சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடனும் இனி டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் கிடைக்கும்... விலை எவ்வளவு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் புதியதாக சூப்பர்-மோட்டோ ஏபிஎஸ் (சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்)-ஐ அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடனும் இனி டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் கிடைக்கும்... விலை எவ்வளவு தெரியுமா..?

முத்தின் வெள்ளை மற்றும் பளபளப்பான கருப்பு என்ற இரு விதமான நிறத்தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளின் எக்ஸ்ஷோரூம் விலை சூப்பர்-மோட்டோ ஏபிஎஸ் உடன் ரூ.1,23,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடனும் இனி டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் கிடைக்கும்... விலை எவ்வளவு தெரியுமா..?

அதேநேரம் இதன் ட்யூல்-சேனல் வெர்சனின் விலை ரூ.1,28,550 ஆக எக்ஸ்ஷோரூமில் உள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 197.75சிசி சிங்கிள்-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், 4-வால்வு & ஆயில்-கூல்டு என்ஜின், ஆர்டி-ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படுகிறது.

சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடனும் இனி டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் கிடைக்கும்... விலை எவ்வளவு தெரியுமா..?

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 20.5 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்-ல் 16.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் பிரிவில் முதல் பைக் மாடலாக ‘தொழில்நுட்பத்தின் மூலம் சறுக்கு' என்ற ஜிடிடி தொழிற்நுட்ப வசதியையும் இந்த பைக் கொண்டுள்ளது.

சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடனும் இனி டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் கிடைக்கும்... விலை எவ்வளவு தெரியுமா..?

இந்த தொழிற்நுட்பம் சீரான நகர்புற பயணத்தையும், மென்மையான மற்றும் சவுகரியமான பயணத்தையும் நம்ப முடியாத அளவிற்கு கிடைப்பதற்கு வழிவகுக்கிறது. டிவிஎஸ்-இன் ஸ்மார்ட்எக்ஸனெக்ட் தொழிற்நுட்பத்துடன் அதன் பிரிவில் ஆர்எல்பி (பின் சக்கர லிஃப்ட்-ஆஃப் பாதுகாப்பு) & ஆர்டி-ஸ்லிப்பர் க்ளட்ச்-ஐ கொண்ட ட்யூல்-சேனல் ஏபிஎஸ் உடன் கிடைக்கும் ஒரே பைக் மாடலாக அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி விளங்குகிறது.

சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடனும் இனி டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் கிடைக்கும்... விலை எவ்வளவு தெரியுமா..?

இத்தகைய சிறப்புமிக்க இந்த 200சிசி பைக் இனி சிங்கிள்-சேனல் சூப்பர்-மோட்டோ ஏபிஎஸ் வேரியண்டிலும் கிடைக்கும். இந்த புதிய வேரியண்ட்டில் பயணத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக அதிக செயல்திறன்மிக்க ரேடியல் டயர் பின் சக்கரத்தில் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ளது.

சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடனும் இனி டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் கிடைக்கும்... விலை எவ்வளவு தெரியுமா..?

இவை மட்டுமின்றி ‘மென்மையான-தொடுதல்' ஸ்டார்ட், நகம் வடிவில் பொருத்தப்பட்ட விளக்குகள் உடன் முற்றிலும் எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப் உள்ளிட்ட அட்டகாசமான அம்சங்களும் இந்த டிவிஎஸ் பைக்கில் உள்ளன. மேலும் அனைத்து வகையான சாலையிலும் மகிழ்ச்சியான பயணத்திற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ரேஸ் ட்யூன்டு- ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் தொழிற்நுட்பத்தின் மூலமாக இந்த பைக் இயக்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs #tvs apache
English summary
TVS Motor Company launches the TVS Apache RTR 200 4V with Super-Moto ABS
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X