ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள ஆக்ஸஸரீகளை இலவசமாக வழங்கும் ட்ரையம்ப்... நிஜமாவே தாராள மனசு தாங்க...

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் அதன் மாடர்ன் கிளாசிக் ரேஞ்ச் பைக்குகளுக்கான இலவச ஆக்ஸஸரீகளை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நேரம் வரையில் மட்டுமே வழங்கப்படவுள்ள இந்த இலவச ஆக்ஸஸரீகளை இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள ஆக்ஸஸரீகளை இலவசமாக வழங்கும் ட்ரையம்ப்... நிஜமாவே தாராள மனசு தாங்க...

ட்ரையம்ப் நிறுவனம் தற்போது அறிவித்துள்ள ஆக்ஸஸரீகளின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட ரூ.60,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இலவச ஆக்ஸஸரீகள் இந்நிறுவனத்தின் போனிவில் டி100 மற்றும் டி120 பைக்குகளை வாங்குவோருக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளன.

ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள ஆக்ஸஸரீகளை இலவசமாக வழங்கும் ட்ரையம்ப்... நிஜமாவே தாராள மனசு தாங்க...

இந்த கூடுதல் ஆக்ஸஸரீகள் செயல்பாட்டு, காஸ்மெட்டிக் மற்றும் செயல்திறன் என மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன. இதில் பைக்கின் செயல்பாட்டை அதிகப்படுத்தும் வகையில் பின்புற க்ராப் ரெயில், பொருட்களை வைப்பதற்கு தேவையான பெட்டகம், ரைடர் & பில்லன் பேக்ரெஸ்ட், என்ஜின் பேஷ் தட்டு மற்றும் சங்கிலி பாதுகாப்பான் போன்றவை ஆக்ஸஸரீகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள ஆக்ஸஸரீகளை இலவசமாக வழங்கும் ட்ரையம்ப்... நிஜமாவே தாராள மனசு தாங்க...

காஸ்மெட்டிக் அப்கிரேட்களாக வால்வு மூடிகள், ஆயில் தேக்கத்திற்கான மூடி, க்ளட்ச் கவர்கள், ஹேண்டில்பாருக்கு இரு முனைகளிலும் பொருத்தக்கூடிய கண்ணாடிகள், கருப்பு நிறத்தில் சக்கரங்கள், வண்ண நிறத்தில் ஃப்ளை ஸ்க்ரீன் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள ஆக்ஸஸரீகளை இலவசமாக வழங்கும் ட்ரையம்ப்... நிஜமாவே தாராள மனசு தாங்க...

செயல்திறன் மற்றும் எலக்ட்ரிக்கல் சம்மபந்தமான ஆக்ஸஸரீகள் என்று பார்த்தால், கஸ்டம் ஹெட் ரிங்ஸ், எல்இடி இண்டிகேட்டர்கள், க்ரூஸ் கண்ட்ரோல் கிட், ஹீட்டட் க்ரிப்கள், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய க்ளட்ச் மற்றும் ப்ரேக் லிவர்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் ஹோல்டர் தொகுப்பு போன்றவை உள்ளன.

ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள ஆக்ஸஸரீகளை இலவசமாக வழங்கும் ட்ரையம்ப்... நிஜமாவே தாராள மனசு தாங்க...

இந்த கூடுதல் ஆக்ஸஸரீகள் வழங்கப்படும் போனிவில் டி100 பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.8.87 லட்சமாகவும், போனிவில் டி120 பைக்கின் விலை சற்று அதிகமாக ரூ.9.97 லட்சமாகவும் உள்ளது. இவற்றில் டி100 பைக்கில் 900சிசி இணையான-இரட்டை என்ஜின் பொருத்தப்படுகிறது.

ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள ஆக்ஸஸரீகளை இலவசமாக வழங்கும் ட்ரையம்ப்... நிஜமாவே தாராள மனசு தாங்க...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 55 பிஎச்பி பவரையும், 77 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்படுகிறது. ட்ரான்ஸ்மிஷனிற்கு இதனுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. டி120 பைக்கில் 1,200சிசி இணையான-இரட்டை என்ஜின் பொருத்தப்படுகிறது.

ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள ஆக்ஸஸரீகளை இலவசமாக வழங்கும் ட்ரையம்ப்... நிஜமாவே தாராள மனசு தாங்க...

அதிகப்பட்சமாக 79 பிஎச்பி மற்றும் 105 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. என்ஜின் அமைப்பை தவிர்த்து இந்த இரு பைக் மாடல்களும் சஸ்பென்ஷன், ப்ரேக், எக்ஸாஸ்ட் சிஸ்டம், இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்பட அனைத்திலும் ஒத்து போகக்கூடியன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Triumph Bonneville T100 and T120 are now available with free accessories worth INR 60,000
Story first published: Friday, July 24, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X