உலகளவில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளுக்கு கிடைத்த புதிய அந்தஸ்து... இதெல்லாம் வேற லெவல்...

இந்தியாவின் முன்னணி பைக் பிராண்ட்களுள் முதன்மையானது டிவிஎஸ் அப்பாச்சி என்பது மீண்டும் ஒரு முறை உறுதியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளவில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளுக்கு கிடைத்த புதிய அந்தஸ்து... இதெல்லாம் வேற லெவல்...

சரி நேராக விஷயத்திற்குள் போவோம், தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார்ஸ் சுமார் 4 மில்லியன் அப்பாச்சி பைக்குகளை உலகளவில் விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

உலகளவில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளுக்கு கிடைத்த புதிய அந்தஸ்து... இதெல்லாம் வேற லெவல்...

டிவிஎஸ் நிறுவனம் முதன்முதலாக முதல் அப்பாச்சி பைக்கை 2005ல் அறிமுகப்படுத்தியது. தற்சமயம் டிவிஎஸ்-இன் அப்பாச்சி வரிசையில் ஆர்டிஆர் 160, ஆர்டிஆர் 160 4வி, ஆர்டிஆர் 180, ஆர்டிஆர் 200 4வி மற்றும் ஆர்ஆர்310 உள்ளிட்ட பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

உலகளவில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளுக்கு கிடைத்த புதிய அந்தஸ்து... இதெல்லாம் வேற லெவல்...

இவற்றில் 160சிசி ஆர்டிஆர் பைக்குகளில் 159.7சிசி, ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக ஆர்டிஆர் 160 பைக்கில் 15 பிஎச்பி மற்றும் 13.9 என்எம் டார்க் திறனையும், ஆர்டிஆர் 160 4வி பைக்கில் 16.02 பிஎச்பி மற்றும் 14.12 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

உலகளவில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளுக்கு கிடைத்த புதிய அந்தஸ்து... இதெல்லாம் வேற லெவல்...

அதுவே ஆர்டிஆர் 180 பைக்கில் பொருத்தப்படுகின்ற 177சிசி என்ஜின் 16.79 பிஎச்பி மற்றும் 15.5 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வழங்குகிறது. ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 197.75சிசி, சிங்கிள்-சிலிண்டர், 4-வால்வு, ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

உலகளவில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளுக்கு கிடைத்த புதிய அந்தஸ்து... இதெல்லாம் வேற லெவல்...

இந்த என்ஜின் 20.2 பிஎச்பி மற்றும் 16.8 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக பைக்கிற்கு வழங்கும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த பைக் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஆர்ஆர்310 பைக்கில் பொருத்தப்படுகின்ற 312.2சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின் 33.5 பிஎச்பி மற்றும் 27.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

உலகளவில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளுக்கு கிடைத்த புதிய அந்தஸ்து... இதெல்லாம் வேற லெவல்...

உலகளவில் 4 மில்லியன் விற்பனையை பதிவு செய்ததை கொண்டாடும் விதத்தில் மிக நீளமான கொடியினை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் 957 அடி நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கொடியில் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு சதுரத்திலும் அதன் உலகளாவிய வாடிக்கையாளர்களின் புகைப்படங்கள் உள்ளன.

உலகளவில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளுக்கு கிடைத்த புதிய அந்தஸ்து... இதெல்லாம் வேற லெவல்...

டிவிஎஸ் மோட்டார்ஸின் மைசூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கொடி சுமார் 2000-க்கும் அதிகமான படங்களுடன் ஆசிய மற்றும் இந்திய கின்னஸ் சாதனை புத்தகங்களின் இடம் பெறவுள்ளது. இதுமட்டுமின்றி அப்பாச்சி உரிமையாளர்கள் க்ரூப்பையும் டிவிஎஸ் நிறுவனம் கொண்டுள்ளது.

உலகளவில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளுக்கு கிடைத்த புதிய அந்தஸ்து... இதெல்லாம் வேற லெவல்...

இந்த க்ரூப் ஒரே மாதிரியான மனநிலை கொண்ட அப்பாச்சி பிரியர்களை ஒருங்கிணைக்கிறது. டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் மட்டும் 52 நகரங்களில் சந்தையை விரிவுப்படுத்தியுள்ளது. மொத்தமாக 30,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்நிறுவனத்திற்கு உலகளவில் உள்ளனர்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs #tvs apache
English summary
TVS Apache crosses the 4 million mark
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X