விலையை உயர்த்திய அதேநேரம் அப்பாச்சி ஆர்டிஆர்200-க்கு சலுகைகளை அறிவித்த டிவிஎஸ்! நல்ல மனசுகாரங்க

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கின் விலையை இந்திய சந்தையில் உயர்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

விலையை உயர்த்திய அதேநேரம் அப்பாச்சி ஆர்டிஆர்200-க்கு சலுகைகளை அறிவித்த டிவிஎஸ்! நல்ல மனசுகாரங்க

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக் தற்சமயம் சிங்கிள்-சேனல் மற்றும் ட்யுல்-சேனல் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டின் எக்ஸ்ஷோரூம் விலைகளும் தற்போது ரூ.1,500 அதிகரிக்கப்பட்டுள்ளன.

விலையை உயர்த்திய அதேநேரம் அப்பாச்சி ஆர்டிஆர்200-க்கு சலுகைகளை அறிவித்த டிவிஎஸ்! நல்ல மனசுகாரங்க

இதனால் சிங்கிள்-சேனல் ஏபிஎஏஸ்-ஐ கொண்ட அப்பாச்சி ஆர்டிஆர் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.25 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேநேரம் இந்த அப்பாச்சி 200சிசி பைக்கை ட்யுல்-சேனல் ஏபிஎஸ் உடன் ரூ.1.30 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் தான் வாங்க முடியும்.

விலையை உயர்த்திய அதேநேரம் அப்பாச்சி ஆர்டிஆர்200-க்கு சலுகைகளை அறிவித்த டிவிஎஸ்! நல்ல மனசுகாரங்க

இந்த விலை உயர்வு மிகவும் சிறியது தான், ஆனால் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்குடன் அதன் தயாரிப்பு மோட்டார்சைக்கிள்களுக்கு அதிரடியான சலுகைகளை டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அப்பாச்சி பைக்கின் இரு வேரியண்ட்களை இந்த பண்டிகை காலத்தில் வாங்குவதன் மூலம் ரூ.5,000 வரையிலான பணம் தள்ளுபடியை வாடிக்கையாளர் பெறலாம்.

விலையை உயர்த்திய அதேநேரம் அப்பாச்சி ஆர்டிஆர்200-க்கு சலுகைகளை அறிவித்த டிவிஎஸ்! நல்ல மனசுகாரங்க

கூடுதலாக குறைந்த மாததவணை, சவுகரியமான முறையில் பணம் திருப்பி செலுத்துதல் திட்டங்கள் உள்ளிட்ட நிதி விருப்பங்களையும் இங்த தமிழகத்தை சேர்ந்த மோட்டார்சைக்கிள் பிராண்ட் அறிவித்துள்ளது. அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கை ரூ.16,999 அல்லது ரூ.21,000 என்ற இரு முன் தொகை திட்டங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு வாடிக்கையாளர் செய்தும் வாங்கலாம்.

விலையை உயர்த்திய அதேநேரம் அப்பாச்சி ஆர்டிஆர்200-க்கு சலுகைகளை அறிவித்த டிவிஎஸ்! நல்ல மனசுகாரங்க

இந்த பைக்கிற்கு குறைந்த மாத தவணையாக ரூ.2,999-ஐ டிவிஎஸ் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மாதத்தவணை தேர்வுகளுக்கு வெறும் 10 நிமிடங்களில் அனுமதி அளிப்பாதாக இந்நிறுவனம் கூறுகிறது.

விலையை உயர்த்திய அதேநேரம் அப்பாச்சி ஆர்டிஆர்200-க்கு சலுகைகளை அறிவித்த டிவிஎஸ்! நல்ல மனசுகாரங்க

அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கை பற்றி கூற வேண்டுமென்றால், எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்கள் பொருத்தப்படும் இந்த பைக்கில் போக்குவரத்து நெரிசல்களிலும் சீரான இயக்கத்திற்காக பிராண்டின் க்ளைட் த்ரூ தொழிற்நுட்பம் பொருத்தப்படுகிறது.

விலையை உயர்த்திய அதேநேரம் அப்பாச்சி ஆர்டிஆர்200-க்கு சலுகைகளை அறிவித்த டிவிஎஸ்! நல்ல மனசுகாரங்க

இதனுடன் ஸ்மார்ட்எக்ஸ் கனெக்ட் இணைப்பு தொழிற்நுட்பத்தையும் பெற்றுவரும் இந்த பைக்கில் 197.75சிசி, சிங்கிள்-சிலிண்டர், 4-வால்வு, ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 20.2 பிஎச்பி மற்றும் 7,500 ஆர்பிஎம்-ல் 16.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

விலையை உயர்த்திய அதேநேரம் அப்பாச்சி ஆர்டிஆர்200-க்கு சலுகைகளை அறிவித்த டிவிஎஸ்! நல்ல மனசுகாரங்க

பளபளப்பான கருப்பு மற்றும் முத்தின் வெள்ளை என்ற இரு நிறங்களில் கிடைக்கும் இந்த டிவிஎஸ் பைக்கிற்கு பஜாஜ் பல்சர் என்எஸ்200, கேடிஎம் 200 ட்யூக் மற்றும் சமீபத்தில் அறிமுகமான ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்குகள் விற்பனையில் போட்டியாகவுள்ளன.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Apache RTR 200 4V Prices Increased: New Price List & Festive Offers
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X