வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2020 ஜனவரி மாதத்திற்கான விற்பனை நிலவரம் வெளிவந்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதத்தில் மொத்தமாக 1,63,007 யூனிட் பைக்குகளை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2,28,654 டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்கள் விற்பனையான 2019 ஜனவரி மாதத்தை விட 28.71 சதவீதம் குறைவாகும்.

வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...

இந்த மொத்த எண்ணிக்கையில் ஸ்கூட்டர்கள் 72,383 எண்ணிக்கையையும், பைக்குகள் 94,367 யூனிட்கள் விற்பனையையும் கடந்த மாதத்தில் பதிவு செய்துள்ளன. இதுவே 2019 ஜனவரியில் 85,299 டிவிஎஸ் ஸ்கூட்டர் மாடல்களும், 1,11,252 டிவிஎஸ் பைக்குகளும் விற்பனையாகி இருந்தன.

வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...

மாடல்கள் வாரியாக பார்த்தோமேயானால், டிவிஎஸ் என்டார்க் மற்றும் ஸ்டார் சிட்டி மோட்டார்சைக்கிள்களை தவிர்த்து வேறெந்த டிவிஎஸ் மோட்டார்சைக்கிளும் கடந்த மாத விற்பனையில் வளர்ச்சியை சந்திக்கவில்லை.

வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...

தற்போது வெளியாகியுள்ள இந்த லிஸ்ட்டில் எக்ஸ்எல் சூப்பர் அதிகப்பட்சமாக 52,525 யூனிட்கள் விற்பனையாகி முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் 2019 ஜனவரி மாதத்தில் விற்பனையான 72,593 யூனிட்களை விட இந்த எண்ணிக்கை 27.64 சதவீதம் குறைவாகும்.

வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...

இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் டிவிஎஸ்-ன் ஸ்கூட்டர் மாடலான ஜூபிட்டர் 36,689 யூனிட்கள் விற்பனையுடன் உள்ளது. இந்த எண்ணிக்கை 51,300 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனையான 2019 ஜனவரி மாதத்தை விட 25.58% குறைவு.

வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...

மூன்றாவது இடத்தை 23,157 யூனிட்கள் விற்பனையுடன் அப்பாச்சி பைக் மாடல் பிடித்துள்ளது. இந்த பைக் மாடலும் 2019 ஜனவரியை காட்டிலும் 27% வீழ்ச்சியை நோக்கியே சென்றுள்ளது. நான்காவது இடத்தில் உள்ள என்டார்க் ஸ்கூட்டர் 20,644 யூனிட்கள் விற்பனையை கடந்த ஜனவரி மாதத்தில் பதிவு செய்துள்ளது.

வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...

கடந்த மாதத்தில் 2019 ஜனவரியை விட அதிகமான விற்பனை எண்ணிக்கையை பெற்ற சில டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்களில் என்டார்க் ஸ்கூட்டரும் ஒன்று. இந்த ஸ்கூட்டர் கடந்த ஆண்டு ஜனவரியில் 15,836 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது.

வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...

கடந்த மாதத்தில் 10,476 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்து டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ஐந்தாம் இடத்தில் உள்ளது. இந்த பைக் மாடலும் 2019 ஜனவரியை விட 3,456 பைக்குகள் அதிகமாக விற்பனையாகியுள்ளது.

வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் விற்பனையில் மிக பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்து ரேடியான், பெப்+, ஜெஸ்ட், ஸ்போர்ட், வேகோ, விக்டர் உள்ளிட்ட டிவிஎஸ் மோட்டர்சைக்கிள் மாடல்கள் உள்ளன. இதில் குறைந்த அளவில் விற்பனை சரிவை கண்ட டிவிஎஸ் பைக் மாடல் என்றால் அது ஜெஸ்ட் ஸ்கூட்டர் தான்.

வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...

கடந்த மாதத்தில் 3,050 ஜெஸ்ட் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. அதுவே 2019 ஜனவரியில் 5,039 ஜெஸ்ட் ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனையாகி இருந்தன. இதன்மூலம் இந்த டிவிஎஸ் மாடல் 39.47 சதவீத வீழ்ச்சியை அடைந்துள்ளது.

வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...

டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த 2020 ஜனவரி மாத விற்பனை லிஸ்ட்டில் கடைசி இடத்தி ல் வெறும் ஒரே ஒரு விற்பனை எண்ணிக்கையுடன் ஆர்ஆர்310 பைக் மாடல் உள்ளது. சமீபத்தில் பிஎஸ்6 தரத்தில் சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆர்ஆர்310-க்கு எக்ஸ்ஷோரூமில் ரூ.2.40 லட்சம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்களில் ஸ்டார் சிட்டி பைக் 23,883 என்ற எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த பைக் மாடலுக்கு வெளிநாட்டு சந்தைகளில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது போலும்.

வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...

ஏனெனில் வெறும் 13,144 யூனிட்கள் மட்டுமே கடந்த ஆண்டு ஜனவரியில் ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த பைக் தற்போது சுமார் 81.7 சதவீதம் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்களில் பெரும்பான்மையானவை விற்பனையில் வளர்ச்சியவே கண்டுள்ளன.

வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...

மொத்தமாக கடந்த ஜனவரி மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் 56,016 மோட்டார்சைக்கிள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 39,817 யூனிட்கள் ஏற்றுமதியான 2019 ஜனவரியை விட 16,199 யூனிட்கள், அதாவது 40.68 சதவீதம் அதிகமாகும்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Motors Jan 2020 sales Ntorq Star City to note positive sales
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X