டிரையம்ப் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் இந்தியாவில் அறிமுகம்!

பல்வேறு வசதிகளை ஒருங்கே வழங்கும் டிரையம்ப் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிரையம்ப் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் இந்தியாவில் அறிமுகம்!

டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 1200 எக்ஸ்சி, ஸ்க்ராம்ப்ளர் எக்ஸ்இ, ராக்கெட் 3ஆர் மற்றும் ராக்கெட் 3 ஜிடி ஆகிய மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான பிரத்யேக இணைப்பு தொழில்நுட்பமாக இது வழங்கப்படுகிறது. இந்த தொழில்நுட்ப வசதிக்காக பிரத்யேக கருவி மற்றும் சாஃப்ட்வேர் ஆகியவை டிரையம்ப் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலமாக பெற முடியும்.

டிரையம்ப் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் இந்தியாவில் அறிமுகம்!

இந்த தொழில்நுட்ப வசதிக்கான சாதனத்திற்கு ரூ.19,568 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தை மேற்கண்ட மோட்டார்சைக்கிள்களின் டிஎப்டி திரையுடன் இணைத்துக் கொள்ள முடியும். இதற்காக, விசேஷ சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட வேண்டும்.

டிரையம்ப் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் இந்தியாவில் அறிமுகம்!

இதனை செய்து தருவதற்கு 60 நிமிடங்கள் பிடிக்குமாம். இதற்காக குறிப்பிட்ட தொகையை லேபர் சார்ஜாக டீலரில் தர வேண்டியிருக்கும். இந்த புதிய தொழில்நுட்ப வசதிகளை தரும் சாதனம் மற்றும் சாஃப்ட்வேர் மூலமாக இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் இணைத்துக் கொண்டால் மியூசிக் மற்றும் போன் அழைப்புகளை கட்டுப்படுத்தும் வசதியை பெற முடியும்.

டிரையம்ப் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் இந்தியாவில் அறிமுகம்!

அதேபோன்று, கோ புரோ கேமராவிற்கான கன்ட்ரோல் சிஸ்டமும் முதல்முறையாக இந்த தொழில்நுட்ப வசதி மூலமாக பெறும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அத்துடன், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியையும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்களுக்கு பெற முடியும்.

டிரையம்ப் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் இந்தியாவில் அறிமுகம்!

மோட்டார்சைக்கிளின் டிஎப்டி திரை மூலமாக பல்வேறு வசதிகளை பெறவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்பது சிறப்பாக கூறலாம்.

டிரையம்ப் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் இந்தியாவில் அறிமுகம்!

மை டிரையம்ப் என்ற அப்ளிகேஷனை ஆன்ட்ராய்டு அல்லது ஆப்பிள் சாதனங்களில் தரவிறக்கம் செய்து கொண்டு டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியை டிஎப்டி திரை வாயிலாக பெறும் வாய்ப்பும் கிடைக்கும். இதனால், கவனச் சிதறல் தவிர்க்கப்படும்.

டிரையம்ப் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் இந்தியாவில் அறிமுகம்!

மை டிரையம்ப் செயலி மூலமாக நீங்கள் பயணம் செய்யும் வழித்தடத்தை பதிவு செய்து கொள்ள முடிவதுடன், பயணம் தொடர்பான குறிப்புகளையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

டிரையம்ப் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் இந்தியாவில் அறிமுகம்!

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து டிரையம்ப் உருவாக்கி இருக்கும் புதிய நிகழ்நேர வழிகாட்டும் வசதியையும் பெற முடியும். இதனை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை மூலமாகவே பெற முடியும்.

டிரையம்ப் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் இந்தியாவில் அறிமுகம்!

மோட்டார்சைக்கிள் இதுவரை ஓடியுள்ள தூரம், எரிபொருள் செலவு, சர்வீஸ் ரிமைன்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் கூட இந்த புதிய தொழில்நுட்ப வசதி மூலமாக பெறும் வாய்ப்பு உள்ளது.

டிரையம்ப் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் இந்தியாவில் அறிமுகம்!

கோ புரோ கேமராவை மோட்டார்சைக்கிளின் டிஎப்டி திரை மூலமாகவே கட்டுப்படுத்த முடியும். இதுதவிர்த்து, கேமராவில் பேட்டரியில் மின்சார அளவு உள்ளிட்ட வசதிகளையும் பெற முடியும். கோ புரோ ஹீரோ 5 மற்றும் செசன் 5 அல்லது அதன் பின்னர் வந்த கோ புரோ கேமராக்களுக்கு இது இசைவாக செயல்படும்.

Most Read Articles
English summary
Triumph have introduced the new My Triumph Connectivity System in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X