டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடலின் முக்கிய அம்சங்கள் வெளியானது!

டிவிஎஸ் ரேடியான் பைக்கின் பிஎஸ்6 மாடல் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், அதன் முக்கிய அம்சங்கள் விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடலின் முக்கிய அம்சங்கள் வெளியானது!

பட்ஜெட் பைக் மார்க்கெட்டில் ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கிற்கு மிக நேரடி போட்டியாக நிலைநிறுத்தப்பட்ட மாடலாக டிவிஎஸ் ரேடியான் உள்ளது. டிசைன், விலை, தொழில்நுட்ப அம்சங்கள் என அனைத்துமே ஹீரோ ஸ்பிளென்டரை குறிவைத்து இருப்பதுடன், கூடுதல் செயல்திறன் மிக்கதாக நிறுத்தப்பட்டு இருப்பதால், ஊரக மார்க்கெட்டில் ஓரளவு நல்ல வரவேற்பை இந்த பைக் பெற்றிருக்கிறது.

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடலின் முக்கிய அம்சங்கள் வெளியானது!

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், அதற்கு தக்கவாறு மேம்படுத்தப்பட்ட எஞ்சினுடன் விரைவில் புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

MOST READ: நடிகர் விக்ரம்க்காக உருவாகிய மினி சொர்க்கம்.. அடேங்கப்பா இந்த வாகனத்துல இவ்ளோ வசதியா! நம்பவே முடியல!

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடலின் முக்கிய அம்சங்கள் வெளியானது!

டிவிஎஸ் ரேடியான் பைக்கில் 109.7 சிசி எஞ்சின் மாறுதல்களுடன் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் வரும் இந்த எஞ்சின், பிஎஸ்4 மாடலைவிட இந்த எஞ்சின் 15 சதவீதம் வரை கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடலின் முக்கிய அம்சங்கள் வெளியானது!

டிவிஎஸ் ரேடியான் பைக்கின் பிஎஸ்6 எஞ்சின் அதிகபட்சமாக 8.08 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்4 மாடலைவிட பவரை வெளிப்படுத்தும் திறன் மட்டும் சற்றே குறைந்துள்ளது.

MOST READ: சூப்பர்... 7 கோடி ரூபாய் காரை மனைவிக்கு பரிசளித்த கணவர்... எதற்காக என தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க...

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடலின் முக்கிய அம்சங்கள் வெளியானது!

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடலானது ஸ்டான்டர்டு மற்றும் கம்யூட்டர் பைக் ஆஃப் தி இயர் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில், இரண்டாவது வேரியண்ட்டானது லிமிடேட் எடிசன் மாடலாக இருக்கும்.

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடலின் முக்கிய அம்சங்கள் வெளியானது!

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 ஸ்டான்டர்டு வேரியண்ட்டானது பியர்ல் ஒயிட், ராயல் பர்ப்புள், கோல்டன் பீஜ், மெட்டல் பிளாக், வல்கனோ ரெட் மற்றும் டைட்டானியம் க்ரே ஆகிய வண்ணத் தேர்வுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. லிமிடேட் எடிசன் மாடலில் க்ரோம் பிரவுன் மற்றும் க்ரோம் பிளாக் ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகள் வழங்கப்படும்.

MOST READ: புதிய ஹூண்டாய் கார்களை ஆன்லைனில் வாங்கும் புதிய திட்டம் அறிமுகம்

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடலின் முக்கிய அம்சங்கள் வெளியானது!

கம்யூட்டர் பைக் ஆஃப் தி இயர் என்ற லிமிடேட் எடிசன் மாடலில் முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக், ஓட்டுபவர் தொடைகளுக்கு அதிக பிடிப்பை வழங்கும் பெட்ரோல் டேங்க் பேடுகள், பெட்ரோல் டேங்க் குஷன், பிரிமீயம் சீட், க்ரோம் ரியர் வியூ மிரர்கள் மற்றும் அழகிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் கிடைக்கும்.

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடலின் முக்கிய அம்சங்கள் வெளியானது!

இந்த பைக்கில் ஹாலஜன் பல்புகளுடன் ஹெட்லைட் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், லக்கேஜ் கேரியர் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருக்கும்.

MOST READ:எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் பிஎஸ்6 டீசல் மாடலும் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடலின் முக்கிய அம்சங்கள் வெளியானது!

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளுடன் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் டியூவல் ஷாக் அப்சார்பரும் இடம்பெர்ரஇருக்கும். ஸ்டான்டர்டு மாடலில் இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கும். அதேநேரத்தில், காம்பி பிரேக்கிங் சிஸ்டம் இரண்டு வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்பட உள்ளது.

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடலின் முக்கிய அம்சங்கள் வெளியானது!

புதிய டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடல் மிக விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலைவிட சில ஆயிரங்கள் கூடுதல் விலையில் புதிய பிஎஸ்6 மாடல் அறிமுகம் செய்யப்படும்.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Radeon BS6 motorcycle specs have been revealed ahead of launch by the company. The specs of the commuter motorcycle were revealed on the company's official website.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X