இந்த இ-பைக்கின் விலை நிச்சயம் உங்களுக்கு மயக்கத்தை வர வைக்கலாம்... அப்படி என்னங்க விலை?

மயக்கத்தை வர வைக்கும் விலையில் டிரையம்ப் நிறுவனத்தின் ஜிடி இ-பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இந்த இ-பைக்கின் விலை நிச்சயம் உங்களுக்கு மயக்கத்தை வர வைக்கலாம்... அப்படி என்னங்க விலை?

பிரிட்டிஷ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் உலகப் புகழ்வாய்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனம் டிரையம்ப். இந்நிறுவனம், உலக தர வாய்ந்த இருசக்கர வாகனங்களை உலக நாடுகள் பலவற்றில் விற்பனைக்கு களமிறக்கி வருகின்றது. இது ஓர் பாரம்பரியமிக்க மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் ஆகும்.

இந்த இ-பைக்கின் விலை நிச்சயம் உங்களுக்கு மயக்கத்தை வர வைக்கலாம்... அப்படி என்னங்க விலை?

இந்நிறுவனம் கடந்த 1970 ஆம் ஆண்டில் இருந்து இரு சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. ஆரம்பகட்டத்தில் மிதிவண்டி ரகத்திலான மோட்டார்சைக்கிள்களை மட்டுமே அது விற்பனைக்கு களமிறக்கி வந்தது. இதைத் தொடர்ந்தே, நவீன யுகத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு, அட்டகாசமான வாகனங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது.

இந்த இ-பைக்கின் விலை நிச்சயம் உங்களுக்கு மயக்கத்தை வர வைக்கலாம்... அப்படி என்னங்க விலை?

இதை தற்போது வரையிலும் தொடர்ச்சியாக அது செய்து வருகின்றது. இந்நிலையில், மீண்டும் தனது பழைய தயாரிப்புகளை நினைவு கூறும் விதமாக டிரையம்ப் நிறுவனம், மிதிவண்டி ரகத்திலான மின்சார பைக்கை உலக சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. மின்சார ரகத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் வாகனமும் இதுவே ஆகும்.

இந்த இ-பைக்கின் விலை நிச்சயம் உங்களுக்கு மயக்கத்தை வர வைக்கலாம்... அப்படி என்னங்க விலை?

அந்த வாகனத்திற்கு டிரெக்கர் ஜிடி என்ற பெயரை டிரையம்ப் வைத்துள்ளது. மின்சார சைக்கிளா அப்போ அதோட விலை ரொம்ப கம்மியா இருக்குமோ! என நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், அதுதான் இல்லை. இந்த சைக்கிளுக்கு பிரித்தானிய நாட்டு மதிப்பில் 2,950 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இ-பைக்கின் விலை நிச்சயம் உங்களுக்கு மயக்கத்தை வர வைக்கலாம்... அப்படி என்னங்க விலை?

இது இந்திய மதிப்பில் எவ்வளவு தெரியுமா?, ரூ. 2.82 லட்சம் ஆகும். இன்றைய பண மாற்றம் அடிப்படையில் இந்த தொகை மதிப்பிடப்பட்டுள்ளது.

அப்படி என்னங்க இருக்கு இந்த இ-சைக்கிள்ல இவ்வளவு உயர்ந்த விலைய நிர்ணயிச்சு இருக்காங்க என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். அதுகுறித்த தகவல் பின்வருமாறு.

இந்த இ-பைக்கின் விலை நிச்சயம் உங்களுக்கு மயக்கத்தை வர வைக்கலாம்... அப்படி என்னங்க விலை?

இ-பைக்கின் சட்டகம் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த எடை மற்றும் உறுதி ஆகியவற்றின் காரணமாக அது பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டகத்தில்தான் ஷிமனோ ஸ்டெப்ஸ் இ6100 எனும் மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது 250வாட் திறனை வெளிப்படுத்தும் தன்மைக் கொண்டது.

இந்த இ-பைக்கின் விலை நிச்சயம் உங்களுக்கு மயக்கத்தை வர வைக்கலாம்... அப்படி என்னங்க விலை?

