டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி!

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது டிவிஎஸ் நிறுவனம். மின்சார ஸ்கூட்டர்களுக்கான தலைநகரமாக மாறி இருக்கும், பெங்களூரில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் டிவிஎஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்று ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து எமது எடிட்டர் ஜோபோ குருவில்லா மற்றும் ஆங்கிலப் பிரிவு உதவி ஆசிரியர் புனித் பரத்வாஜ் வழங்கும் படங்கள், தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி!

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக்

டிவிஎஸ் ஐ-க்யூப் என்ற பெயரில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 2010ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில், ஐ-க்யூப் என்ற ஹைப்ரிட் ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலை டிவிஎஸ் காட்சிக்கு வைத்திருந்தது. ஆனால், அதற்கும் இப்போது வந்திருக்கும் ஸ்கூட்டருக்கும் டிசைன் மற்றும் தொழில்நுட்ப அளவில் எந்த சம்பந்தமும் இல்லை.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி!

வசீகரிக்கும் டிசைன்

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிசைன் மிகவும் வசீகரமாகவே இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் பார்ப்பதற்கு கச்சிதமாகவும், வலுவானதாக தெரிவதுடன், மிக நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. முகப்பில் எல்இடி பகல்நேர விளக்குகள், அப்ரான் பகுதியில் எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை அமைந்துள்ளன. பார்க்கவே ரொம்ப க்யூட்டாக காட்சியளிக்கிறது.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி!

மின் மோட்டார் திறன்

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.4kW திறன் வாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 0- 40 கிமீ வேகத்தை 4.2 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மணிக்கு 78 கிமீ வேகம் வரை செல்லும்.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி!

ரேஞ்ச்

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4kW மின் மோட்டாரும், ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5.4kW மின் மோட்டாரும் உள்ளன. இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இந்த ஸ்கூட்டருக்கு வீட்டு சார்ஜரும் வழங்கப்படும். பொது இடங்களிலும் சார்ஜர்கள் நிறுவப்பட இருக்கின்றன.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி!

ரைடிங் மோடுகள்

இந்த ஸ்கூட்டரில் ஈக்கோ மற்றும் பவர் என்ற இரண்டு ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஈக்கோ மோடில் வைத்து இயக்கும்போது அதிகபட்ச பயண தூரத்தை வழங்கும். பவர் மோடில் செயல்திறன் சற்றே அதிகரிக்கும் என்பதால், பேட்டரி ரேஞ்ச் குறையும்.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி!

எல்இடி விளக்குகள்

புதிய டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், டெயில் லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொள்ளும் வசதி ஆகியவை மிக முக்கிய அம்சங்களாக இருக்கும்.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி!

ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு வசதி

இந்த ஸ்கூட்டரில் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக ஜியோ ஃபென்சிங் முறையில் ஸ்கூட்டர் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செல்லாதவாறு கட்டுப்படுத்தி வைக்க முடியும். இது திருடு போவதிலிருந்து தவிர்க்க உதவும். நேவிகேஷன் வசதி, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், ஓட்டுதல் முறை குறித்த தகவல்கள், அதிவேகம் குறித்த எச்சரிக்கை வசதிகளையும் பெற்றிருக்கிறது.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி!

ஆன்ரோடு விலை விபரம்

முதல்கட்டமாக பெங்களூரில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1.15 லட்சம் பெங்களூர் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. ரூ.5,000 முன்பணத்துடன் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆன்லைன் மூலமாகவும், குறிப்பிட்ட டிவிஎஸ் டீலர்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி!

உற்பத்தி திறன்

வரும் 27ந் தேதி முதல் பெங்களூரில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும். மாதத்திற்கு 1,000 ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. எனவே, டெலிவிரி பணிகளில் தொய்வு இருக்காது என்று நம்பப்படுகிறது.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி!

போட்டியாளர்கள்

இந்த புதிய டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அண்மையில் விற்பனைக்கு வந்த பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும், ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் இது நேரடி போட்டியாக இருக்கும். திறன் மற்றும் விலை ஆகியவற்றில் அதிக வித்தியாசங்கள் இல்லாத வகையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Motos has launched iQube electric scooter in India with starting price at.Rs.1.15 lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X