ஐயர்ன் மேன், பிளாக் பேந்தர், கேப்டைன் அமெரிக்கா எது பிடிக்கும்? டிவிஎஸ் என்டார்க் புதிய தோற்றங்களில்

டிவிஎஸ் நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த ஸ்கூட்டர்களில் ஒன்றான என்டார்க் மாடலை சிறப்பு எடிசனில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஐயர்ன் மேன், பிளாக் பேந்தர், கேப்டைன் அமெரிக்கா எது உங்களுக்கு பிடிக்கும்... டிவிஎஸ் என்டார்க் புதிய தோற்றங்களில்!

டிவிஎஸ் நிறுவத்தின் புகழ்வாய்ந்த ஸ்கூட்டர்களில் என்டார்க் மாடலும் ஒன்று. இந்த ஸ்கூட்டரிலேயே ஸ்பெஷல் எடிசனை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விநோதமான தோற்றமுடைய என்டார்க் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஐயர்ன் மேன், பிளாக் பேந்தர், கேப்டைன் அமெரிக்கா எது உங்களுக்கு பிடிக்கும்... டிவிஎஸ் என்டார்க் புதிய தோற்றங்களில்!

இந்தியாவில் பண்டிகைக் காலம் நெருங்கி வர ஆரம்பித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவிக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், டிவிஎஸ் நிறுவனம் விநோதமான யுக்தியாக, ஸ்பெஷல் எடிசன்களை களமிறக்கியிருக்கின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர அது திட்டமிட்டிருக்கின்றது.

ஐயர்ன் மேன், பிளாக் பேந்தர், கேப்டைன் அமெரிக்கா எது உங்களுக்கு பிடிக்கும்... டிவிஎஸ் என்டார்க் புதிய தோற்றங்களில்!

ஐயர்ன் மேன், கேப்டைன் அமெரிக்க மற்றும் பிளாக் பேந்தர் ஆகிய ஹாலிவுட் திரைப்படங்களின் கதாபாத்திரங்களைக் கொண்டு இந்த ஸ்கூட்டருக்கு புதிய தோற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த புதிய தோற்றமுடைய என்டார்க் ஸ்கூட்டர்களுக்கு 'சூப்பர் ஸ்குவாட் எடிசன்' எனும் சிறப்பு பெயரை டிவிஎஸ் நிறுவனம் வைத்திருக்கின்றது.

ஐயர்ன் மேன், பிளாக் பேந்தர், கேப்டைன் அமெரிக்கா எது உங்களுக்கு பிடிக்கும்... டிவிஎஸ் என்டார்க் புதிய தோற்றங்களில்!

ஸ்கூட்டரின் முகப்பு, பக்கவாட்டு மற்றும் பின்பக்க பக்கவாட்டு பகுதி ஆகியவற்றில் சூப்பர் ஹீரோக்களின் சித்திரம் கொண்ட பேனல்கள் காணப்படுகின்றன. இதுவே, புதிய சூப்பர் ஸ்குவாட் எடிசனின் சிறப்பு வசதியாகும். இது தவிர வழக்கமான ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையில் தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்காக சிறப்பு எடிசன் ஸ்கூட்டரில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

ஐயர்ன் மேன், பிளாக் பேந்தர், கேப்டைன் அமெரிக்கா எது உங்களுக்கு பிடிக்கும்... டிவிஎஸ் என்டார்க் புதிய தோற்றங்களில்!

புதிய மாற்றங்களால் டிவிஎஸ் என்டார்க் ரேஸ் எடிசனாகவும் மாறியிருக்கின்றது. இதற்கேற்ப மிகவும் ஸ்டைலான எல்இடி ஹெட்லேம்ப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 12 இன்ச் டயமண்ட் கட்கள் கொண்ட அலாய் வீல், டிஸ்க் பிரேக், 3டி என்டார்க் முத்திரை, ஸ்பிளிட் கிராப் ரெயில், யுஎஸ்பி சார்ஜர், முழு டிஜிட்டல் திறனுடைய இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை இந்த ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றன.

ஐயர்ன் மேன், பிளாக் பேந்தர், கேப்டைன் அமெரிக்கா எது உங்களுக்கு பிடிக்கும்... டிவிஎஸ் என்டார்க் புதிய தோற்றங்களில்!

இதில், இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. இதில், ப்ளூடூத் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 60க்கும் மேற்பட்ட சிறப்பு வசதிகளை நம்மால் செல்போன் வாயிலாகவே பெற முடியும்.

ஐயர்ன் மேன், பிளாக் பேந்தர், கேப்டைன் அமெரிக்கா எது உங்களுக்கு பிடிக்கும்... டிவிஎஸ் என்டார்க் புதிய தோற்றங்களில்!

எஞ்ஜினைப் பொருத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆம், வழக்கமான என்டார்க் ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்படும் அதே எஞ்ஜின்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 124.8 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு எஞ்ஜினே இதில் காணப்படுகின்றது. இது அதிகபட்சமாக 9.25 எச்பி பவரையும், 10.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

ஐயர்ன் மேன், பிளாக் பேந்தர், கேப்டைன் அமெரிக்கா எது உங்களுக்கு பிடிக்கும்... டிவிஎஸ் என்டார்க் புதிய தோற்றங்களில்!

இந்த ஸ்கூட்டரில் சிறப்பான சஸ்பென்ஷன் வசதிக்காக முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ஷாப் அப்சார்பர்கள் ஹைட்ராலிக் டேம்பர்ஸுடன் பொருத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், தரமான பிரேக்கிங்கிற்காக முன்பக்க வீலில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பக்க வீலில் 130 மிமீ டிரம் பிரேக்கும் இணைக்கப்பட்டுள்ளது.

ஐயர்ன் மேன், பிளாக் பேந்தர், கேப்டைன் அமெரிக்கா எது உங்களுக்கு பிடிக்கும்... டிவிஎஸ் என்டார்க் புதிய தோற்றங்களில்!

அண்மையில் ஹீரோ நிறுவனம் ஸ்டீல்த் எடிசன் எனும் சிறப்பு எடிசன் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டருக்கு போட்டியாக புதிய டிவிஎஸ் என்டார்க் அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி, 125 சிசி திறனில் விற்பனையில் இருக்கும் பிற ஸ்கூட்டர்களான யமஹா ரேஇசட்ஆர் 125, அப்ரில்லா ஸ்டார்ம் 125 மற்றும் ஹோண்டா கிரேசியா உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கும் போட்டியாக அறிமுகமாகியுள்ளது.

ஐயர்ன் மேன், பிளாக் பேந்தர், கேப்டைன் அமெரிக்கா எது உங்களுக்கு பிடிக்கும்... டிவிஎஸ் என்டார்க் புதிய தோற்றங்களில்!

கொரோனா வைரசால் முடங்கிக் கிடந்த வாகன விற்பனைக் கடந்த சில நாட்களாகவே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இம்மாதிரியான வேலையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் சிறப்பு எடிசன் மற்றும் ஸ்பெஷல் சலுகை ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கான வேலையில் இறங்கியிருக்கின்றன. இந்த நிலையிலேயே தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம் புதிய சிறப்பு எடிசன் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS NTORQ 125 SuperSquad Edition Launched In India. Read In Tamil.
Story first published: Tuesday, October 20, 2020, 14:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X