இந்த மின் மோட்டாருக்கான மின்திறனை ஷிமனோ இ8035 504டபிள்யூஎச் என்ற பேட்டரி வழங்குகின்றது. அது ஒரு முழுமையான சார்ஜில் 150 ரேஞ்ஜை வழங்கும் திறனைக் கொண்டது ஆகும். இது நம் நாட்டில் விற்பனயைில் இருக்கும் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு இணையானதாகும். எனவே, பல முன்னணி நிறுவனங்களின் இ-பைக் மற்றும் இ-ஸ்கூட்டர்களுக்கு இது செம்ம டஃப் கொடுக்கும் வகையில் உள்ளது.

இந்த இ-பைக்கின் விலை நிச்சயம் உங்களுக்கு மயக்கத்தை வர வைக்கலாம்... அப்படி என்னங்க விலை?

இந்த பேட்டரி மற்றும் மின் மோட்டார் ஆகியவை இ-பைக்கின் ஃபிரேமுக்குள்ளேயே நிறுவப்பட்டிருக்கின்றது. எனவே, மின் சாதனங்கள் திருட்டு அல்லது சேதம் என்ற அச்சம் இருக்காது.

மேற்கூறிய பல்வேறு அம்சங்கள் ஒன்றிணைந்தும் இ-பைக்கின் ஒட்டுமொத்த எடை 24 கிலோவாக மட்டுமே உள்ளது. ஆகையால், இதனை கையாள்வது மிக சுலபமாக இருக்கும் என தெரிகின்றது. இதில், மின் மோட்டார் மற்றும் பேட்டரியின் எடை 3 கிலோவாக உள்ளது.

இந்த இ-பைக்கின் விலை நிச்சயம் உங்களுக்கு மயக்கத்தை வர வைக்கலாம்... அப்படி என்னங்க விலை?

மேலும், இ-பைக்கில் எரிபொருளால் இருக்கும் மோட்டார்சைக்கிள்களில் வழங்கப்படுவதைப் போன்ற டிஜிட்டல் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. அது, இ-பைக்கின் வேகன், ரேஞ்ஜ், பேட்டரி அளவு, கியர் உள்ளிட்டவை பற்றிய தகவலை நமக்கு வழங்கும். இதேபோன்று, மின் மோட்டார் இயக்கத்திற்கு 4 விதமான மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. அது, மோட்டாரின் வேகத்தைக் கட்டுபடுத்த உதவும்.

இந்த இ-பைக்கின் விலை நிச்சயம் உங்களுக்கு மயக்கத்தை வர வைக்கலாம்... அப்படி என்னங்க விலை?

இத்துடன், ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக், எல்இடி மின் விளக்கு, கிக் ஸ்டாண்டு, பேனியர்ரேக், வீல் லாக், ஷில்லே ராயல் விவோ சேடில், முழு நீள ஃபெண்டர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து இந்த இ-பைக்கின் கவர்ச்சிக்காக மேட் சில்வர் மற்றும் மேட் ஜெட் பிளாக் ஆகிய நிறங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது ட்ரெக்கர் ஜிடி இ-பைக்கிற்கு கூடுதல் பிரிமியம் லுக்கை வழங்கும் வகையில் உள்ளது.

இந்த இ-பைக்கின் விலை நிச்சயம் உங்களுக்கு மயக்கத்தை வர வைக்கலாம்... அப்படி என்னங்க விலை?

இவையனைத்துக் காட்டிலும் மிக முக்கியமானதாக டிரையம்ப் ட்ரெக்கர் ஜிடி இ-பைக்கில் மிதிவண்டிகளில் காணப்படுவதைப் போன்று பெடல் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது, இ-பைக்கில் மின்சாரம் தீர்ந்துவிட்டால் பெடல் செய்தே சேரும் இடத்தை அடைய உதவும்.

இந்த இ-பைக்கின் விலை நிச்சயம் உங்களுக்கு மயக்கத்தை வர வைக்கலாம்... அப்படி என்னங்க விலை?

இந்த சிறப்பான மின்சார இ-பைக்கை பிரிட்டனில் மட்டுமின்றி அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய சந்தைகள் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது டிரையம்ப் நிறுவனம். ஆனால் ஜெர்மன் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் அது களமிறக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இதேபோன்று ஆசிய நாடுகள் சிலவற்றிலும் களமிறக்கப்படுவதற்கான சாத்தியம் மிகக்குறைவாகவே உள்ளது. இந்தியா அறிமுகமும் கேள்விக்குறியாகதான் இருக்கின்றது.

Most Read Articles
English summary
Triumph Introduced Brand's First Electric Bicycle Trekker GT With Price Rs.2.82 Lakh. Read In Tamil.
Story first published: Thursday, June 18, 2020, 17:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X