பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரின் விலை அதிகரிப்பு.... அறிமுகம் எப்போது...?

டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து மிக விரைவில் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டர் சந்தைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இந்த பிஎஸ்6 ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் காணலாம்.

பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரின் விலை அதிகரிப்பு.... அறிமுகம் எப்போது...?

வெளியாகியுள்ள இந்த லேட்டஸ்ட் தகவலின்படி, ரூ.51,754-ஐ ஆரம்ப விலையாக பெற்றுள்ள பிஎஸ்6 ஸ்கூட்டி பெப் ப்ளஸ் மாடல் அதிகப்பட்சமாக ரூ.52,954 வரையில் (டாப் எடிசன்களான பாபேலிசியஸ் மற்றும் மேட்) விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த பிஎஸ்6 மாடலின் விலைகள் தற்போதைய பிஎஸ்4 மாடலை விட ரூ.6,400- ரூ.6,700 அதிகமாகும். இத்தகைய விலை ஏற்றத்திற்கு பின்பும் டிவிஎஸ் நிறுவனத்தின் மலிவான ஸ்கூட்டர் மாடலாக ஸ்கூட்டி பெப் ப்ளஸ் தான் விளங்கவுள்ளது.

பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரின் விலை அதிகரிப்பு.... அறிமுகம் எப்போது...?

ஆனால் என்ஜின் ஸ்கூட்டருக்கு வழங்கக்கூடிய ஆற்றல் அளவை அதிகரிக்கும் விதமாக இந்த என்ஜின் அமைப்பில் கார்புரேட்டருக்கு மாற்றாக ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக என்ஜின் 6,500 ஆர்பிஎம்-ல் 5 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்-ல் 5.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவுள்ளது.

பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரின் விலை அதிகரிப்பு.... அறிமுகம் எப்போது...?

90சிசி என்ஜினுடன் இந்திய சந்தையில் தற்சமயம் விற்பனையாகி வரும் ஒரே ஸ்கூட்டராக உள்ள டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் மாடலும் தற்போது அதே என்ஜினுடன் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுவிட்டது. இதிலிருந்து தயாரிப்பு மோட்டார்சைக்கிள்களின் என்ஜின் அளவுகளை இன்னும் சில வருடங்களுக்கு மாற்றும் எண்ணம் டிவிஎஸ் நிறுவனத்திடம் இல்லை என்பது தெரிய வருகிறது.

பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரின் விலை அதிகரிப்பு.... அறிமுகம் எப்போது...?

இந்திய சந்தையில் விற்பனையில் பெரும்பான்மையான ஸ்கூட்டர்கள் 110சிசி ஆகவும் 125சிசி ஆகவும் தான் உள்ளன. இதுவே இந்த 90சிசி ஸ்கூட்டருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது இதன் என்ஜினில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரின் விலை அதிகரிப்பு.... அறிமுகம் எப்போது...?

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டருக்கு நேரடியாக எந்த ஸ்கூட்டரும் போட்டியாக இல்லை. ஹீரோ நிறுவனத்தில் இருந்து பிஎஸ்6 தரத்தில் சமீபத்தில் வெளியான ப்ளசர் ப்ளஸ் 110 ஸ்கூட்டர் மட்டும் சிறிது போட்டியினை தருகிறது. இதன் விலை சந்தையில் பிஎஸ்6 ஸ்கூட்டி பெப் ப்ளஸை விட ரூ.3 ஆயிரம் அதிகமாக ரூ.54,800-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
BS6 TVS Scooty Pep Plus priced from Rs 51,754
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X