Just In
- 11 hrs ago ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
- 15 hrs ago நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
- 16 hrs ago 7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
- 17 hrs ago செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! இத செய்யவும் மனசு வ
Don't Miss!
- News மசூதியை நோக்கி அம்பு.. சர்ச்சை சைகை காட்டிய ஹைதராபாத் பாஜக வேட்பாளர்! அதிரடி காட்டிய போலீஸ்
- Lifestyle கண்களுக்குக் கீழே கருவளையம் உள்ளதா? அது உங்கள் அழகைக் கெடுக்கிறதா?
- Sports வேறு யாருக்கும் ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை.. தினேஷ் கார்த்திக் செய்த தவறு.. சுட்டிக்காட்டிய ரஸ்ஸல்!
- Technology மே 1 முதல் அமல்.. ICICI BANK-ன் புது ரூல்ஸ்.. IMPS உட்பட பல சேவைகளின் Service Charge-ல் திடீர் மாற்றம்!
- Movies கில்லி அளவுக்கு ’கோட்’ வந்தா நான் பினிஷ்.. வெங்கட் பிரபுவுக்கு ரசிகர்களின் ஒரே கோரிக்கை இதுதான்!
- Finance 2030-ல் 1 கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா? இப்பவே தங்கம் வாங்கணும்னா வாங்கிடுங்க!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ் மோட்டார்!
இங்கிலாந்தை சேர்ந்த பாரம்பரியம் மிக்க நார்ட்டன் பைக் நிறுவனத்தை டிவிஎஸ் மோட்டார் கையகப்படுத்தி உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நார்ட்டன் நிறுவனத்தை கையகப்படுத்தி இருப்பது உலக அளவில் ஆட்டோமொபைல் துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க பைக் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று நார்ட்டன். கடந்த 1898ம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாம் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் லேண்ட்ஸ்டவுன் என்பவரால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் தனது தனித்துவமான பைக் மாடல்கள் மூலமாக மேலை நாடுகளில் பிரபலமாக விளங்குகிறது.
இந்தியாவிலும் கைனெட்டிக் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து வர்த்தகத்தை துவங்குவதற்கான பணிகளில் நார்ட்டன் ஈடுபட்டு இருந்தது. இந்த நிலையில், திடீர் டிவிஸ்ட்டாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நார்ட்டன் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தி உள்ளது.
நார்ட்டன் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களை 16 மில்லியன் பவுண்ட்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.153 கோடி) விலை கொடுத்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வாங்கி இருக்கிறது.
நார்ட்டன் நிறுவனத்தை கையகப்படுத்தியது குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு குறிப்பிடுகையில்,"நார்ட்டன் நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களையும் தொடர்ந்து வேலையில் ஈடுபடுத்த உள்ளோம்.
MOST READ: பாலத்தின் படிக்கட்டுகளில் காரை ஏற்றி, இறக்கிய சாகசம் செய்த டிரைவர்
அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட 21 நாடுகளில் ஏற்கனவே நார்ட்டன் பைக்குகள் விற்பனையில் உள்ளன. அந்த நாடுகளில் வர்த்தகத்தை வலுவாக்குவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துவோம். மேலும், அதிக அளவில் ஆர்டர்களும் இந்த நாடுகளில் இருந்து உள்ளன. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு விரைவில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும்.
நார்ட்டன் நிறுவனத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும் அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். நார்ட்டன் நிறுவனத்தில் நிர்வாக பிரச்னைகள் இருந்தன. அவற்றையெல்லாம் சரிசெய்து, அடுத்த சில ஆண்டுகளில் அந்த நிறுவனத்தை சிறப்பான பாதைக்கு கொண்டு வருவோம்.
நார்ட்டன் நிறுவனத்திடம் 800சிசி மற்றும் அதற்கு மேலான ரக பைக் மாடல்கள் உள்ளன. வெவ்வேறு வாடிக்கையாளர் வட்டத்தை மனதில் வைத்து இந்த பைக்குகளை நிலைநிறுத்தி உள்ளோம். அதேநேரத்தில், பிஎம்டபிள்யூ நிறுவனத்துடனான கூட்டணி தொடர்ந்து வலுவாக இருக்கும். நார்ட்டன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் வட்டத்திற்கும், பிஎம்டபிள்யூ வாடிக்கையாளர்கள் வட்டமும் வெவ்வேறாக இருக்கின்றன," என்று கூறி இருக்கிறார்.
புராஜெக்ட் 303 பிட்கோ லிமிடேட் என்ற சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட புதிய துணை நிறுவனத்தை டிவிஎஸ் மோட்டார் ஸ்தாபித்தது. இந்த நிறுவனத்தின் கீழ்தான் நார்ட்டன் நிறுவனம் முழுமையாக ரொக்கம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.
நார்ட்டன் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான நிதி ஆலோசனைகளை ரோத்ஸ்சைல்டு அண்ட் கோ நிறுவனமும், சட்ட ரீதியிலான வழிகாட்டுதல்களை கைட்டன் அண்ட் கோ மறஅறும் ஸ்லாட்டர் அண்ட் மே ஆகிய நிறுவனங்கள் வழங்கி இருக்கின்றன.
இதனிடையே, நார்ட்டன் நிறுவனத்தின் கமாண்டோ, டாமினேட்டர், வி4 ஆர்ஆர் ஆகிய பிரிமீயம் பைக் மாடல்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. இந்த பைக் மாடல்களுடன் சர்வதேச அளவில் தனது வர்த்தகத்தை ஸ்திரமாக கொண்டு செல்ல டிவிஎஸ் மோட்டார் திட்டம் போட்டுள்ளது.
மேலும், நார்ட்டன் பைக்குகள் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்காக 500சிசி ரகத்திலான பைக் மாடல்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஏற்கனவே, பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் கூட்டணியில் பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்களையும், அதே பிளாட்ஃபார்மில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் மாடல்களையும் ஓசூரில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.
-
எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
-
சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
-
சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!