டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்-6 மாடலின் முக்கிய அம்சங்கள்

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்-6 மாடலின் முக்கிய அம்சங்கள்

பட்ஜெட் கிங்

இந்தியாவின் பட்ஜெட் பைக் மார்க்கெட்டில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சிறந்த டிசைன் அம்சங்கள், அதிக எரிபொருள் சிக்கனம், கரடுமுரடான சாலைகளிலும் பயன்பாட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்-6 மாடலின் முக்கிய அம்சங்கள்

எல்இடி ஹெட்லைட்

இந்த பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கில் செமி டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயனப்டுத்தப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்-6 மாடலின் முக்கிய அம்சங்கள்

பிஎஸ்-6 எஞ்சின்

இந்த நிலையில், புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் எஞ்சின் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்-6 மாடலில் 109 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்-6 மாடலின் முக்கிய அம்சங்கள்

செயல்திறன்

இந்த பைக்கின் எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின் செயல்திறனில் சிறிது குறைந்துள்ளது. ஏனெனில், பைக்கின் எடை 7 கிலோ அதிகரித்துள்ளதுடன், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்-6 மாடலின் முக்கிய அம்சங்கள்

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம்

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்-6 பைக்கில் ஈக்கோ த்ரஸ்ட் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் உள்ளது. இதனால், பைக்கின் எஞ்சின் 15 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். 10 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்-6 மாடலின் முக்கிய அம்சங்கள்

வேரியண்ட்டுகள் விபரம்

புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்-6 மாடலானது வண்ணத் தேர்வை பொறுத்து, இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த புதிய மாடலுக்கு ரூ.62,034 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்-6 மாடலின் முக்கிய அம்சங்கள்

யுஎஸ்பி சார்ஜர்

இதில், யுஎஸ்பி சார்ஜரும் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் 5 வே அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ரியர் சஸ்பென்ஷன் அமைப்பு, டியூவல் டோன் இருக்கை ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்-6 மாடலின் முக்கிய அம்சங்கள்

காம்பி பிரேக்கிங் சிஸ்டம்

இந்த பைக்கின் முன்சக்கரத்தில் 130 மிமீ அளவுடைய டிரம் பிரேக்கும், பின்சக்கரத்தில் 110 மிமீ அளவுடைய டிரம் பிரேக்கும் உள்ளன. இந்த பைக்கில் காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்-6 மாடலின் முக்கிய அம்சங்கள்

விலை விபரம்

ஒற்றை வண்ணம் மற்றும் இரட்டை வண்ணக் கலவையின் அடிப்படையில் இந்த வேரியண்ட்டுகள் வந்துள்ளன. இரட்டை வண்ணக் கலவை மாடலுக்கு ரூ.62,534 (ரூ.500 கூடுதல்) எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்-6 மாடலின் முக்கிய அம்சங்கள்

விலை வித்தியாசம்

பழைய பிஎஸ்-4 மாடலைவிட பிஎஸ்-6 பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.7,600 வரை உயர்ந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையாக மாறி இருக்கிறது. டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்-6 மாடலில் புதிய எல்இடி ஹெட்லைட்டுகள், வடிவமைப்பில் மாறுதல்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Motor Company has launched the BS6-compliant version of its Star City+ commuter motorcycle in the Indian market. The new TVS Star City+ BS6 model is offered with a starting price of Rs 62,034, ex-showroom (Delhi). Here are some important things to know about this new model in Tamil.
Story first published: Saturday, January 25, 2020, 14:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X