வெறும் 2 ஆண்டுகளில் 3 லட்ச ரேடியான் பைக்குகள் விற்பனை... இரு புதிய நிறங்களை கொண்டுவந்தது டிவிஎஸ்...

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ரேடியான் மோட்டார்சைக்கிளின் விற்பனையில் 3 லட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இதனை கொண்டாடும் விதமாக புதிய நிறத்தேர்வுகளை ரேடியான் பைக்கில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வெறும் 2 ஆண்டுகளில் 3 லட்ச ரேடியான் பைக்குகள் விற்பனை... இரு புதிய நிறங்களை கொண்டுவந்தது டிவிஎஸ்...

இந்த புதிய நிறத்தேர்வுகளில் அரசர்குரிய நீலம் மற்றும் க்ரோம் பர்பிள் என்ற இரு நிறங்கள் அடங்குகின்றன. இந்த புதிய நிற அமைப்புகளை தவிர்த்து பைக்கில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

வெறும் 2 ஆண்டுகளில் 3 லட்ச ரேடியான் பைக்குகள் விற்பனை... இரு புதிய நிறங்களை கொண்டுவந்தது டிவிஎஸ்...

சென்னையில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் டிவிஎஸ் நிறுவனம் 2018ல் முதன்முறையாக ரேடியான் அன்றாட பயன்பாட்டு மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. எளிமையான டிசைனினாலும், நேர்த்தியான தோற்றத்தினாலும் இந்த பைக்கிற்கு இளம் தலைமுறையினர் மற்றும் குடும்பஸ்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

வெறும் 2 ஆண்டுகளில் 3 லட்ச ரேடியான் பைக்குகள் விற்பனை... இரு புதிய நிறங்களை கொண்டுவந்தது டிவிஎஸ்...

விற்பனையில் ரேடியானின் புதிய சாதனை குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பயணிகள் மோட்டார்சைக்கிள்ஸ், ஸ்கூட்டர்ஸ் & கார்போரேட் பிராண்டின் துணை தலைவர் அனிருத்தா ஹால்டர் கருத்து தெரிவிக்கையில், டி.வி.எஸ் ரேடியனை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளுக்கு வரவேற்றுள்ளனர். அதன் சிறந்த அம்சங்கள் மற்றும் வலுவான வாடிக்கையாளர் மைய வடிவமைப்பு மூலம் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெறும் 2 ஆண்டுகளில் 3 லட்ச ரேடியான் பைக்குகள் விற்பனை... இரு புதிய நிறங்களை கொண்டுவந்தது டிவிஎஸ்...

இரண்டு புதிய வண்ணங்களும் நல்ல வரவேற்பைப் பெறும். "தக்காட்" பிரச்சாரம் விவேகமான மற்றும் முற்போக்கான குடும்பஸ்தர்களை ரேடியானின் இந்த விற்பனை பயணத்தில் ஈடுபடுத்தியது மட்டுமில்லாமல் டி.வி.எஸ் ரேடியனில் உள்ள ET-Fi தொழில்நுட்பம் முன்பை விட அதிக மைலேஜ் மற்றும் சிறந்த வறட்சியை எவ்வாறு வழங்குகிறது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

வெறும் 2 ஆண்டுகளில் 3 லட்ச ரேடியான் பைக்குகள் விற்பனை... இரு புதிய நிறங்களை கொண்டுவந்தது டிவிஎஸ்...

வாடிக்கையாளர் பேச்சுதான் ரேடியான் 'தக்காத்' பிரச்சாரத்தை ஊக்கப்படுத்தியது என தெரிவித்தார். டிவிஎஸ் ரேடியான் அடிப்படை எடிசன், ஆண்டிற்கான பயணிகள் பைக் மற்றும் டிஸ்க் ப்ரேக் உடன் ஆண்டிற்கான பயணிகள் பைக் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெறும் 2 ஆண்டுகளில் 3 லட்ச ரேடியான் பைக்குகள் விற்பனை... இரு புதிய நிறங்களை கொண்டுவந்தது டிவிஎஸ்...

இவற்றின் விலைகள் ரூ.59,942, ரூ.62,942 மற்றும் ரூ.65,942 என்ற அளவில் எக்ஸ்ஷோரூமில் உள்ளன. புதிய இரு நிறங்களுக்கு முன்னதாகவும் மொத்தம் ஆறு விதமான நிறங்களில் இந்த பைக் சந்தைப்படுத்தப்பட்டு வந்தது. இதற்கு கூடுதலாகதான் தற்போது புதியதாக இரு நிறங்கள் இணைந்துள்ளன.

வெறும் 2 ஆண்டுகளில் 3 லட்ச ரேடியான் பைக்குகள் விற்பனை... இரு புதிய நிறங்களை கொண்டுவந்தது டிவிஎஸ்...

டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மோட்டார்சைக்கிளில் 109.7சிசி ஃப்யூல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,350 ஆர்பிஎம்-ல் 8.08 பிஎச்பி மற்றும் 4,500 ஆர்பிஎம்-ல் 8.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

வெறும் 2 ஆண்டுகளில் 3 லட்ச ரேடியான் பைக்குகள் விற்பனை... இரு புதிய நிறங்களை கொண்டுவந்தது டிவிஎஸ்...

ரேடியான் மோட்டார்சைக்கிளில் முக்கிய அம்சங்களாக ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல் உடன் ஹாலோஜன் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் பின்புறத்தில் லக்கேஜ் வைப்பதற்கான ரேக் மற்றும் இரட்டை-பேட் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை பொருத்தப்படுகின்றன.

வெறும் 2 ஆண்டுகளில் 3 லட்ச ரேடியான் பைக்குகள் விற்பனை... இரு புதிய நிறங்களை கொண்டுவந்தது டிவிஎஸ்...

அதேநேரம் ‘ஆண்டிற்கான பயணிகள் பைக் எடிசன்' ஆனது கூடுதலாக முன்புறத்தில் டிஸ்க் ப்ரேக், பயண சவுகரியத்திற்கு பெட்ரோல் டேங்கில் பேட், பெட்ரோல் டேங்க் குஷின், ப்ரீமியம் தரத்தில் இருக்கை அமைப்பு, க்ரோம் பின்புறம் பார்க்கும் கண்ணாடிகள் மற்றும் புதிய கிராஃபிக்ஸ் போன்றவற்றையும் பெற்று வருகிறது.

வெறும் 2 ஆண்டுகளில் 3 லட்ச ரேடியான் பைக்குகள் விற்பனை... இரு புதிய நிறங்களை கொண்டுவந்தது டிவிஎஸ்...

ரேடியான் மோட்டார்சைக்கிள் விற்பனையில் இந்த புதிய மைல்கல்லை மிக விரைவாகவே இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாக அடைந்துள்ளது. எளிமையான தோற்றம் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு இதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Radeon New Colours Introduced To Celebrate New Sales Milestone: Over Three Lakh Units Sold. Read in Telugu.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X