விலை குறைவான ட்ரையம்ஃப் பைக்கின் இந்திய வருகை விபரம் வெளியானது!

ட்ரையம்ஃப் நிறுவனத்தின் விலை குறைவான புதிய பைக் மாடல் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற விபரம் வெளியாகி இருக்கிறது.

 விலை குறைவான ட்ரையம்ஃப் பைக்கின் இந்திய வருகை விபரம் வெளியானது!

இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் நிறுவனம் பிரிமீயம் பைக் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவிலும் ட்ரையம்ஃப் பைக் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், அண்மையில் டிரைடென்ட் என்ற புதிய பைக்கின் புரோட்டோடைப் மாடலை சர்வதேச அளவில் அறிமுகம் செய்தது.

 விலை குறைவான ட்ரையம்ஃப் பைக்கின் இந்திய வருகை விபரம் வெளியானது!

இந்த புதிய ரோட்ஸ்டெர் ஸ்ட்ரீட் ரக பைக் மாடலானது ட்ரையம்ஃப் நிறுவனத்தின் விலை குறைவான மாடலாக வர நிலைநிறுத்தப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.

விலை குறைவான ட்ரையம்ஃப் பைக்கின் இந்திய வருகை விபரம் வெளியானது!

இதனால், உலக அளவில் இந்த பைக் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய டிரைடென்ட் பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள தகவலும் வெளியாகி இருக்கிறது.

விலை குறைவான ட்ரையம்ஃப் பைக்கின் இந்திய வருகை விபரம் வெளியானது!

இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆட்டோ தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ட்ரையம்ஃப் இந்திய நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் ஷோயப் ஃபாரூக் கூறுகையில்,"எங்களது பைக் மாடல்களில் விலை குறைவானதாக டிரைடென்ட் பைக்கை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளோம்.

விலை குறைவான ட்ரையம்ஃப் பைக்கின் இந்திய வருகை விபரம் வெளியானது!

தற்போது ரூ.7.45 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து ஸ்ட்ரீட் ட்வின் பைக் மாடல்கள் கிடைக்கின்றன. எனவே, இந்த விலையை ஒட்டி அல்லது இதனை விலை குறைவானதாக டிரைடென்ட் பைக்கை நிலைநிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளோம். எனினும், வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில்தான் விலை நிர்ணயம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.

விலை குறைவான ட்ரையம்ஃப் பைக்கின் இந்திய வருகை விபரம் வெளியானது!

அதேநேரத்தில், தோதான ஆரம்ப விலையில் கொண்டு வருவோம். இந்த புதிய பைக் மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். டிரைடென்ட் எங்களுக்கு மிகவும் முக்கியமான பைக் மாடலாக கருதுகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

விலை குறைவான ட்ரையம்ஃப் பைக்கின் இந்திய வருகை விபரம் வெளியானது!

புதிய ட்ரையம்ஃப் டிரைடென்ட் பைக் மாடலானது புத்தம் புதிய சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், தொழில்நுட்பத்தில் மிகவும் சிறப்பான பைக் மாடலாக இருக்கும். மூன்று சிலிண்டர்கள் எஞ்சினுடன் வரும் இந்த புதிய பைக் மாடலானது நடுத்தர வகை பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்படும்.

விலை குறைவான ட்ரையம்ஃப் பைக்கின் இந்திய வருகை விபரம் வெளியானது!

வடிவமைப்பு, தொழில்நுட்பம், செயல்திறன் என அனைத்திலும் சிறந்த தேர்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது. கவாஸாகி இசட்650 பைக் மாடலுக்கு நேரடி போட்டியாக அமையும் வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
Triumph is planning to launch all new Trident bike in India by early next year.
Story first published: Thursday, September 17, 2020, 10:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X