இந்தியாவில் நார்ட்டன் பைக்குகள் உற்பத்தி... டிவிஎஸ் பதில் என்ன தெரியுமா?

இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டி இருக்கும் புதிய நார்ட்டன் பைக்குகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுமா என்ற கேள்விக்கு விடை அளித்திருக்கிறது அதன் புதிய உரிமையாளராக மாறி இருக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்.

இந்தியாவில் நார்ட்டன் பைக்குகள் உற்பத்தி... டிவிஎஸ் பதில் என்ன தெரியுமா?

இங்கிலாந்தை சேர்ந்த பாரம்பரியம் மிக்க நார்ட்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. ரூ.153 கோடி மதிப்பீட்டில் நார்ட்டன் நிறுவனத்தை முழுமையாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது துணை நிறுவனத்தின் கீழ் முழுமையாக கையகப்படுத்தியது.

இந்தியாவில் நார்ட்டன் பைக்குகள் உற்பத்தி... டிவிஎஸ் பதில் என்ன தெரியுமா?

இந்த நிலையில், நார்ட்டன் பைக்குகளை டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் என்பது உறுதியாக தெரிகிறது. மேலும், இந்தியாவிலேயே நார்ட்டன் பைக்குகள் உற்பத்தி செய்யப்படுவதோடு, ஏற்றுமதிக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்தியாவில் நார்ட்டன் பைக்குகள் உற்பத்தி... டிவிஎஸ் பதில் என்ன தெரியுமா?

அதாவது, டிவிஎஸ் நிறுவனத்தின் ஓசூர் ஆலையில் பிஎம்டபிள்யூ ஜி310 பைக் மாடல்கள் உற்பத்தி செய்யப்படுவது போலவே, நார்ட்டன் பைக்குகளும் உற்பத்தி செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இந்தியாவில் நார்ட்டன் பைக்குகள் உற்பத்தி... டிவிஎஸ் பதில் என்ன தெரியுமா?

இந்த நிலையில், டிவிஎஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு கார் அண்ட் பைக் தளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது நார்ட்டன் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

இந்தியாவில் நார்ட்டன் பைக்குகள் உற்பத்தி... டிவிஎஸ் பதில் என்ன தெரியுமா?

இதுகுறித்து அவர் கூறுகையில்," நார்ட்டன் பைக்குகள் இங்கிலாந்திலேயே தொடர்ந்து உற்பத்தி செய்யப்படும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டமில்லை," என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார். இதனால், இந்தியாவில் நார்ட்டன் பைக் உற்பத்திக்கு வாய்ப்பு இல்லை.

இந்தியாவில் நார்ட்டன் பைக்குகள் உற்பத்தி... டிவிஎஸ் பதில் என்ன தெரியுமா?

அதேநேரத்தில், தற்போது இங்கிலாந்தில் உள்ள டோனிங்டன் ஹால் நகரின் டெர்பி என்ற இடத்தில் உள்ள ஆலையில் நார்ட்டன் பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலையில் இருந்து உற்பத்தியை அதே பகுதியில் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு டிவிஎஸ் குழுமம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் நார்ட்டன் பைக்குகள் உற்பத்தி... டிவிஎஸ் பதில் என்ன தெரியுமா?

மேலும், நார்ட்டன் நிறுவனத்தின் பெரும்பாலான பணியாளர்களை டிவிஎஸ் குழுமம் தொடர்ந்து தக்க வைக்க இருக்கிறது. ஒரு சில பணியாளர்கள் மட்டுமே பணியிலிருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் நார்ட்டன் பைக்குகள் உற்பத்தி... டிவிஎஸ் பதில் என்ன தெரியுமா?

நார்ட்டன் நிறுவனம் நூற்றாண்டுக்கு மேல் பழமைவாய்ந்த பைக் நிறுவனமாக விளங்குகிறது. நார்ட்டன் நிறுவனத்தின் பாரம்பரியத்தை போற்றவும், மெருகூட்டும் பணிகளில் கவனம் செலுத்தப் போவதாக டிவிஎஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நார்ட்டன் பைக்குகள் உற்பத்தி... டிவிஎஸ் பதில் என்ன தெரியுமா?

நார்ட்டன் நிறுவனம் டாமினேட்டர், கமான்டோ 961 கஃபே ரேஸர், அட்லஸ், சூப்பர்லைட் மற்றும் வி4 ஆர்ஆர் ஆகிய பிரிமீயம் வகை பைக் மாடல்களை விற்பனையில் வைத்துள்ளது. இந்த நிலையில், விலை குறைவான பிரிமீயம் வகை பைக் மாடல்களையும் நார்ட்டன் பிராண்டில் களமிற்ககுவதற்கு டிவிஎஸ் திட்டம் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #நார்ட்டன் #norton
English summary
TVS Motor has clarified that the company has no plan to move Norton bike manufacturing unit out of the UK.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X