பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் மைலேஜ் 15 சதவீதம் அதிகரிப்பு... விலையும் 8 ஆயிரம் உயர்வு...

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிஎஸ்6 தரத்த்திற்கு அப்டேட் செய்யப்பட்ட ஸ்போர்ட் 110சிசி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய தலைமுறை மாடலை போன்று கிக் ஸ்டார்ட் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் என்ற இரு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள இந்த பிஎஸ்6 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.51,750 மற்றும் ரூ.58,925 ஆக உள்ளது.

பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் மைலேஜ் 15 சதவீதம் அதிகரிப்பு... விலையும் 8 ஆயிரம் உயர்வு...

இந்த விலைகள் இதன் பிஎஸ்4 மாடலை விட ரூ.8,017 அதிகமாகும். இந்த பிஎஸ்6 பைக் குறித்து டிவிஎஸ் நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், 2020 ஸ்போர்ட் 110 பைக் 15 சதவீத கூடுதல் மைலேஜ்ஜை வழங்கவல்லது. இந்த 2020 பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 109.7சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை, 99.7சிசி என்ஜினிற்கு மாற்றாக டிவிஎஸ் நிறுவனம் பொருத்தியுள்ளது.

பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் மைலேஜ் 15 சதவீதம் அதிகரிப்பு... விலையும் 8 ஆயிரம் உயர்வு...

இந்த என்ஜின் அமைப்பில் ஈக்கோ த்ரஸ்ட் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் தொழிற்நுட்பம் (ETFi) என்ற டிவிஎஸ் நிறுவனத்தின் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் தொழிற்நுப்டம் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8.29 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கும்.

பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் மைலேஜ் 15 சதவீதம் அதிகரிப்பு... விலையும் 8 ஆயிரம் உயர்வு...

வெள்ளை/பர்பில், கருப்பு/சிவப்பு மற்றும் வெள்ளை/சிவப்பு என்ற மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த 110சிசி பைக் மெர்குரி, க்ரே என்ற இரு மோனோ டோன் நிறங்களிலும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் மைலேஜ் 15 சதவீதம் அதிகரிப்பு... விலையும் 8 ஆயிரம் உயர்வு...

மற்றப்படி இந்த 2020 பைக்கில் வேறெந்த காஸ்மெட்டிக் மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இதனால் வழக்கமான கிராஃபிக்ஸ் உடன் எல்இஒடி டிஆர்எல்கள், அலாய் சக்கரங்கள், கருப்பு நிறத்தில் என்ஜின் மற்றும் பிளவுப்படாத இருக்கை உள்ளிட்டவற்றை அப்படியே பெற்றுள்ளது.

பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் மைலேஜ் 15 சதவீதம் அதிகரிப்பு... விலையும் 8 ஆயிரம் உயர்வு...

சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் ஆயில் டெலிஸ்கோபிக்-ஐயும், பின்புறத்தில் 5 விதமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஷாக் அப்சார்ப்பையும் கொண்டுள்ளது. இதேபோல் ப்ரேக்கிங் பணியையும், 130மிமீ மற்றும் 110மிமீ ட்ரம் ப்ரேக்குகள் தொடர்கின்றன.

பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் மைலேஜ் 15 சதவீதம் அதிகரிப்பு... விலையும் 8 ஆயிரம் உயர்வு...

இவை மட்டுமின்றி, 1950மிமீ நீளம், 705மிமீ அகலம் மற்றும் 1080மிமீ உயரம் உள்ளிட்ட பரிணாம அளவுகளிலும் எந்த மாற்றமும் இல்லை. இளைஞர்களை கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் மைலேஜ் 15 சதவீதம் அதிகரிப்பு... விலையும் 8 ஆயிரம் உயர்வு...

எலக்ட்ரிக் ஸ்டார்ட், ஃப்யூல்-கேஜ் மற்றும் எக்கோனோமீட்டர் உள்ளிட்ட தொழிற்நுட்பங்களை கொண்டுள்ள ஸ்போர்ட் 110சிசி பைக்கிற்கு 5 வருட உத்தரவாத காலத்தை டிவிஎஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த பைக்கிற்கு சந்தையில் போட்டி மாடல்களாக ஹீரோ எச்எஃப் டீலக்ஸ், ஹோண்டா சிடி 110 ட்ரீம் மற்றும் பஜாஜ் சிடி 100 உள்ளிட்டவை உள்ளன.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
BS6 TVS Sport Priced At Rs 51,750. Delivers 15% More Mileage
Story first published: Saturday, April 4, 2020, 17:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X