டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் லோகோ டிசைன் வெளிவந்தது...

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள கிரியோன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசரை வெளியிட்டுள்ளது. முன்னதாக நேற்று மாலையிலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் லோகோ டிசைன் வெளிவந்தது...

தற்போது வெளிவந்துள்ள புதிய டீசரில், அறிமுகத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளது என்ற எழுத்து ஆரம்பத்தில் காட்டப்படுகிறது. பிறகு எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புறம் மட்டும் நிழல் போன்ற வடிவில் கருமையான பகுதிக்குள் இருந்து மெல்ல வெளியே வருகிறது.

டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் லோகோ டிசைன் வெளிவந்தது...

பிறகு சார்ஜ் லைஃப் என்ற வசனம் ஆங்கிலத்தில் காட்டப்படுகிறது. மேலும் இந்த டீசரில் ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய டீசர் வெளிக்காட்டப்பட்டுள்ளது. வருகிற 25ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் லோகோ டிசைன் வெளிவந்தது...

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், வழக்கமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு முறையில் உருவாக்கப்படாமல், குறிப்பிட்ட பிரிவில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக புதுமையான விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள புதிய டீசர் இதோ உங்களுக்காக...

View this post on Instagram

The face of change! Coming soon. #TVSMotorCompany

A post shared by TVS Motor Company (@tvsmotorcompany) on

இந்திய சந்தையில் பல ஆண்டுகளாக புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி வரும் நிறுவனங்கள் கூட எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் புதிய முறையை மேற்கொண்டு வருகின்றன. மேலும் எலக்ட்ரிக் வாகனங்கள் மெல்ல மெல்ல இந்தியாவில் பிரபலமாகி வருவதால், பல புதிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மார்க்கெட்டில் புதியதாக காலடி எடுத்து வைத்துள்ளன.

டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் லோகோ டிசைன் வெளிவந்தது...

பிரபல ஹீரோ நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் சிறிய அளவிலான எலக்ட்ரிக் பைக்குகளின் காலி இடத்தை நிரப்பும் விதத்தில் சிறிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் இந்த பிரிவில் ஏற்கனவே ஏத்தர் நிறுவனத்தில் இருந்து ஏத்தர் 450 ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் லோகோ டிசைன் வெளிவந்தது...

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள இந்த கிரியோன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்கனவே 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் இதுவரை பார்த்திராத புதிய தோற்றத்தில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகத்தின்போது எதிர்பார்க்கலாம்.

டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் லோகோ டிசைன் வெளிவந்தது...

வெளியாகியுள்ள இந்த டீசரில் மற்றப்படி ஸ்கூட்டரை பற்றிய வேறெந்த முக்கிய தகவலும் வெளியிடப்படவில்லை. டிவிஎஸ் நிறுவனத்திற்கு இது முதல் எலக்ட்ரிக் மாடல் கிடையாது. இதற்கு முன்னதாக ஸ்கூட்டி டென்ஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகியிருந்தது.

டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் லோகோ டிசைன் வெளிவந்தது...

ஆனால் இந்த டென்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமான சமயத்தில் இந்திய மார்க்கெட்டில் அவ்வளவாக எலக்ட்ரிக் வாகனங்களை பற்றிய புரிதல் இல்லாமல் இருந்ததால் வாடிக்கையாளர்களிடம் இந்த டென்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சென்றடையவில்லை.

டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் லோகோ டிசைன் வெளிவந்தது...

வருகிற 25ஆம் தேதி அறிமுகமாகவுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சில முறை இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தாலும், அப்போது முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் ஸ்கூட்டர் இருந்ததால் மிகவும் குறைவான விபரங்களே வெளிவந்தன.

டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் லோகோ டிசைன் வெளிவந்தது...

பஜாஜ் சேத்தக் மற்றும் ஏத்தர் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தனது பிரிவில் உள்ள செயல்படுதிறனை குறைவாக கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனையில் எளிதாக முந்திக்கொண்டு அசூர வளர்ச்சியை வேகமாக பெற்று வருகின்றன. இந்த பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த டிவிஎஸ் கிரியோன் ஸ்கூட்டர் எந்த அளவிற்கு விற்பனை எண்ணிக்கைகளை பதிவு செய்யவுள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் லோகோ டிசைன் வெளிவந்தது...

பொதுவாக டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் எந்த பிரிவில் கடுமையான போட்டி நிலவி வருகிறதோ, அந்த பிரிவில் தான் தனது வாகனங்களை அறிமுகப்படுத்த விரும்பும். அந்த வகையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலால் மேலும் சில முன்னணி நிறுவனங்களும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிரிவில் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Electric Scooter New Teaser Showing Headlamp
Story first published: Friday, January 24, 2020, 12:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X