கருப்பு-மஞ்சள் நிற கலவையில் புதிய அவதாரம் எடுக்கும் என்டார்க்125! விற்பனையை அதிகரிக்க டிவிஎஸ் அதிரடி

டிவிஎஸ் நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த ஸ்கூட்டர்களில் ஒன்றான என்டார்க் 125 மாடலின் ரேஸ் எடிசனில் புதிய நிறத் தேர்வை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருப்பு-மஞ்சள் நிற கலவையில் புதிய அவதாரம் எடுக்கும் என்டார்க்125... விற்பனையை அதிகரிக்க டிவிஎஸ் அதிரடி!

கொரோனா வைரஸ் பரவலால் ஒட்டுமொத்த இந்திய வாகனத்துறையுமே கடும் வீழ்ச்சியில் சிக்கி தவித்து வருகின்றது. அண்மைக் காலங்களாக பெருகி வரும் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் தங்களின் ஆடம்பர செலவுகளைக் குறைக்க ஆரம்பித்ததே இதற்கு முக்கிய காரணம் ஆகும். ஆம், கொரோனா வைரஸ் பிரச்னை தலையோங்க ஆரம்பித்த நாள் முதல் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

கருப்பு-மஞ்சள் நிற கலவையில் புதிய அவதாரம் எடுக்கும் என்டார்க்125... விற்பனையை அதிகரிக்க டிவிஎஸ் அதிரடி!

குறிப்பாக, வேலை பறிப்பு மற்றும் சம்பளம் குறைப்பு உள்ளிட்ட கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதனால், ஆடம்பர செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையில் அவர்கள் இறங்கியிருக்கின்றனர். குறிப்பாக, புதிய வாகனங்கள் வாங்கும் திட்டத்தைத் தள்ளி வைத்து வருகின்றனர். இதன் காரணமாக வாகன விற்பனை கடந்த காலங்களில் இல்லாத வகையில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

கருப்பு-மஞ்சள் நிற கலவையில் புதிய அவதாரம் எடுக்கும் என்டார்க்125... விற்பனையை அதிகரிக்க டிவிஎஸ் அதிரடி!

எனவே இந்த நிலையைச் சமாளிப்பதற்காக சுலபமான மாதத் தவனை, கடன் வசதி மற்றும் விலையில் தள்ளுபடி என பல்வேறு சலுகைகளை வாரி வழங்க ஆரம்பித்துள்ளன வாகன உற்பத்தி நிறுவனங்கள்.

கருப்பு-மஞ்சள் நிற கலவையில் புதிய அவதாரம் எடுக்கும் என்டார்க்125... விற்பனையை அதிகரிக்க டிவிஎஸ் அதிரடி!

இந்நிலையில், வாகன உற்பத்தி நிறுவனங்களின் இந்த யுக்தியை சற்று வித்தியாசமாக கையாளும் விதமாக புதிய நிறத் தேர்வின் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கருப்பு-மஞ்சள் நிற கலவையில் புதிய அவதாரம் எடுக்கும் என்டார்க்125... விற்பனையை அதிகரிக்க டிவிஎஸ் அதிரடி!

இதனடிப்படையில், அதன் புகழ்வாய்ந்த ஸ்கூட்டர்களில் ஒன்றான என்டார்க் 125 மாடலில் சிறப்பு தேர்வை அது அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் கருப்பு மற்றும் மஞ்சள் நிற கலவையில் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த புகைப்படத்தை டீம் பிஎச்பி எனும் தளம் வெளியிட்டுள்ளது.

கருப்பு-மஞ்சள் நிற கலவையில் புதிய அவதாரம் எடுக்கும் என்டார்க்125... விற்பனையை அதிகரிக்க டிவிஎஸ் அதிரடி!

புதிய நிறத்தேர்வில் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த ஸ்கூட்டர் ரேஸ் எடிசனில் களமிறக்கப்பட இருக்கின்றது. இதுவே இதன் சிறப்பாகும். நிற மாற்றத்தைத் தவிர வேறெந்த மாற்றமும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் செய்யப்படவில்லை. அதேசமயம், புதிய தோற்றம் காரணமாக இதன் விலை மட்டும் கணிசமாக உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

கருப்பு-மஞ்சள் நிற கலவையில் புதிய அவதாரம் எடுக்கும் என்டார்க்125... விற்பனையை அதிகரிக்க டிவிஎஸ் அதிரடி!

இந்த ஸ்கூட்டரை தயாரிக்கும் பணிகள் ஓசூரில் உள்ள டிவிஎஸ் உற்பத்தியாலையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, விரைவில் அவை டீலர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில், ஏற்கனவே எந்தெந்த டீலர்களுக்கு எத்தனை யூனிட்டுகள் அனுப்பி வைக்கப்படலாம் என்ற கணெக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கருப்பு-மஞ்சள் நிற கலவையில் புதிய அவதாரம் எடுக்கும் என்டார்க்125... விற்பனையை அதிகரிக்க டிவிஎஸ் அதிரடி!

எனவே, இன்னும் ஓரிரு வாரங்களில் புதிய நிறத்திலான டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன் அனைத்து ஷோரூம்களில் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மைக் காலங்களாக விற்பனையில் தொய்வைச் சந்தித்து வரும் இருசக்கர வாகன விற்பனை இதன் மூலம் கணிசமான உயர்வைப் பெறும் என நம்பப்படுகின்றது.

கருப்பு-மஞ்சள் நிற கலவையில் புதிய அவதாரம் எடுக்கும் என்டார்க்125... விற்பனையை அதிகரிக்க டிவிஎஸ் அதிரடி!

புதிய நிறத்தேர்வில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த ஸ்கூட்டர் ரூ. 74 ஆயிரத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஸ்கூட்டரில் 124.8 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் இடம்பெற இருக்கின்றது. இது, அதிகபட்சமாக 9.4 பிஎச்பி பவரை 7,000 ஆர்பிஎம்மிலும், 10.5 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டதாகும்.

கருப்பு-மஞ்சள் நிற கலவையில் புதிய அவதாரம் எடுக்கும் என்டார்க்125... விற்பனையை அதிகரிக்க டிவிஎஸ் அதிரடி!

இந்த எஞ்ஜின் பிஎஸ்6 தரத்திலாதனாகும். இதுமட்டுமின்றி இந்த ஸ்கூட்டரில் கூடுதல் சிறப்பு வசதியாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற இருக்கின்றது. இது புளூடூத் இணைப்பு வசதியைக் கொண்டதாகும். இதன் மூலம் செல்போனை இணைத்து பல்வேறு தகவல்களை நம்மால் பெற முடியும்.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS NTorq 125 Yellow-Black Race Edition. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X