பிஎஸ்6 ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போது..? சூசகமாக பதிலளித்துள்ள டிவிஎஸ்

சென்னையை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டாரில் இருந்து விரைவில் பிஎஸ்6 ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டர் அறிமுகமாகவுள்ளது. இந்த செய்தி தற்போது இந்த புதிய 110சிசி ஸ்கூட்டரின் பெயர் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதின் மூலம் உறுதியாகியுள்ளது.

பிஎஸ்6 ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போது..? சூசகமாக பதிலளித்துள்ள டிவிஎஸ்

ரூ.6,000-லிருந்து ரூ.8,000 வரையில் விலை உயர்வை பெறவுள்ள 2020 டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 மாடலின் தற்போதைய வெர்சன் ரூ.52,525-ஐ எக்ஸ்ஷோரூமில் விலையாக கொண்டுள்ளது. டிசைனை பொறுத்தவரையில் தற்போதைய மாடலுடன் ஒத்து காணப்படவுள்ள இந்த பிஎஸ்6 ஸ்கூட்டர், எல்இடி டிஆர்எல் விளக்குகளுடன் ஹெட்லேம்ப் அமைப்பை பெறவுள்ளது.

பிஎஸ்6 ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போது..? சூசகமாக பதிலளித்துள்ள டிவிஎஸ்

இதனுடன் எல்இடியில் டெயில்லேம்ப், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் ட்யூல்-டோனில் இருக்கை உள்ளிட்டவற்றை தற்போதைய மாடலில் இருந்து அப்டேட்டாக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் மாடலின் தற்போதைய பிஎஸ்4 வெர்சன், டர்கைஸ் நீலம், பர்பிள், நீலம், கருப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு என்ற 6 விதமான நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிஎஸ்6 ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போது..? சூசகமாக பதிலளித்துள்ள டிவிஎஸ்

இவற்றுடன் புதிய ஸ்கூட்டி ஜெஸ்ட் மாடலுக்கு கூடுதலான பெயிண்ட் தேர்வுகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த 2020 ஸ்கூட்டர் மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 109சிசி என்ஜின் பொருத்தப்படவுள்ளது.

பிஎஸ்6 ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போது..? சூசகமாக பதிலளித்துள்ள டிவிஎஸ்

இதன் என்ஜின் அமைப்பில் புதியதாக ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் வழங்கப்பட்டுள்ளதால் இந்த என்ஜின் ஸ்கூட்டருக்கு வழங்கவுள்ள ஆற்றல் குறைந்திருக்கலாம். இந்த 109சிசி என்ஜின் பிஎஸ்4 தரத்தில் அதிகப்பட்சமாக 7.8 பிஎச்பி பவரையும், 8.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

பிஎஸ்6 ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போது..? சூசகமாக பதிலளித்துள்ள டிவிஎஸ்

சஸ்பென்ஷனிற்கு இந்த ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் முன்புறத்திலும், ஹைட்ராலிக் மோனோ-ஷாக் பின்புறத்திலும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியை இந்த ஸ்கூட்டரில் முன்புறம் மற்றும் பின்புறத்தில் முறையே 110மிமீ மற்றும் 130மிமீ ட்ரம் ப்ரேக்குகள் கவனிக்கின்றன.

பிஎஸ்6 ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போது..? சூசகமாக பதிலளித்துள்ள டிவிஎஸ்

ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டருடன் ரேடியான், ஸ்கூட்டி பெப் ப்ளஸ், அப்பாச்சி ஆர்டிஆர்180, அப்பாச்சி ஆர்ஆர்310 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களையும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தி வருகிறது. பிஎஸ்6 அப்டேட் பணிகளுக்கு இடையே இந்நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போது..? சூசகமாக பதிலளித்துள்ள டிவிஎஸ்

டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டர் மாடல் மகிழ்ச்சியான பயணத்திற்கு ஏற்ற வாகனமாகும். இதன் குறைவான எடை மற்றும் இருக்கைக்கு அடியில் கணிசமான அளவில் சேமிப்பிடம் உள்ளிட்டவைகளுடன் தற்போது பிஎஸ்6 தரத்திற்கு இந்த ஸ்கூட்டர் மேம்படுத்தப்பட்டுவிட்டதால், இளம் தலைமுறையினரை வெகுவாக கவரும் என்பது நிச்சயம்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS To Launch The BS6 Scooty Zest 110 Soon In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X