இதென்ன மாடலா இருக்கும்? மாறுபட்ட ஸ்டைலில் முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய ராயல் என்பீல்டு!

ராயல் என்பீல்டு தயாரிப்பில் மிக விரைவில் அறிமுகமாக இருக்கின்ற வித்தியாசமான தோற்றமுடைய பைக் ஒன்று முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இது என்ன மாடலா இருக்கும்..? மாறுபட்ட ஸ்டைலில் முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய ராயல் என்பீல்டு பைக்..!

தமிழகத்தின் தலைநகரான சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு, இருசக்கர வாகன உற்பத்தியில் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்ந்து வருகின்றது. இந்நிறுவனம், அதன் பிரபல தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றது. ஆனால், இது இப்போதைய ஹாட் டாபிக்க அல்ல. சமீபத்தில் சென்னையில் சாலையில் ராயல் என்பீல்டு பேட்ஜ்களுடன் முற்றிலும் வித்தியாசமான பைக் ஒன்று பைக் வலம் வந்தவாறு இருந்துள்ளது.

இது என்ன மாடலா இருக்கும்..? மாறுபட்ட ஸ்டைலில் முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய ராயல் என்பீல்டு பைக்..!

இதுதான் தற்போது வாகனத்துறையின் ஹாட் டாபிக்காக மாறியிருக்கின்றது. முன்னதாக, ராயல் என்பீல்டின் பிரபல தயாரிப்புகளை அந்நிறுவனம் பிஎஸ்-6 தரத்திற்கு அப்கிரேட் செய்துகொண்டிருக்கும் அதேவேலையில் அனைத்து தரப்பு மக்களையும் தங்கள் வசம் ஈர்க்கும் விதமாக ஓர் தயாரிப்பை வெளியிட இருப்பதாக அது அறிவித்திருந்தது.

இது என்ன மாடலா இருக்கும்..? மாறுபட்ட ஸ்டைலில் முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய ராயல் என்பீல்டு பைக்..!

அந்தவகையில், பெண்கள் மற்றும் மெல்லிய தேகமுடைய இளைஞர்கள் பயன்படுத்துகின்ற வகையிலான புதிய பைக்கை அது தயாரிக்க இருப்பதாக கூறியிருந்தது.

இது என்ன மாடலா இருக்கும்..? மாறுபட்ட ஸ்டைலில் முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய ராயல் என்பீல்டு பைக்..!

இந்த பைக்தான் தற்போது கேமிராவின் கண்களில் முதல் முறையாக சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதற்கு முன்னதாக ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் என்ற பெயரில் புதிய தயாரிப்பிற்கான காப்புரிமையைப் பெற்றிருந்தது. ஆகையால், இப்போது ஸ்பை செய்யப்பட்டிருக்கும் புதிய பைக் ஹண்டர் என்ற புதிய மாடலாகவும் இருக்கலாம் என் கருதப்படுகின்றது.

இது என்ன மாடலா இருக்கும்..? மாறுபட்ட ஸ்டைலில் முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய ராயல் என்பீல்டு பைக்..!

ஆனால், இவைகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் ராயல் என்பீல்டு தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. அதேசமயம், இந்த பைக்கைப் பார்ப்பதற்கு ராயல்என்பீல்டு தண்டர்பேர்டு போன்று காட்சியளிக்கின்றது. ஆகையால், இது எந்த மாடல் என்பது புரியாத புதிராகவே உள்ளது. மேலும், இது மர்மமான மாடலகவே சித்தரிக்கப்பட்டு வருகின்றது.

இது என்ன மாடலா இருக்கும்..? மாறுபட்ட ஸ்டைலில் முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய ராயல் என்பீல்டு பைக்..!

இந்த புத்தம் புதிய மர்மமான பைக்கை ராயல் என்பீல்டு பல பரீட்சை செய்துக் கொண்டிருக்கும் அதேவேலையில், அடுத்த தலைமுறை தண்டர்பேர்டு பைக்கையும் அது பல பரீட்சையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இந்த பைக் தண்டர்பேர்டாகவும் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இது என்ன மாடலா இருக்கும்..? மாறுபட்ட ஸ்டைலில் முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய ராயல் என்பீல்டு பைக்..!

ஏனென்றால், இந்த பைக்கில் காணப்படும் ஒற்றை நீளமான இருக்கை மற்றும் அமைப்பு உள்ளிட்டவை தண்டர்பேர்டு எக்ஸ் 350 மாடலை ஒத்தவாறே இருக்கின்றது.

இதற்கேற்ப, தற்போது ஸ்பை செய்யப்பட்டிருக்கும் பைக்கில் காணப்படும் எஞ்ஜின் 350சிசி திறன் கொண்ட ஏர்-கூல்ட் சிங்கிள் சிலிண்டர் என்பது தெரியவந்துள்ளது.

இது என்ன மாடலா இருக்கும்..? மாறுபட்ட ஸ்டைலில் முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய ராயல் என்பீல்டு பைக்..!

ஏற்கனவே, ராயல் என்பீல்டு நிறுவனம் 250சிசி திறன் கொண்ட சிறிய ரக பைக்கை தயாரித்து வருவதாக இணையத்தில் வதந்திகள் பரவிய வண்ணம் இருக்கின்றது. இந்தநிலையில், இந்த விநோத பைக் புதிய தகவல்களை பரப்பிய வண்ணம் இருக்கின்றது.

இது என்ன மாடலா இருக்கும்..? மாறுபட்ட ஸ்டைலில் முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய ராயல் என்பீல்டு பைக்..!

ஆனால், மிக விரைவில் ராயல் என்பீல்டு நிறுவனம் தண்டர்பேர்டு அல்லது தண்டர்பேர்டு எக்ஸ் மாடலில் மிக மலிவான விலைக் கொண்ட பைக்கை களமிறக்குவது உறுதியாக தெரிகின்றது.

அது, தற்போது மிகப்பெரிய போட்டியாளனாக உருவாகியிருக்கும் ஜாவா நிறுவனத்தின் ஜாவா 42 மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் கெத்தாக நிற்கும். இதுவரை, ஜாவா42-க்கு இந்திய சந்தையில் போட்டியாளன் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இது என்ன மாடலா இருக்கும்..? மாறுபட்ட ஸ்டைலில் முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய ராயல் என்பீல்டு பைக்..!

புதிய பைக் ட்ரையம்ப் ஸ்ட்ரீட் மாடலில் இருப்பதால் ஜாவா மட்டுமின்றி பெனல்லி இம்பீரியல் 400 போன்ற பைக்குகளுக்கும் போட்டியை வழங்கலாம். ஆனால், இதன் எஞ்ஜின் தரத்தைப் பொருத்தே அது அமையும்.

இது என்ன மாடலா இருக்கும்..? மாறுபட்ட ஸ்டைலில் முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய ராயல் என்பீல்டு பைக்..!

தற்போது, காட்சிக்குள்ளாகியிருக்கும் புதிய பைக் லேசான ஸ்போர்ட்ஸ் லுக்கையும் பெற்றிருக்கின்றது. ஆகையால், இது சந்தையில் புது புரட்சியை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது வரும் காலத்திலேயே உறுதியாக தெரியும்.

Source: Auto Car India

Most Read Articles

English summary
Triumph Styled Royal Enfield Mysterious Bike Spied First Time. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X