2020 டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள தேதி இதுதானாம்...

டிரையம்ப் நிறுவனம் தனது புதிய மிடில்-வெய்ட் ஸ்ட்ரீட் ஃபைட்டர் மாடல் பைக்கான 2020 ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்-ஐ வருகிற மார்ச் 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. முந்தைய பைக் மாடலை விட அப்டேட் வெர்சன் ஆக சந்தைக்கு வர உள்ள இந்த புதிய பைக்கை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக்கின் இந்திய அறிமுக தேதி வெளிவந்தது...

ஸ்ட்ரீட் ட்ரிபிள் மாடலின் டாப் வேரியண்ட்டான ஆர்எஸ், எஸ் மற்றும் ஆர் என்ற இரு ட்ரிம்களில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. தற்போதைய மாடலை விட மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த 2020 எடிசன் பைக் ரீ-டிசைனில் முன்புறத்தை கொண்டுள்ளது. இதனால் இந்த 2020 பைக்கின் முன்புறம் முன்பைவிட ஸ்டைலாக உள்ளது.

2020 டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக்கின் இந்திய அறிமுக தேதி வெளிவந்தது...

ட்வின் ஹெட்லேம்ப் அமைப்பை இந்த பைக் மீண்டும் பெற்றிருந்தாலும் ஹெட்லேம்பின் டிசைன் நேர்த்தியாக உள்ளது. ஹெட்லேம்ப் மட்டுமின்றி பெட்ரோல் டேங்க் மற்றும் அதன் எக்ஸ்டென்ஷன்ஸ், ரேடியேட்டரை பாதுகாக்கும் செட்-அப், பெல்லி பேன் மற்றும் பின்புறப் பகுதி உள்ளிட்டவையும் நுட்பமான மாற்றங்களை பெற்றுள்ளன.

2020 டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக்கின் இந்திய அறிமுக தேதி வெளிவந்தது...

புதிய ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக்கில் வழக்கமான 765 இன்- லைன் 3 சிலிண்டர் என்ஜினை தான் டிரையம்ப் நிறுவனம் பொருத்தியுள்ளது. அதிகபட்சமாக 11,750 ஆர்பிஎம்-ல் 121 பிஎச்பி பவரையும்78.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த என்ஜினை கூடுதல் சுத்திகரிப்பு மற்றும் சிறந்த மிட்-ரேஞ்ச் செயல்படுத்திறனிற்காக தனது மோட்டோ2 என்ஜினீயரிங் குழு மூலம் டிரையம்ப் நிறுவனம் திருத்தி அமைத்துள்ளது.

2020 டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக்கின் இந்திய அறிமுக தேதி வெளிவந்தது...

இதனால் முன்பைவிட 7% குறைவான சுழலும் கால அளவை பெற்றுள்ள இந்த என்ஜின் புதிய எக்ஸாஸ்ட் சிஸ்டம், புதிய இன் டேக் மற்றும் லைட்டர் க்ரான்ங் மற்றும் க்ளட்ச்சை பெற்றுள்ளது. என்ஜினை போன்று இந்த என்ஜின் உடன் அதே 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் அமைப்பு தான் இணைக்கப்பட்டுள்ளது.

2020 டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக்கின் இந்திய அறிமுக தேதி வெளிவந்தது...

ஆனால் தற்போது இந்த 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் விரைவான ஷிப்டர் மூலமாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் இந்த 2020 ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக் ப்ளூடூத் இணைப்பை ஏற்கும் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், நான்கு விதமான ரைடிங் மோட் மற்றும் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளது.

2020 டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக்கின் இந்திய அறிமுக தேதி வெளிவந்தது...

இவை மட்டுமின்றி முன்புறத்தில் முழுவதும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய தலைகீழான ஷோவா ஃபோர்க்ஸ், பின்புறத்தில் ஹோலின்ஸ் மோனோஷாக் போன்ற பிரீமியம் பக்கங்களையும் இந்த பைக் கொண்டுள்ளது. பிரேக்கிங் பணிக்காக இதன் 17 இன்ச் க்ரிப்பி சூப்பர்கோர்ஸா எஸ்பி வி3 டயர்களை கொண்ட சக்கரங்களுடன் ப்ரெம்போ ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

2020 டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக்கின் இந்திய அறிமுக தேதி வெளிவந்தது...

தற்சமயம் விற்பனையாகிக் கொண்டிருக்கும் டிரையம்ப் ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.11.13 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைவிட விரைவில் சந்தைக்கு வர உள்ள இந்த 2020 வெர்சன் பைக்கின் விலையை சிறிது கூடுதலாக எதிர்பார்க்கலாம்.

2020 டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக்கின் இந்திய அறிமுக தேதி வெளிவந்தது...

டிரையம்ப் நிறுவனத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான முதல் மோட்டார் சைக்கிள் ஆக சந்தைக்கு வரும் இந்த 2020 ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மாடலின் அறிமுகத்திற்கு சில மாதங்கள் கழித்து இந்நிறுவனத்தின் 900 சிசி பைக் மாடலான ட்ரையம்ப் டைகர் 900 அறிமுகமாக உள்ளது.

Most Read Articles

English summary
Triump to launch new gen street tripple rs on 25th march
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X