டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் அட்டகாசமான 8 விஷயங்கள்!

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், முக்கியமான சிறப்பம்சங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் அட்டகாசமான 8 விஷயங்கள்!

எல்இடி விளக்குகள்

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் முழுமையான எல்இடி ஹெட்லைட், பகல்நேர விளக்கு மற்றும் டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. தவிரவும், விளக்கு ஒளி பின்னணியுடன் கூடிய லோகோவும் கவர்ச்சி சேர்க்கிறது.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் அட்டகாசமான 8 விஷயங்கள்!

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

புதிய டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த திரையை பிரத்யேக ஸ்மார்ட்ஃபோன் செயலியுடன் இணைத்துக்கொண்டு பல்வேறு வசதிகளை பெற முடியும்.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் அட்டகாசமான 8 விஷயங்கள்!

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வசதிகள்

இதன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ள்ஸட்டர் மூலமாக, பேட்டரியில் இருக்கும் சார்ஜ் அளவு, எவ்வளவு தூரம் பயணிக்கலாம், ஸ்மார்ட்ஃபோன் அழைப்புகள் குறித்து தெரிவிக்கும் வசதி, நேவிகேஷன், வண்டியின் வேகம், சராசரி வேகம், ஓடிய தூரம், குறிப்பிட்ட எல்லைக்குள் வண்டி இருக்குமாறு கட்டுப்படுத்தும் ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் அட்டகாசமான 8 விஷயங்கள்!

ரைடிங் மோடுகள்

இந்த ஸ்கூட்டரில் இரண்டு ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஈக்கோ மற்றும் பவர் என்ற இரண்டு ரைடிங் மோடுகள் மூலமாக வாடிக்கையாளர்கள் வண்டியின் செயல்திறனை மாற்றிக் கொள்ள முடியும். ஈக்கோ மோடில் வைத்து இயக்கும்போது அதிகபட்சமாக 40 கிமீ வேகம் வரை செல்ல முடியும். பவர் மோடில் வைத்து இயக்கும்போது அதிகபட்சமான 78 கிமீ வேகம் வரை செல்லலாம். ஆனால், பேட்டரி ரேஞ்ச் மாறுபடும்.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் அட்டகாசமான 8 விஷயங்கள்!

பார்க் அசிஸ்ட்

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பார்க் அசிஸ்ட் வசதி உள்ளது. இதன்மூலமாக, வண்டியை முன்னோக்கி செலுத்துவதற்கான வசதி மட்டுமின்றி, ரிவர்ஸ் எடுக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் பெண்களுக்கு சிறந்த வசதியாக இருக்கும்.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் அட்டகாசமான 8 விஷயங்கள்!

டிஸ்க் பிரேக்

புதிய டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் டியூவல் ஷாக் அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் உள்ளன. கவர்ச்சிகரமான அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் அட்டகாசமான 8 விஷயங்கள்!

பேட்டரி

புதிய டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.25kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை 5A வீட்டு சார்ஜர் மூலமாக முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 5 மணிநேரம் பிடிக்கும். முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் அட்டகாசமான 8 விஷயங்கள்!

மின் மோட்டார்

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.4W எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்த மின் மோட்டார் 140என்எம் டார்க் திறனை வழங்க வல்லது. மணிக்கு 78 கிமீ வேகம் வரை செல்லும். 0 - 40 கிமீ வேகத்தை 4.2 வினாடிகளில் எட்டிவிடும்.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் அட்டகாசமான 8 விஷயங்கள்!

விலை விபரம்

புதிய டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.1.15 லட்சம் பெங்களூர் ஆன்ரோடு விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் ரூ.1.15 லட்சம் ஆன்ரோடு விலையில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோன்று, ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1.13 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் அட்டகாசமான 8 விஷயங்கள்!

முன்பதிவு

முதல்கட்டமாக பெங்களூரில் மட்டுமே இந்த புதிய டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.5,000 முன்பணம் செலுத்தி ஆன்லைன் மூலமாகவோ அல்லது பெங்களூரில் உள்ள குறிப்பிட்ட டீலர்கள் வாயிலாகவே முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Here we listed out the top eight things you need to know about the TVS iQube electric scooter.
Story first published: Monday, January 27, 2020, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X