தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி: டிவிஎஸ் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நிதி வழங்க உள்ளதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி: டிவிஎஸ் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்குமான பணிகள் தமிழகத்தில் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதற்கு பெரிய அளவிலான நிதி ஆதாரம் தேவைப்படும். இதற்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தங்களால் முடிந்த தொகையை வழங்குமாறு தமிழக முதல்வர் பழனிச்சாமி அண்மையில் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி: டிவிஎஸ் அறிவிப்பு

இந்த வேண்டுகோளை அடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் கொரோனா எதிர்ப்பு நிதி முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார்ஸ் இருசக்கர வாகன நிறுவனமும் தனது பங்களிப்பாக ரூ.5 கோடியை பொது நிவாரண நிதிக்கு வழங்க இருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி: டிவிஎஸ் அறிவிப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சார்பில் சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வரும் சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ் மூலமாக இந்த நிதி தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி: டிவிஎஸ் அறிவிப்பு

மேலும், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி உள்ளடக்கிய டிவிஎஸ் குழுமம் பிரதமரின் பொது நிவாரண நிதிக்காக ரூ.25 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளது. மொத்தமாக ரூ.30 கோடியை கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை திட்டங்களுக்காக டிவிஎஸ் வழங்க உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி: டிவிஎஸ் அறிவிப்பு

இவை தவிர்த்து, 10 லட்சம் மாஸ்க்குகளை மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க உள்ளதாக டிவிஎஸ் தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழகத்தில் உள்ள நகராட்சிகளுக்கு கிருமி நாசினி தெளிப்பதற்கான வாகனங்களை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி: டிவிஎஸ் அறிவிப்பு

ஓசூர் மற்றும் சென்னை பாடியில் உள்ள தனது ஆலைகளின் கேண்டீன் மூலமாக உணவு பாக்கெட்டுகள் தயாரித்து அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை, மருத்துவத் துறை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி: டிவிஎஸ் அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்கு தேவையான கிருமி நாசினி வாகனத்தையும் வழங்கி இருப்பதாக அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கைகள் மூலமாக பெரிய அளவிலான தனது சமூக நலப் பங்களிப்புகளை இந்த தருணத்தில் டிவிஎஸ் மோட்டார் மற்றும் டிவிஎஸ் குழுமம் வழங்கி இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Motor Company has announced a contribution of Rs. 5 crore towards Tamil Nadu Chief Minister's Public Relief Fund to aid the battle against Coronavirus.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X