புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ர்ப்பிள் ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ட்ரையம்ஃப் நிறுவனத்தின் புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ர்ப்பிள் ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ட்ரையம்ஃப் நிறுவனம் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் என்ற குடும்பத்தில் ரோட்ஸ்டெர் ஸ்டைலிலான பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில், விலை குறைவான ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் வரிசையிலான ரோட்ஸ்டெர் மாடலாக ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர் பைக் இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ர்ப்பிள் ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக் பல நாடுகளில் மிக நீண்டகாலமாக விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் எஸ் மாடலுக்கு மாற்றாக இந்த புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ர்ப்பிள் ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், ஏற்கனவே விற்பனையில் உள்ள ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் மாடலைவிட இது விலை குறைவான தேர்வாக இருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமையும். புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர் பைக் மாடலுக்கு ரூ.8.84 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் மாடல் ரூ.11.33 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த புதிய மாடல் ரூ.2.49 லட்சம் விலை குறைவானது என்பதும் கவனிக்கத்தக்கது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ர்ப்பிள் ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர் மாடலில் வண்டுகளின் கூட்டுக் கண்களை பிரதிபலிக்கும் வகையிலான எல்இடி ஹெட்லைட் இடம்பெற்றுள்ளது. அதனுடன் எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய ஃப்ளை ஸ்க்ரீன் அமைப்பு இடம்பெற்றுள்ளது. முறுக்கலான பெட்ரோல் டேங்க், ட்ரெல்லிஸ் ஃப்ரேம், அடக்கமான தோற்றம் கொண்ட சைலென்சர், வசீகரிக்கும் விதத்திலான வால் பகுதி ஆகியவை இதன் முக்கிய டிசைன் அம்சங்களாக உள்ளன.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ர்ப்பிள் ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. டிஎஃப்டி திரை இல்லை என்பது பெரிய குறையாக இருக்கிறது. இந்த பைக்கில் முன்புறத்தில் எம்4.32 ரக 4 பிஸ்டன் மோனோ பிளாக் காலிபர்கள் கொண்ட 310 மிமீ இரட்டை டிஸ்க்குளுடன் பிரேக் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ர்ப்பிள் ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

முன்புறத்தில் முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய 41 மிமீ ஷோவா ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஷோவா மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. பைரெல்லி பெர்ஃபார்மென்ஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ர்ப்பிள் ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர் பைக்கில் மூன்று சிலிண்டர்கள் கொமண்ட 765சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 116 பிஎச்பி பவரையும், 79 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ரைடு பை ஒயர் சிஸ்டம், ரோடு, ரெயின் மற்றும் ஸ்போர்ட் என்ற மூன்று விதமான டிரைவிங் மோடுகள் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளன.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ர்ப்பிள் ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர் பைக் மாடலானது மேட் சில்வர் ஐஸ் மற்றும் சஃபையர் பிளாக் ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். நடுத்தர வகை பிரிமீயம் பைக் மாடல்களை வாங்க திட்டமிடுவோருக்கு சிறந்த பட்ஜெட்டில், அதிக மதிப்புவாய்ந்த தேர்வாக அமையும்.

Most Read Articles

English summary
Triumph Motorcycles India launches the Street Triple R motorcycle in the Indian market. The new street-naked performance motorcycle is priced at Rs 8.84 lakh, ex-showroom (India). Bookings for the motorcycle has already started ahead of launch.
Story first published: Tuesday, August 11, 2020, 12:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X