சாகசப் பயணங்களை எளிதாக்கும் அம்சங்களுடன் புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் இந்தியாவில் அறிமுகம்!

அசத்தும் அம்சங்களுடன் புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக் பற்றிய முக்கிய விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

அட்வென்ச்சர் டூரர் எனப்படும் சாகசப் பயணத்திற்கு ஏற்ற பைக் மாடல்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கூடி வருகிறது. பட்ஜெட் மாடல்களிலிருந்து பிரிமீயம் வகையிலான மாடல்கள் வரை அட்வென்ச்சர் டூரர் பைக்குகளுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு இருக்கிறது.

புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

பிரிமீயம் வகை அட்வென்ச்சர் பைக் மார்க்கெட்டில் ட்ரையம்ஃப் நிறுவனத்தின் டைகர் 800 எக்ஸ்ஆர் வரிசையில் விற்பனையாகும் பைக் மாடல்கள் முக்கிய தேர்வாக இருந்து வருகின்றன. இந்த நிலையில், டைகர் 800 எக்ஸ்ஆர் பைக் மாடல்களுக்கு மாற்றாக அதிக சிறப்பம்சங்கள் கொண்ட டிரையம்ஃப் டைகர் 900 பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், அதிக சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக்கில் இடம்பெற்றுள்ளன. புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் மாடலானது சாதாரண சாலைக்கு ஏற்ற ஜிடி என்ற வேரியண்ட்டிலும், ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற ராலி மற்றும் ராலி புரோ என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக்கில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 888சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட இதன் எஞ்சினில் இலகு எடை பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், 2.5 கிலோ எடை குறைந்துள்ளது. இந்த பைக்கின் எஞ்சின் 94 பிஎச்பி பவரையும், 87 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

பழைய மாடலைவிட 10 சதவீதம் அதிக டார்க் திறனை இதன் எஞ்சின் வழங்கும். பழைய மாடலைவிட சிறப்பான சைலென்சர் சப்தம் வெளிப்படுத்தும் விதத்தில், இதன் எஞ்சின் ஃபயரிங் ஆர்டர் மாற்றப்பட்டுள்ளது.

புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. புளூடூத் இணைப்பு மூலமாக இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை ஸ்மார்ட்போனுடன் இணைக்கும் வசதி உள்ளது.

புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

போன் அழைப்புகள், குறுந்தகவல்களை படிப்பதற்கான வசதி மற்றும் நேவிகேஷன் வசதியும் உள்ளது. கோ புரோ கேமராவையும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமாக இணைத்து கட்டுப்படுத்துவதற்கான சுவிட்சுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

ரைடு பை ஒயர் தொழில்நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், 6 ஸ்பீடு இனர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட், சாலை நிலை மற்றும் ஓட்டுனருக்கு தேவையாக மாற்றிக் கொள்ளும்படியான 6 விதமான ரைடிங் மோடுகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

ட்ரையம்ஃப் டைகர் 900 ஜிடி வேரியண்ட்டில் முன்புறத்தில் மர்சோச்சி 45மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளது. ராலி மற்றும் ராலி புரோ ஆகிய விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் முன்புறத்தில் ஷோவா 45 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 ஜிடி வேரியண்ட்டிற்கு ரூ.13.70 லட்சம் விலையும், ராலி வேரியண்ட்டிற்கு ரூ.14.35 லட்சம் விலையும், ராலி புரோ வேரியண்ட்டிற்கு ரூ.15.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பே இந்த பைக்கிற்கு முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. ரூ.50,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950, பிஎம்டபிள்யூ எஃப்900 எக்ஸ்ஆர் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Triumph Motorcycles have launched their all-new Tiger 900 adventure-tourer motorcycle in the Indian market. The all-new Triumph Tiger 900 replaces its predecessor, the Tiger 800 XR range in the Indian market.
Story first published: Friday, June 19, 2020, 14:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X