டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

டிவிஎஸ் ரேடியான் பைக் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக் மாடல் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

பட்ஜெட் பைக் மார்க்கெட்டில் டிவிஎஸ் ரேடியான் 110 பைக் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த பைக் ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கின் மார்க்கெட்டை குறிவைத்து 110 சிசி எஞ்சினுடன் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கைவிட அதிக மதிப்பு வாய்ந்த மாடலாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சந்தைப்படுத்தி உள்ளது.

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

இந்த நிலையில், புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக டிவிஎஸ் ரேடியான் பைக் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 109.7சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. கார்புரேட்டருக்கு பதிலாக ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் இந்த எஞ்சின் வந்துள்ளது.

MOST READ: ரூ.1 லட்சத்தில் விற்கப்பட்ட டாடா நானோ மற்றும் சஃபாரி ஸ்ட்ரோம் கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

புதிய பிஎஸ்6 எஞ்சின் அதிகபட்சமாக 8.08 பிஎஸ் பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் எஞ்சின் பிஎஸ்4 மாடலைவிட 15 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 பைக் மாடலில் க்ரோம் அலங்காரத்துடன் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், பெட்ரோல் டேங்கில் தை பேடுகள், இரண்டு டயல்களுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளனன.

MOST READ: வாகனங்களுக்கு பெயிண்ட் அடித்து பழகும் போலீஸார்.. சேலம் காவல்துறையின் குசும்பு...

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

க்ரோம் க்ராஷ் கார்டு, க்ரோம் பூச்சுடன் சைலென்சர், க்ரோம் பூச்சுடன் கிராப் ரெயில் கைப்பிடிகளும் இதற்கு மதிப்பு சேர்க்கிறது. பிஎஸ்4 மாடலின் அம்சங்கள் அனைத்தும் தக்க வைக்கப்பட்டுள்ளன.

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடலானது ஸ்டான்டர்டு மற்றும் ஸ்பெஷல் எடிசன் என இரண்டு மாடல்களில் வர இருக்கிறது. இதில், ஸ்பெஷல் எடிசன் மாடல் விசேஷ வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

MOST READ: ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

ஸ்டான்டர்டு மாடலானது பியர்ல் ஒயிட், ராயல் பர்ப்புள், கோல்டன் பீஜ், மெட்டல் பிளாக், வல்கனோ ரெட் மற்றும் டைட்டானியம் க்ரே ஆகிய 6 வண்ணத் தேர்வுகளிலும், ஸ்பெஷல் எடிசன் மாடலானது க்ரோம் பிளாக் மற்றும் க்ரோம் ஒயிட் ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடலுக்கு ரூ.58,992 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்4 மாடலைவிட ரூ.8,632 கூடுதல் விலையில் வந்துள்ளது. 100 சிசி மற்றும் 110 சிசி சந்தையில் உள்ள ஹீரோ மற்றும் ஹோண்டா பைக் மாடல்களுக்கு இது போட்டியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Motor company has launched Radeon bike with BS6 compliant engine and priced at Rs.58,992 (Ex-showroom, Delhi).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X