டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடலின் விலை மற்றும் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு

டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடல் குறித்த முழுமையான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடலின் விபரங்கள் வெளியீடு

இந்திய ஸ்கூட்டர் சந்தையில் விற்பனையில் ஹோண்டா ஆக்டிவாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் உள்ளது. இந்த நிலையில், ஆக்டிவா பிஎஸ்6 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடலும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடலின் விபரங்கள் வெளியீடு

இந்த புதிய மாடலில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட 109 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7.3 பிஎச்பி பவரையும், 8.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பழைய மாடலைவிட பவர் சற்றே குறைந்துள்ளது.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடலின் விபரங்கள் வெளியீடு

புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள் உள்ளன. மேலும், இருக்கைக்கு கீழ் உள்ள ஸ்டோரேஜ் அறைக்கு கீழாக இருந்த பேட்டரியானது முன்புறத்தில் உள்ள அப்ரான் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், ஸ்டோரேஜ் அறை கொள்திறன் 17 லிட்டர் என்ற அளவிலிருந்து 21 லிட்டர் என்ற அளவிற்கு மேம்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடலின் விபரங்கள் வெளியீடு

மேலும், பேட்டரி இடமாற்றம் காரணமாக, பெட்ரோல் டேங்க் கொள்திறனும் அதிகரித்துள்ளது. ஏற்கனேவ 5 லிட்டர் பெட்ரோல் பிடிக்கும் திறன் கொண்டதாக இருந்த இந்த எரிபொருள் கலன் தற்போது 6 லிட்டர் கொள்திறன் கொண்டதாக மேம்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடலின் விபரங்கள் வெளியீடு

மேலும், புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் எடை ஒரு கிலோ கூடி இருக்கிறது. பழைய மாடல் வேரியண்ட்டை பொறுத்து, 104 கிலோ முதல் 107 கிலோ எடை கொண்டதாக இருந்தது. எடை கூடினாலும், செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனம் மிக சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடலின் விபரங்கள் வெளியீடு

புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் ஸ்டான்டர்டு, இசட்எக்ஸ் மற்றும் கிளாசிக் என இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். டிரம் பிரேக் சிஸ்டத்துடன் மட்டுமே வருகிறது. விரைவில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடலின் விபரங்கள் வெளியீடு

புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் பிஎஸ்6 ஸ்டான்டர்டு மாடலுக்கு ரூ.61,449 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்து இசட்எக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.63,449 விலையும், கிளாசிக் வேரியண்ட்டிற்கு ரூ.67,911 எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடலின் விபரங்கள் வெளியீடு

புதிய டிவிஎஸ் ஜூபிடர் பிஎஸ்6 மாடலுக்கு டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. அடுத்த வாரம் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Chennai based TVS Motor Company has released specifications of the TVS Jupiter BS6 models ahead of its launch in India. The new Jupiter model will be available in three variants and are priced starting at Rs 61,449 (ex-showroom, Delhi).
Story first published: Tuesday, March 17, 2020, 17:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X