சீறிச் செல்லும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஜெர்க் ஆன பஜாஜ் சேத்தக் !!

டிவிஎஸ் எலெக்ட்ரிக் சாலை சோதனை ஓட்டத்தின்போது சீறிச் செல்லும் ஸ்பை வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சீறிச் செல்லும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஜெர்க் ஆன பஜாஜ் சேத்தக் !!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான சந்தை மிக வலுவாக மாறத் துவங்கி இருக்கிறது. இதனால், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதல் முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்கள் வரை இந்த சந்தையில் களமிறங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சேத்தக் என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கி உள்ளது.

சீறிச் செல்லும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஜெர்க் ஆன பஜாஜ் சேத்தக் !!

இந்த சூழலில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனமும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் களமிறங்குவதற்கான முஸ்தீபுடன் செயலாற்றி வருகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு பணியில் இரண்டு ஆண்டுகளாக டிவிஎஸ் மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கே.என்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

சீறிச் செல்லும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஜெர்க் ஆன பஜாஜ் சேத்தக் !!

நடப்பு நிதி ஆண்டின் இறுதியில், அதாவது 2020 மார்ச் 31க்குள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

அவ்வாறு சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை வீடியோ ஒன்றை எலெக்ட்ரிக்வெஹிக்கிள்ஸ்வெப் தளம் வெளியிட்டு இருக்கிறது.

சீறிச் செல்லும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஜெர்க் ஆன பஜாஜ் சேத்தக் !!

அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்டு இருந்தாலும், ஸ்பை வீடியோவில் தென்படும் சில விஷயங்களை வைத்து இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ் க்ரியான் கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக கருத முடிகிறது. அதாவது, முன்புற அப்ரான் பகுதி டிவிஎஸ் க்ரியான் போன்று தெரிகிறது.

சீறிச் செல்லும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஜெர்க் ஆன பஜாஜ் சேத்தக் !!

முன்புற சக்கரத்தில் டிஸ்க் பிரேக், டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், கால் வைப்பதற்கு வசதியான ஃபுட்போர்டு ஆகியவை இடம்பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது. இது வழக்கமான ஸ்கூட்டர் மாடல்களை போன்ற தோற்றத்தை பெற்றிருக்கிறது.

சீறிச் செல்லும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஜெர்க் ஆன பஜாஜ் சேத்தக் !!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய எந்த தகவல்களையும் டிவிஎஸ் மோட்டார்ஸ் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், இந்த ஸ்கூட்டரில் 12kW மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின் மோட்டார் 0 - 60 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் எட்டிவிடும்.

சீறிச் செல்லும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஜெர்க் ஆன பஜாஜ் சேத்தக் !!

முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இதன் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் ஒரு மணிநேரத்தில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிடும் வாய்ப்பை வழங்கும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மூன்று லித்தியம் அயான் பேட்டரிகள் அடங்கிய தொகுப்பு பயன்படுத்தப்படலாம்.

சீறிச் செல்லும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஜெர்க் ஆன பஜாஜ் சேத்தக் !!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கும். இன்டெல் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த ஸ்கூட்டருக்கான கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேட்டரி சார்ஜ், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் உள்ளிட்ட தகவல்களை இதன் திரை மூலமாக பெற முடியும்.

சீறிச் செல்லும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஜெர்க் ஆன பஜாஜ் சேத்தக் !!

ரீஜெனெரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பம், பார்க் அசிஸ்ட், ஆன்ட்டி தெஃப்ட் தொழில்நுட்பம், ஜிபிஎஸ் மற்றும் ஜியோ ஃபென்சிங் வசதி, ரைடிங் மோடுகள் என எக்கச்சக்க தொழில்நுட்ப அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

சீறிச் செல்லும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஜெர்க் ஆன பஜாஜ் சேத்தக் !!

இந்த ஸ்கூட்டர் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்பதால், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நெருக்கடி காத்திருக்கிறது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS electric scooter spied undisguised in India for the first time.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X