இந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்6 பைக்கின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. அதற்கான காரணத்தையும் விலை எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...

டிவிஎஸ் நிறுவனம் முன்னதாக இந்த வருட துவக்கத்தில் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கை பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. அதிலிருந்து தற்போது இரண்டாவது முறையாக இந்த பைக்கின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...

தற்போது இதன் விலை ரூ.1,050 அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த பிஎஸ்6 பைக்கை இனி ரூ.1.28 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் தான் பெற முடியும். பிஎஸ்6 அப்டேட் உடன் இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டபோது விலையாக ரூ.1.24 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி பார்க்கும்போது இதிலிருந்து இதன் விலை சுமார் ரூ.4,000 வரையில் உயர்ந்துள்ளது.

இந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...

பைக்கை பற்றி கூற வேண்டுமென்றால், அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்6 பைக்கில் எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்கள், புதிய இடத்தில் விளக்குகள், தொடுதல் மூலமாக ஸ்டார்ட் ஆகும் பண்பு, புதிய பாடி கிராஃபிக்ஸ் மற்றும் ப்ராண்டின் க்ளைட் த்ரூ டெக்னாலஜி (GTT) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...

இவற்றுடன் ப்ளூடூத் உடன் இணைக்கக்கூடிய எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் இந்த 200சிசி பைக்கில் கொடுக்கப்படுகிறது. ப்ராண்ட்டின் ‘ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட்' இணைப்பு தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படுகின்ற இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆனது ரைடர் டெலிமெட்ரி டேடா உள்ளிட்ட தகவல்களை வழங்கக்கூடியது.

இந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...

மற்ற அம்சங்களாக ரேஸ்-ட்யூன் செய்யப்பட்ட ஸ்லிப்பர் க்ளட்ச், ரியர் லிஃப்ட் மைக்ரேஷன் உடன் இரட்டை-சேனல் ஏபிஎஸ் மற்றும் புதிய டிசைனில் பின்பக்கம் பார்க்கும் கண்ணாடி போன்றவை இந்த பைக்கில் உள்ளன. 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் புதிய ஃப்யூல்-இன்ஜெக்டட் 197.75சிசி, சிங்கிள்-சிலிண்டர், 4-வால்வு, ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...

இந்த என்ஜின் வழக்கம்போல் 8500 ஆர்பிஎம்-ல் 20.2 பிஎச்பி பவரை வெளிப்படுத்தினாலும், பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் சற்று குறைவாக 7,500 ஆர்பிஎம்-ல் 16.8 என்எம் டார்க் திறனை தான் பைக்கிற்கு வழங்குகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...

மற்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளின் விலைகளை இரண்டாவது முறையாக உயர்த்தி வருகின்றன. இதே பாணியில் தான் டிவிஎஸ் நிறுவனம் ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலையையும் உயர்த்தியுள்ளது. இருப்பினும் இந்த விலை அதிகரிப்பிற்கான காரணம் எதுவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்படவில்லை.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Apache RTR 200 4V Prices Hiked For Second Time After BS6 Update
Story first published: Thursday, August 6, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X