அட்வென்ஜெர் பயணத்திற்கும் ஏற்ற விதத்தில் டைகர் 900... புதிய டீசரை வெளியிட்டது ட்ரையம்ப்...

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிய டைகர் 900 மாடலின் டீசர் படத்தை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

அட்வென்ஜெர் பயணத்திற்கும் ஏற்ற விதத்தில் டைகர் 900... புதிய டீசரை வெளியிட்டது ட்ரையம்ப்...

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சில வாரத்திற்கு முன்பு டைகர் 800 மாடலுக்கு பதிலாக டைகர் 900 மாடலை முதன்முறையாக தனது அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திற்கு கொண்டு வந்தது. 2020 ஆண்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக்கில் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள் ப்ராண்ட்டான இந்நிறுவனம் புதிய டிசைன் அமைப்பை அமல்படுத்தியுள்ளது.

MOST READ: பருவமழை ஆரம்பமாக போகுது... மழைநீரால் ஏற்படும் வாகன பழுதுகளை தடுப்பது எப்படி...?

அட்வென்ஜெர் பயணத்திற்கும் ஏற்ற விதத்தில் டைகர் 900... புதிய டீசரை வெளியிட்டது ட்ரையம்ப்...

இருப்பினும் ட்ரையம்ப் நிறுவனத்திற்கே உண்டான முரட்டுத்தனமான மற்றும் கூர்மையான தோற்றத்தை இந்த பைக்கில் நிச்சயம் எதிர்பார்க்கலாம். டைகர் 900, டைகர் 900ஜிடி, டைகர் 900ஜிடி லோ, டைகர் 900ஜிடி ப்ரோ, டைகர் 900 ரலி மற்றும் டைகர் 900 ரலி ப்ரோ என 6 விதமான வேரியண்ட்களில் இந்த 900சிசி தயாரிக்கப்பட்டாலும், இந்தியாவில் 2 அல்லது 3 வேரியண்ட்களில் மட்டும் தான் சந்தைப்படுத்தப்படும்.

அட்வென்ஜெர் பயணத்திற்கும் ஏற்ற விதத்தில் டைகர் 900... புதிய டீசரை வெளியிட்டது ட்ரையம்ப்...

இதில் அனைத்து வேரியண்ட்களிலும் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 888சிசி இன்லைன்-3 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதன் முன்னோடி மாடல்களுக்கு இணையாக 94 பிஎச்பி பவரை தான் வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டிருந்தாலுல் டைகர் 800 மாடலை விட 10 சதவீதம் கூடுதலாக 7250 ஆர்பிஎம்-ல் 87 என்எம் டார்க் திறனை இந்த புதிய டைகர் 900 பைக்கிற்கு வழங்கும்.

MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க

அட்வென்ஜெர் பயணத்திற்கும் ஏற்ற விதத்தில் டைகர் 900... புதிய டீசரை வெளியிட்டது ட்ரையம்ப்...

டைகர் 900 பைக்கின் ஜிடி வரிசை வேரியண்ட்கள் நகர்புற சாலைகளுக்கு ஏற்ற விதத்திலும் அலாய் சக்கரங்களை கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மார்சோச்சி நிறுவனத்தின் சஸ்பென்ஷன் செட்அப் 180மிமீ ட்ராவலில் முன் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

அட்வென்ஜெர் பயணத்திற்கும் ஏற்ற விதத்தில் டைகர் 900... புதிய டீசரை வெளியிட்டது ட்ரையம்ப்...

இந்த சஸ்பென்ஷன் அமைப்பு பைக்கிற்கு ப்ரீ-லோடு மற்றும் ரீபாண்ட் அட்ஜெஸ்ட்மெண்ட்டை வழங்கும். அதுவே டைகர் 900 ரலி வேரியண்ட்கள் ஸ்போக் சக்கரங்களுடன் ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற உபகரணங்களுடன் விற்பனை செய்யப்படவுள்ளது.

MOST READ: நிதி இழப்பை சமாளிக்க புதிய திட்டங்கள்... உபி முதலமைச்சர் அதிரடி அறிவிப்பால் அரசு ஊழியர்கள் கலக்கம்!

அட்வென்ஜெர் பயணத்திற்கும் ஏற்ற விதத்தில் டைகர் 900... புதிய டீசரை வெளியிட்டது ட்ரையம்ப்...

இதில் சஸ்பென்ஷனிற்கு ஷோவா செட்அப் முன்புறத்தில் 240மிமீ ட்ராவல் உடனும் பின்புறத்தில் 230மிமீ ட்ராவலுடன் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்கிங் பணியை கவனிக்க டைகர் 900 மாடலின் இந்த இரு விதமான வேரியண்ட்களிலும் ப்ரெம்போ ஸ்டைலிமா காலிபர்களுடன் முன் சக்கரத்தில் ட்வின்-டிஸ்க்கும், பின் சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளது.

அட்வென்ஜெர் பயணத்திற்கும் ஏற்ற விதத்தில் டைகர் 900... புதிய டீசரை வெளியிட்டது ட்ரையம்ப்...

இவை தவிர்த்து ஐந்து ரைடிங் மோட்கள், ட்ராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ப்ளூடூத் இணைப்புடன் புதிய முழு-வண்ண நிறத்தில் 7 இன்ச்சில் டிஎஃப்டி திரை உள்ளிட்டவற்றையும் புதிய டைகர் 900 மாடலில் ட்ரையம்ப் நிறுவனம் வழங்கியுள்ளது.

MOST READ: பட்டுனு பைக் இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்கணுமா?... சட்டுனு இங்கே க்ளிக் பண்ணுங்க!

அட்வென்ஜெர் பயணத்திற்கும் ஏற்ற விதத்தில் டைகர் 900... புதிய டீசரை வெளியிட்டது ட்ரையம்ப்...

இவற்றுடன் இதன் ப்ரோ வேரியண்ட்கள் ஹீட்டட் க்ரிப்கள், ஷிஃப்ட் அசிஸ்ட் மற்றும் டயரின் அழுத்தத்தை அளவிடும் மானிட்டரிங் சிஸ்டம் போன்றவற்றையும் நிலையாக பெற்றுள்ளது. இத்தகைய அம்சங்களை பெற்ற ட்ரையம்ப் டைகர் 900 மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
New Triumph Tiger 900 teased; India launch soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X