூடிய ஒன்று என மொத்தம் நான்கு ரைடிங் மோட்களுடன் விற்பனைக்கு வரும் இந்த ட்ரையம்ப் பைக்கில் ட்யூல்-சேனல் ஏபிஎஸ், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் உள்பட ஏகப்பட்ட வசதிகள் உள்ளன.

அடுத்த வாரத்தில் அறிமுகமாகிறது ட்ரையம்பின் புதிய தயாரிப்பு... ராக்கெட் 3 ஜிடி...

ராக்கெட் 3 ஜிடி பைக்கில் 2,458சிசி இன்லைன்-3 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-ல் 165 பிஎச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம்-ல் 221 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ஸ்லிப்-அசிஸ்ட் க்ளட்ச் மற்றும் இரு-திசை விரைவு மாற்றியை கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்தில் அறிமுகமாகிறது ட்ரையம்பின் புதிய தயாரிப்பு... ராக்கெட் 3 ஜிடி...

பிராண்டின் ஷாஃப்ட்-ட்ரைவன் இயக்கவியலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த க்ரூஸர் பைக்கில் சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் 47மிமீ-ல் தடிமனான ஃபோர்க்குகளும், பின்புறத்தில் முற்றிலும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ-ஷாக் செட்அப்-மும் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்தில் அறிமுகமாகிறது ட்ரையம்பின் புதிய தயாரிப்பு... ராக்கெட் 3 ஜிடி...

ப்ரேக்கிங் பணியினை கவனிக்க முன் சக்கரத்தில் கதிரியக்கமாக ஏற்றப்பட்ட எம்4.30 ஸ்டைலிமா மோனோப்ளாக் காலிபர்களுடன் 320மிமீ-ல் இரட்டை டிஸ்க்குகளும், பின் சக்கரத்தில் ப்ரெம்போ எம்4.32 4-பிஸ்டன் காலிபர்களுடன் 300மிமீ-ல் ஒற்றை டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்தில் அறிமுகமாகிறது ட்ரையம்பின் புதிய தயாரிப்பு... ராக்கெட் 3 ஜிடி...

பாண்டோம் கருப்பு நிறத்தில் விற்பனையை செய்யப்படவுள்ள இந்த பைக்கிற்கு சில்வர் ஐஸ்- ஸ்ட்ரோம் க்ரே என்ற ட்யூல்-டோன் நிறத்தேர்வும் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. அதிக மைலேஜ் வழங்கக்கூடியதாக ராக்கெட் 3 ஜிடி பைக் விளங்குவதால் தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்றதாக விளங்கும் அதேநேரத்தில் எலக்ட்ரானிக்ஸ் தொகுப்புகள் மூலமாக ஓட்டுனருக்கும் மிகுந்த நம்பிக்கையை வழங்கும்.

Most Read Articles

English summary
Triumph Rocket 3 GT India Launch Teaser
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X