ஹோண்டா ஆக்டிவா 6ஜி-யை விட மலிவான விலையில் டிவிஎஸ் ஜூபிடர்... அப்படி என்ன விலைங்க அது..?

டிவிஎஸ் நிறுவனம் அதன் பிரபல ஜூபிடர் ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரைக் காட்டிலும் மலிவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி-யை விட மலிவான விலையில் டிவிஎஸ் ஜூபிடர்... அப்படி என்ன விலைங்க அது..?

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம் அதன் தயாரிப்புகளை பிஎஸ் தரத்திற்கு இணக்கமாக அப்கிரேட் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இதனடிப்படையில், புதுப்பித்தலைப் பெற்ற அந்நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றான டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை அந்நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்தது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி-யை விட மலிவான விலையில் டிவிஎஸ் ஜூபிடர்... அப்படி என்ன விலைங்க அது..?

இந்த ஸ்கூட்டருக்கு மிக மலிவான விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, ஜூபிடருக்கு மிகப்பெரிய போட்டியாளானாக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா 6ஜி மாடலைக் காட்டிலும் அது மலிவான விலையைக் கொண்டிருப்பதாக அது தெரிவிக்கின்றது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி-யை விட மலிவான விலையில் டிவிஎஸ் ஜூபிடர்... அப்படி என்ன விலைங்க அது..?

குறிப்பாக ஜூபிடர் மாடலின் ஆரம்பநிலை வேரியண்டே ஆக்டிவா 6ஜி-க்கு போட்டியளிக்கின்ற வகையில் காட்சியளிக்கின்றது. ஜூபிடரின் பேஸ் வேரியண்டிற்கு ரூ 61,449 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம். அதேசமயம் டாப் ஸ்பெக் மாடலான கிளாசிக் ரக ஜூபிடருக்கு ரூ. 67,911 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி-யை விட மலிவான விலையில் டிவிஎஸ் ஜூபிடர்... அப்படி என்ன விலைங்க அது..?

டிவிஎஸ் நிறுவனம் அதன் உற்பத்தியாலையை ஓசூரில் நிறுவி வருகின்றது. இங்குதான் இதன் பெரும்பாலான வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி-யை விட மலிவான விலையில் டிவிஎஸ் ஜூபிடர்... அப்படி என்ன விலைங்க அது..?

முன்னதாக இந்த பகுதியில் பலமுறை இந்த ஸ்கூட்டர் பலபரீட்சை செய்யப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்தே, தற்போது பிஎஸ்-6 தரத்திலான ஜூபிடர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது சற்றே மலிவான விலையில் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதால் வாடிக்கையாளர்களை முந்தைய மாடலைப் போன்றே கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி-யை விட மலிவான விலையில் டிவிஎஸ் ஜூபிடர்... அப்படி என்ன விலைங்க அது..?

தற்போது விற்பனையில் இருக்கும் ஆக்டிவா பிஎஸ்-6 ஸ்கூட்டரைக் காட்டிலும் இது ரூ. 2,500 குறைவான விலையில் கிடைக்கின்றது. அதேசமயம், பிஎஸ்-4 தரத்திலான ஸ்கூட்டர்களைக் காட்டிலும் இது 8 ஆயிரம் ரூபாய் அதிக விலைக் கொண்டதாகும்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி-யை விட மலிவான விலையில் டிவிஎஸ் ஜூபிடர்... அப்படி என்ன விலைங்க அது..?

ஆகையால், பிஎஸ்-4 மாடலைக்காட்டிலும் ஜூபிடரின் பிஎஸ்-6 மாடல் அதிக விலைக் கொண்டதாக உருமாறியுள்ளது. இதற்கேற்ப ஒரு சில மாற்றங்களையும் அது பெற்றிருக்கின்றது. குறிப்பாக, உடல் தோற்றம் மற்றும் காஸ்மெட்டிக்கில் லேசான சேஞ்ஜஸ் உள்ளிட்டவற்றை அது பெற்றிருக்கிறது.

இதுதவிர, பெரிய ப்யூவல் டேங்க் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப் உள்ளிட்டவையிலும் புதிய அப்கிரேட் வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி-யை விட மலிவான விலையில் டிவிஎஸ் ஜூபிடர்... அப்படி என்ன விலைங்க அது..?

இவற்றைக் காட்டிலும் மிக முக்கியமான மாற்றமாக பிஎஸ்-6 தரம் இருக்கின்றது. இது முந்தைய பிஎஸ்-4 எஞ்ஜினைக் காட்டிலும் அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் மாசுக்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டது. ப்யூவல் இன்ஜெக்சன் திறன் என்று கூறப்படும் இந்த அம்சத்தை முதல் முதலாக அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கில் அறிமுகம் செய்தது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி-யை விட மலிவான விலையில் டிவிஎஸ் ஜூபிடர்... அப்படி என்ன விலைங்க அது..?

டிவிஎஸ் மேற்கொண்டிருக்கும் இந்த அதிரடி நடவடிக்கையை இந்தியாவில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

இதுமட்டுமின்றி, டிவிஎஸ் நிறுவனம் அதன் ஸ்கூட்டர்களில் ஈகோ-த்ரஸ்ட் என்ற மிக முக்கியமான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து வருகின்றது. இது, மற்ற வாகனங்களைக் காட்டிலும் 15 சதவீத எரிபொருள் சிக்கனத்தை கூடுதலாக வழங்கும்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி-யை விட மலிவான விலையில் டிவிஎஸ் ஜூபிடர்... அப்படி என்ன விலைங்க அது..?

அதாவது, பிஎஸ்-4 ஸ்கூட்டர்கள் அதிகபட்சமாக 50 முதல் 60 கிமீ வரை லிட்டர் ஒன்றிற்கு மைலேஜ் வழங்குகின்றது. ஆனால், டிவிஎஸ் புதிய பிஎஸ்-6 ஸ்கூட்டர் 70 கிமீ வரை மைலேஜ் வழங்கும்.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில் 110சிசி திறன்கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 7.4 பிஎச்பி பவரையும், 8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. ஆனால், இது பிஎஸ்-4 ஸ்கூட்டரைக் காட்டிலும் சற்றே குறைந்த திறன் ஆகும்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி-யை விட மலிவான விலையில் டிவிஎஸ் ஜூபிடர்... அப்படி என்ன விலைங்க அது..?

இத்துடன், மிக விரைவில் டிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே வேரியண்ட்டின் பிஎஸ்-6 மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதிகளவில் பிரிமியம் வசதிகளைக் கொண்டு களமிறங்க இருக்கின்றது. குறிப்பாக ஸ்ஸமார்ட்போன் கன்னெக்டிவிட்டி அம்சம் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ. 71,500 என்ற விலையில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Jupiter BS6 Launched With Lower Price Of Honda Activa 6G. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X