புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து மிக விரைவில் பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ள ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் டீசர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புதிய பைக் வருகிற 25ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

டிவிஎஸ் நிறுவனம் ஸ்டார் சிட்டி ப்ளஸ் மாடலின் ஸ்பெஷல் எடிசனை கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. இதன்பின் இந்நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்லது மோட்டார்சைக்கிள் தான் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என அனைவரும் நினைத்திருந்தனர்.

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

ஆனால் இதற்கிடையில் இந்த பிஎஸ்6 பைக் அறிமுகமாகவுள்ளது. டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக், இந்த பிஎஸ்6 அப்டேட்டால் சில காஸ்மெட்டிக் மாற்றங்களை பெற்றுள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய டீசரில் முதலில் பைக்கின் ஸ்கெட்ச் புகைப்படம் காட்டப்பட்டு, பின்பு ஹெட்லைட் எரியும் நிலையில் புதிய பிஎஸ்6 ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் முன்பகுதி காட்டப்படுகிறது.

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

மற்ற பாகங்கள் அனைத்தும் கருமையான பகுதிக்குள் மறைந்தே உள்ளன. இதனால் இந்த பிஎஸ்6 பைக் புதிய எல்இடி டிஆர்எல்களை பெற்றிருப்பது தெரிய வருகிறது. மற்ற பாகங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தற்போதைய மாடலில் உள்ள தோற்றத்தை தான் பெற்றிருக்கும் என தெரிகிறது.

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

ஹெட்லைட் மட்டுமின்றி பைக்கின் முன்பகுதியிலும் சில வேலைப்பாடுகள் நடைபெற்றுள்ளன. இதனால் பக்கவாட்டு பேனல்களில் சில கிராஃபிக்ஸ் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அதேபோல் இந்த பிஎஸ்6 பைக் புதிய, கூடுதல் சவுகரியமான இருக்கை மற்றும் எக்ஸாஸ்ட்டின் மேற்புறத்தில் க்ரோம் கவருடன் விற்பனை செய்யப்படலாம்.

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

தற்சமயம் விற்பனையாகி வரும் ஸ்டார் சிட்டி பைக் பெரிய க்ராப் ரெயில் மற்றும் ஸ்டைலிஷ் டெயில்-லைட் டிசைன் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது. இதில் டெயில் லைட் பிஎஸ்6 மாடலில் எல்இடி விளக்காக மாற்றப்படலாம். என்ஜின், அலாய் சக்கரங்கள் மற்றும் எக்ஸாஸ்ட் பைப் உள்ளிட்டவை தற்போதைய மாடலில் உள்ளதை போன்று கருப்பு நிற தீம்-ஐ தான் பெறவுள்ளன.

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

முன்புறத்தில் உள்ள டெலிஸ்கோப் ஆயில் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் உள்ள 5 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய, ஹைட்ராலிக் ஷாக் அப்சார்ப்ஸ் இந்த 2020 ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் ரைடிங்கை தொலைத்தூர பயணங்களிலும் சவுகரியமாக வைத்திருக்க உதவும்.

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

ப்ரேக்கிங் பணியை முன் சக்கரத்தில் 130 மிமீ ட்ரம்-மும், பின் சக்கரத்தில் 110 மிமீ ட்ரம்-மும் கவனிக்கின்றன. என்ஜினை பொறுத்தவரை இந்த புதிய பிஎஸ்6 மாடலில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. அதே சிங்கிள்-சிலிண்டர், 110சிசி என்ஜின் பிஎஸ்6 தரத்தில் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

பிஎஸ்4 தரத்தில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,000 ஆர்பிஎம்-ல் 8.3 பிஎச்பி பவரையும், 5,000 ஆர்பிஎம்-ல் 8.7 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்குகிறது. ட்ரான்ஸ்மிஷனிற்கு இந்த பைக்கில் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பிஎஸ்6 அப்டேட்டால் இதன் என்ஜினின் தரத்தில் சில மாறுதல்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

சிறந்த மைல்லேஜ் அளவுடன் இந்த புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் அறிமுகம் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத துவக்கத்தில் நிச்சயம் இருக்கும். இந்த பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் இதன் விற்பனையை அதிகரிக்கும் என்பது உறுதி. அறிமுகத்திற்கு பிறகு டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக், ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ, ஹோண்டா ட்ரீம் யுகா உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியிடவுள்ளது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Star City Plus BS6 Teaser Released: Launch On 25 January
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X